அபிஜித் நட்சத்திரம் Abhijit Nakshatra

7,860

வெற்றிக்கான முகூர்த்தநேரம் ( ஜித் = வெற்றி )

அபிஜித் நட்சத்திரம் பற்றி பல சர்ச்சைகள் இருக்கு புராதன காலத்தில் 28 நட்சத்திர இருந்தது அபிஜித் நட்சத்திரம் ஒன்று அப்படின்னு சொல்றாங்க.

அபிஜித் நட்சத்திரம் அது ஒரு சூட்சும நட்சத்திரம். அது மகரத்தில் இருக்கு உத்திராடம் 3 ஆம் பாதம் 4 ஆம் பாதம் மற்றும் திருவோணம் 1 ஆம் பாதம் பகுதிகள். இதுல மறைந்து இருக்கு. அது அபிஜித் நட்சத்திரம் அப்படின்னு சொல்லுவாங்க.

சில ஜோதிடர்கள் சில நபர்கள் உத்திராடம் 4ம் பாதம் திருவோணம் 1ஆம் பாதம் அபிஜித் மறைந்திருக்கும் சூட்சுமம் நட்சத்திர பாதங்கள் அப்படின்னு சொல்லுவாங்க.

இதில் உத்திராடம் 3 4 மற்றும் திருவோணம் 1 ஆம் பாதங்கள் எனலாம்.
அபிஜித் நட்சத்திரம் வரும் முகூர்த்த நேரம் ஒரு வெற்றிக்கான நேரம் அந்த நேரத்தில் செய்யக்கூடிய விஷயங்கள் வெற்றி பெரும் அப்படின்னு சொல்லப்படுது.

மாதத்தில் ஒரு நாள் உத்திராடம் நட்சத்திரம் வரும் அடுத்து திருவோணம் நட்சத்திரம் வரும். சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் 24 மணி நேரத்தில் இருந்து 27 மணி நேரம் வரை இருப்பார். Accurate ஆக கால்குலேட் செய்து உத்திராடம் நாளில் சந்திரன் 4 ஆம் பாதம் சஞ்சாரம் செய்யக்கூடிய டைமிங் கால்குலேட் செய்யலாம். திருவோணம் 1ஆம் பாதம் என்றால் accurate கால்குலேட் செய்யலாம் அதாவது 6 + 6 + 6 = 18 hrs.

சரி மாதத்தில் 12 மணிநேரம் மட்டும் தானா அந்த வாய்ப்பு அப்படின்னு பார்த்தா டெய்லி அபிஜித் நட்சத்திரம் உதயமாகும் முகூர்த்த நேரம் இருக்கு அப்படின்னு சொல்லப்படுது.

அது ஒரு சாரார் சூரியன் உச்சியில் வரும் நேரம் 11,30 am to 12,30 என சொல்பவர்களும் உண்டு.

12,00 pm to 01 pm அபிஜித் முகூர்த்த நேரம் என சொல்பவர்களும் உண்டு.

12,00 pm to 12,30 pm என சொல்பவர்களும் உண்டு.

இதுல 12,00 pm to 12,30 pm மேட்ச் ஆகும் எனலாம், சித்திரை மாதத்தில் (சூரியன் மேஷம் உச்சம் கத்தரி வெயில் ) 12,00 pm to 01,00 pm வரை எனலாம்.

நான் அறிந்த வரை ஆணித்தரமாக சொல்வது.

விதியை மதியை மீறி பரிகாரம் மேலும் இந்த சிறப்பான முகூர்த்த நேரங்கள் இவையெல்லாம் பலன் தராது என்பது.

ஓகே பெரியவங்க மிகப் பெரிய அறிவாளிகள் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு குழந்தை அதாவது மனித உயிர் ஜனனம். அந்த குழந்தையோட விதி அமைப்பு ( 12 கட்டங்கள் ) மதி அமைப்பு ( திசா புத்தி ) சிறப்பாக இருக்கோ இல்லையோ, ஒருவேளை சிறப்பாக இல்லை என்றால் செய்யக்கூடிய எல்லா விஷயங்களுமே சிறப்பான முகூர்த்த நேரம் சிறப்பான நாட்கள் தேர்ந்தெடுத்து செய்யும்போது தலையெழுத்து மாற வாய்ப்பிருக்கு.

பல நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் அவர்களோடு ஆசிர்வாதத்தோடு செய்யக்கூடிய ஒரு விஷயங்கள் சுப முகூர்த்த தினங்களில் சுப முகூர்த்த நேரங்களில் தலையெழுத்தை மாற்ற வாய்ப்பு இருக்கு. ஆசிர்வாதம் என்ற மிகப்பெரிய ஒரு கான்செப்ட் பற்றி சொல்லி இருக்காங்க.

ஓகே அபிஜித் என்ற நட்சத்திரம் புராதன காலத்தில் இருந்ததா? பிறகு மறைந்து சூட்சமமாக இருக்கா? இல்லை அபிஜித் நட்சத்திர கூட்டம் அழிஞ்சு போச்சா? ஜோதிட ரீதியாக பார்க்கலாம்.

ஓகே ஜாதகம் எடுங்க, மகரத்தில் உத்திராடம் 3 4 ஆம் பாதம் மற்றும் திருவோணம் 1 ல் 9 கிரகங்களில் ஏதேனும் கிரகங்கள் அமர்ந்துள்ளனவா? காணவும்.

பிறந்த திதியும் இங்கு முக்கியம் (திதி சூனியம் ஆகும் ராசிகள் திதி சூனியத்தில் லக்ன சுப கிரகங்கள் பலம் இழக்கும் லக்ன அசுப கிரகங்கள் வக்கிரம் நீசம் அஸ்தங்கம் பெற்ற கிரகங்கள் மேலும் ராகு கேது போன்ற வக்ர நிலை கிரகங்கள் சுப பலன்களைத் தரும் அப்படின்னு ஒரு பேசிக் கான்செப்ட் இருக்கு).

எந்த லக்கினம் என்பது முக்கியம் ( காரணம் கேந்திரம் திரிகோணம் பாவங்கள் கணக்கிடவேண்டும் திரிகோணத்தில் அமர்ந்த கிரகங்கள் சுப பலனை தரும், கேந்திரத்தில் அமர்ந்த கிரகங்கள் கேந்திராதிபத்திய தோஷத்தால் சுப கிரகங்கள் அசுப பலனை தரும் அசுப கிரகங்கள் சுப பலனை தரும் அப்படின்னு ஒரு basic கான்செப்ட் இருக்கு ).

அந்த கிரகங்கள் குறிக்கக்கூடிய கிரக காரகங்கள் அந்த கிரகம் குறிக்கக் கூடிய ஆதிபத்தியம் அதாவது பாவகாரகங்கள் பலம் இழந்து உள்ளனவா? தெரிஞ்சிக்கலாம்.
கண்டிப்பாக பலம் இழந்து இருக்கும்.
இது அபிஜித் நட்சத்திரம் சூட்சமாக மறைந்து உள்ளதா? இல்லை அழிக்கபட்டதா என்பதை அறிய உதவும்.
பெரியவர்களின் ஞானம் ஆய்வு பிரம்மிப்புக்கு உரியது என்பதை இந்த விஷயத்தில் மேலும் உரைக்கிறேன் அறிகிறேன்.

தேவையற்ற இடைசெருகல்கள் உல்டா கதைகள் ஜோதிடம் என்ற அறிவியலை அனுமானமா? அறிவியலா? என சிந்திக்க வைக்கிறது என்பதையும் இங்கு வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

குறிப்பு:
இது அடிப்படை ஜோதிட பலன் ஆய்வு மட்டுமே, கேபி அட்வான்ஸ் வரை 30 வினாடி ( பிறந்த நேரம் ) வரை துல்லியமாக ஒவ்வொரு நபரின் விதி மதி கணிக்கப்படும் துல்லிய பலன்கள் இல்லை என இங்க மென்ஷன் செய்கிறேன்.
ஆராயலாம் தொடர்ந்து.
ஒரு நட்சத்திரம் ( கூட்டம் ) 13.20 பாகை / ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதமாக பிரிக்கப்பட்டுள்ளது / 3.20 பாகை ஒரு நட்சத்திரம் பாதம் ( ஒரு கூட்டத்தின் டிவிசின் ).

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More