முதலில் இந்த பிரச்சனையை மிக நல்ல முறையில் சிறப்பாக கையாண்ட இந்திய தமிழக அரசுகளுக்கு முதலில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக தமிழ்நாடு இதில் சிறப்பாகவே பணியாற்றி வந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வருபவர்களை ஏர்போட்டில் மடக்கி அவர்களுக்கு சோதனை செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்தி, அவர்களின் போன் நம்பர்களை பெற்று அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது செய்யப்படுவது , ஒருநாள் சுய ஊரடங்கு உத்தரவை மிக மதித்து அரசுக்கு சப்போர்ட் செய்ததில் தமிழகம் மிகச் சிறப்பாகவே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்துள்ளது என்றால் அது மிகையில்லை..
பல நண்பர்கள் போனிலும், இன்பாக்ஸிலும் இந்த கொரனா அச்சுறுத்தல் எப்போது நீங்கும் என்று பலரும் என்னை கேள்வி கேட்ட நிலையில் முக்கியமாக இந்த பதிவு.
முதலில் ஆற்காடு கா,வே, சீதாராமையர் வாக்கிய பஞ்சாங்கத்தில் லாவண்யா பதிப்பகம் வைரஸ் பரவுவதை முன்கூட்டியே கணித்ததை நான் இங்கு நினைவு கூறுகிறேன். அந்த பஞ்சாங்கம் நாட்டில் ஒரு புதிய வைரஸ் வேகமாக பரவும். வணிக நிறுவனங்கள் ஹோட்டல்கள் மூடப்படும் என்று மிகச் சரியாக கணித்ததை நான் நான் இங்கு நினைவு கூற கடமைபட்டுள்ளேன்.
பொதுவாக இந்தப் பஞ்சாங்கம் சரி. அந்த பஞ்சாங்கம் சரி என்று ஆளாளுக்கு சண்டை போட்டுக் கொள்வதை நான் விரும்புவதில்லை. யாருக்கு எந்த பஞ்சாங்கம் நடைமுறையில் அனுபவத்தில் சரியாக வருகிறதோ அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும்.
நான் இரண்டு பஞ்சாங்கங்களையும் வைத்துள்ளேன். வாக்கிய பஞ்சாங்கத்தில் முகூர்த்த நேரங்கள் மிகச் சிறப்பாக கணிக்கப்பட்டுள்ளன. தினசரி கிரக நிலைகளையும் வாக்கியப்படி மிகச் சிறப்பாகவே கணித்துள்ளனர். எனவே நான் முகூர்த்தம் குறிப்பதற்கு வாக்கியபஞ்சாங்கங்களையே பயன்படுத்துகிறேன்.எனக்கு இரண்டு பஞ்சாங்கங்களும் இரண்டு கண்களை போன்றது. இதே பஞ்சாங்கம் தான் சென்னை நீரில் மிதக்கும் என்று மிகச் சரியாகக் கணித்தது.
சார்வரி வருடத்திய வெண்பா என்ன சொல்லுது அப்டின்னு பார்த்தோமுன்னா
“சார்வரி ஆண்டதனில் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள்.மாரியில்லை
பூமி விளைவில்லாமல் புத்திரரும் மற்றவரும் ஏமமின்றி சாவார் இயம்பு”
சாதி, மதம், ஏழை ,பணக்காரன் , நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு இல்லாமல் கிராமம் ,நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் உலகம் முழுவதும் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று இந்த சார்வரி வருடத்திய வெண்பா நமக்கு முன்கூட்டியே அறிவித்தது.
இந்த பிரச்சினை எப்போது தீரும் என்று பார்த்தோமானால் ஏற்கனவே பலரும் சொன்னதுபோல கால புருஷனின் லக்னாதிபதி ஆகிய செவ்வாய் உச்சம் பெறுவதால் வரக்கூடிய எல்லா பிரச்சனைகளையும் இன்றிலிருந்து நாம் சமாளித்துக் கொள்ள முடியும். மருத்துவ காரகன் செவ்வாய் உச்சம் ஆவதால் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும்.. அரசாங்கம் இந்த பிரச்சனையில் மிக தீவிரமாக செயல்பட்டு பல கட்டுப்பாடுகளை விதித்து இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வருவார்கள்.
சரி இது எப்போது முடிவுக்கு வரும் என்று பார்த்தோமானால் இந்த வைரஸ்ஸால்
எதிர்காலத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று பார்த்தோமானால் இந்த நோய் முற்றிலும் குணமாக கூடிய காலத்தையும் நாம் கணிக்க முடியும்.
இந்த நோயால் வரக்கூடிய மிக முக்கிய பிரச்சனை பொருளாதார இழப்பு. வேலை இழப்பு. அதனால் கையில் காசு இல்லாமல் மக்கள் படும் திண்டாட்டம். பங்குத் தந்தைகள் சரிவு. கடுமையான விலைவாசி உயர்வு. இதெல்லாம் இந்த கொரனா வைரஸால் நமக்கு ஏற்பட்ட பின் விளைவுகள்.
பொருளாதாரம் எப்போது சரியாகும் என்று கணித்தோமானால் இந்த நோய் எப்போது சரியாகும் கட்டுக்குள் வரும் என்று கணித்து விடலாம். பொருளாதாரத்துக்கு மிக முக்கிய காரண கிரகம் குரு பகவான். குரு பகவான் பங்குனி மாதம் 16ஆம் தேதி சரியான ஆங்கிலம் 29.3.2020 முதல் ஆனி மாதம் 15 ஆம் தேதி வரை (29.6.2020)மகர ராசியில் சஞ்சாரம் செய்வார்.
இந்த காலகட்டத்தில் குரு பகவான் நீசம் பெற்று சனிபகவான் மற்றும் செவ்வாய் பகவானுடன் இணைந்து சஞ்சாரம் செய்யும் இந்த காலகட்டங்களில் குருபகவான் கடுமையாக பாதிக்கப்படுவர். அதன் மூலம் ஒட்டுமொத்த உலகத்தின் பொருளாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்.
அதுவும் குறிப்பாக குரு பகவான் செவ்வாய் சனியுடன் இணைந்துசஞ்சாரம் செய்யும் காலங்களில் மட்டுமே அதிகமான பொருளாதார இழப்பு, வேலை இழப்பு, பணப்பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் போன்ற தொல்லைகள் இருக்கும். அரசாங்கமே இலவச அரிசி, பண உதவி செய்யும்.
செவ்வாய் பகவான் கும்பத்திற்கு சென்றவுடன் இந்த நிலமை படிப்படியாக குறையும். செவ்வாய் பகவான் கும்பத்துக்கு சென்றவுடன் குரு பகவான் சனியுடன் மட்டும் இணைந்து சஞ்சாரம் செய்வார் . அப்போது சனியும் குருவும் இருவரும் ஓரளவு வலிமையோடு இருப்பர். அப்போது முதல் பொருளாதாரம் நல்ல முறையில் இயங்க ஆரம்பிக்கும். எனவே செவ்வாய் கும்பத்திற்கு செல்ல வேண்டும்.
எனவே செவ்வாய் கும்பத்திற்கு செல்லக்கூடிய காலமான மே மாதம் 4-ஆம் தேதிக்குப் பிறகு உலகப் பொருளாதாரம் மேம்படும். அதன் பிறகு கொரனா வைரஸ் நல்ல முறையில் கட்டுப்படுத்த பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவர்.
ஆனி மாதம் 15 ந்தேதிக்கு பிறகு மக்கள் சந்தோஷமாக நிம்மதியாக இருப்பார்கள்.29.6.2020 க்கு பிறகு கொரானா வைரஸ் இருக்கவே இருக்காது என்பது எனது தனிப்பட்ட ஜோதிட கணிப்பு ஆகும்.