ஏழரைச்சனி ,அஷ்டம சனிசனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் வாக்கியப்படி 26 டிசம்பர் 2020 திருக்கணிதப்படி 24 ஜனவரி 2020

ஏழரை 71/2 ,அட்டம சனியில் தொழில் துவங்கலாமா?

(Private job வேலை செய்து கொண்டு இருப்பவர்கள் Service work).

இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு தொழில் செய்து ஜீவிதம் செய்கிறோம்.

அரசு வேலை என்றால் Life safety. ஆனால் வளர்ச்சி பெரிய அளவில் ஈராது.

அரசு வேலையில் இருந்தாலும் சிலர் ஏதாவது சுய தொழில் செய்ய ஆசைடுகின்றனர். ஆனால் எல்லோராலும் அம்பானியாக முடியாது.

1, 2, 5, 9, 10, 11 வலுப்பெற்றவர்கள் சொந்த தொழில் செய்யலாம்.

Middle classல் வாழ்பவரே நம் நாட்டில் அதிகம்.

படித்து முடித்த பின் கை நிறைய சம்பளத்துடன் வேலை. பின் திருமணம், குடும்பம், பிள்ளைக்கு சேர்த்து வைக்க ஓட்டம். இது தான் Middle class life.

படித்து முடித்த பின் பணியில் சேரும் போது நல்ல தசா புத்தியுடன், கோட்சாரமும் நன்றாக இருந்திருக்கும்.

சில வருடங்களில் 71/2, அட்டம சனி நடக்கும் காலத்தில் பணி சுமை அதிகம், வேலை பார்க்குமிடத்தில் அவமானபடுவது, மேலதிகாரியின் தொல்லை, Target pressure, பணி மாற்றம் அதில் திருப்தியில்லை என்ற காரணத்தினால் வேலை போகும் அல்லது ராஜினாமா செய்ய நேரிடும்.

71/2, அட்டம சனியில் நிச்சியம் இடமாற்றம் ஏற்படும்.

இதுவரை தான் செய்த தொழிலில் கிடைத்த அனுபவத்தை வைத்து இக்காலகட்டத்தில் சொந்த தொழில் செய்ய ஆசை உண்டாகும்.

அந் நேரத்தில் விறைப்பாக நான் இவ்வளவு நாள் இந்த கம்பெனிக்கு மாடாக உழைத்திருக்கிறேன் என்னிடம் திறமை இருக்கிறது என சொல்லி கிடைத்த அனுபவத்தை கொண்டு தனியாக சுய தொழில் செய்வர்.

தொழிலில் மந்த நிலை காணப்படும்.

ஜாதகத்தில் தசா புத்தியும் மோசமாக இருந்தால் குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாகிவிடும்.

நல்ல தசா புத்தி இருந்தாலும் 71/2 ல், அட்டம சனியில் மந்தம் உண்டாகும்.

71/2, அட்டம சனி விதிவிலக்கு நல்ல தசா புத்தியிலும்.

எனவே தொழிலில் பழுத்த அனுபவம் பெற்றிருந்தாலும் அக்காலட்டத்தில் அடக்கி வாசிப்பது நன்று.

கிடைத்த வேலை செய்வது, முதலிடு இன்றி தொழில் (brokerage) செய்வது இந்த காலகட்டத்தில் நல்லது.

ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வதோ, புதிய கிளைகள் தொடங்குவதோ நிச்சியம் கூடாது.

குறிப்பாக விரைய சனி நடைபெறும் கூடவே கூடாது.விரய சனியில் விரையத்தை கொடுத்து ஜென்ம சனியில் திக்குமுக்காட வைத்துவிடும்.

நல்ல யோக திசை நடப்பவர்கள் குறைந்த அளவு முதலீட்டில் கையை கடிக்காதவாறு சிறு முதலீடு செய்யலாம். மற்றவர்கள் நிச்சியமாக கூடாது.

Investment செய்தால் நஷ்டமாகி விடும். கவனம்.

ஓம் நமசிவாய

Blog at WordPress.com.

%d bloggers like this: