உங்கள் காதல் வெற்றி பெறுமா?
Astrology Rules for Love Success
ஜோதிட ரீதியாக காதல் வெற்றி பெற விதிகள் என்ன?
காதல் அனைத்து உயிர்களிலும் உண்டு.இவர் நமக்கு வாழ்க்கை துணையாக வர மாட்டாரா என எல்லோரும் ஏங்கி இருப்போம். பருவ வயதில் அனைவருக்கும் ஏதாவது ஒரு எதிர்பாலினத்தவரிடம் கண்டிப்பாக காதல் மலர்ந்து இருக்கும்.
காதல் ஒரு இனம்புரியாத இன்பமயமான உணர்வு. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் இனிமை.
அவளும் நோக்கினாள் அவனும் நோக்கினான். (ராமன், சீதை). தமிழ் கடவுள் முருகனே காதல் திருமணம் செய்தவர் தானே. தெய்வங்களையும் விட்டுவைக்கவில்லை இந்த காதல்.
காதலின் அடுத்த கட்ட நகர்வு திருமணம்.
ஆண் பெண் இருவருடைய ஜாதகத்திலும் லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஏழாம் அதிபதி, சந்திரன், சுக்கிரன் நன்றாக வலுப்பெற்று சுபர் பார்வை யில் இருக்க காதல் வெற்றி பெறும் .
பொதுவாக பருவ வயதில் வரும் ராகு தசையும், சுக்கிர தசையும் இயற்கையிலேயே காதல் எண்ணங்களை தோற்றுவிக்கும்.
சுக்கிரன் ஒருவருக்கு வலுவாக இருந்தால் இயற்கையிலேயே காதல் எண்ணம் மேலோங்கும். காதல் மன்னன் ஆகவே அவர் காணப்படுவார். அதேநேரத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் மட்டுமே காதல் ஜெயித்து விடாது.
மன உறுதியை குறிக்கும் சந்திரனும் வலுவாக இருக்க வேண்டும். எந்த ஒரு பலனும் லக்கினத்தை அடிப்படையாக வைத்தே என்பதால் லக்னம், லக்னாதிபதி வலுப்பெற வேண்டும்.
ஏழில் ராகு + செவ் அல்லது ராகு + சுக்ரன் அமைந்து குரு பார்த்து அந்த திசை நடப்பில் இருந்தால் காதல் கைகூடும்.
7ல் இருக்கும் பாவகிரகங்கள் கலப்பு அல்லது காதல் திருமணத்தை உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் எப்பேர்பட்ட நேரத்திலும் காதலர்கள் கைபிடிக்க மன உறுதி வேண்டும். பிரச்சனை வந்தால் எதிர்கொள்ள செவ்வாயும் பலமாக இருக்க வேண்டும்.
Comments are closed.