ஒருவருக்கு வேலையில் இடமாற்றம் எப்பொழுது ஏற்படும்?

2,022

அரசு பணியில் உள்ளோருக்கு இடமாற்றம் என்பது அடிக்கடி நிகழும்.

தன் குடும்ப உறவுகளை பிரிந்து திடீரென ஏற்படும் பணி மாற்றம் மன அளவில் பிரச்சினையைக் கொடுக்கும்.

அதுபோல் வேலையில் இருப்பவர்கள் சிலர் வேண்டாவெறுப்பாக வெளியூரில் வேலை பார்க்கும் நிர்பந்தம் ஏற்படும்.

பொதுவாக மறைவு ஸ்தானம் எனப்படும் மூன்றாம் இடம், எட்டாம் இடம், 12-ஆம் இடம் இந்த இடத்தின் திசாபுத்திகள் நடைமுறையில் வரும்போது வெளியூரிலோ, வெளிமாநிலத்திலோ, வெளிநாட்டிலோ போன்ற இடங்களில் பணிபுரியும் வாய்ப்பு அமையும்.

அதுபோல் ராகு 6, 8, 12ம் இட அதிபர்களின் நட்சத்திர சாரம் வாங்கி 8, 12ஆம் இடங்களில் இருக்கும் போது ராகு திசை, புத்தி வந்தால் நிச்சயமாக இடமாற்றம் ஏற்படும். குரு பார்வை இருந்தால் வெளிநாட்டு தொடர்பு ஏற்படும்.

பொதுவாக ராகு 8, 12 ஆம் இடங்களில் தொடர்பு கொண்டு சுபகிரக பார்வையில், சேர்க்கையில் இருந்தால் வெளிநாட்டிலோ அல்லது வெளி மாநிலத்தில் சென்று பிழைக்கும் நிலையை கொடுக்கும்.

அதுபோல் நன்றாக கூறும் கூர்ந்து கவனித்துப் பாருங்கள்.

ராசிக்கு 12-ம் இடமான சனி விரையத்தில் வரும்போது (71/2) தொழிலில் நிச்சயம் இடமாற்றம் அதாவது பணி செய்து கொண்டிருக்கும் இடத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை காரணமாக இடமாற்றம் ஏற்படும்.

அதுபோல் அஷ்டமசனி காலகட்டங்களிலும் இடமாற்றம், தொழில் மாற்றம் நிச்சயம் உண்டு.

இந்த மாதிரியான காலகட்டங்களில் ஏற்படும் இடமாற்றம், தொழில் மாற்றம் நல்ல பலனை கொடுப்பதில்லை.

பொதுவாக ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கும் போது 8 12-க்குடைய திசைகள், புக்திகள் நடந்தால் வெளியூரிலோ அல்லது வெளிமாநிலத்திலோ் அல்லது வெளிநாட்டிலோ வேலை சார்ந்த பணி அமையும்.

சிலரை நாம் பார்த்திருக்கலாம்.

வெளிநாடு சென்று இருப்பார்கள். ஆனால் உடனே வேலை பிடிக்கவில்லை என்று உடனே கிளம்பி தாய் நாட்டிற்கு வந்து விடுவார்.

இவர்களின் ஜாதகத்தை நன்கு உற்று கவனித்தால் ஏதாவது அந்தரம் மட்டுமே அந்த நேரத்தில் செயல்பட்டிருக்கும்.

வெளிநாட்டிற்குச் சென்று இரண்டு, மூன்று மாதங்கள் கூட இருக்காமல், வேலை பிடிக்காமல் திரும்பி வருவதால் பயண செலவுகள், வெளிநாட்டில் தங்கியதால் ஏற்பட்ட செலவுகள், ஏஜென்ட்டுக்கு கமிஷனாக கொடுத்த பணம் என கணிசமான ஒரு தொகை நிச்சயம் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

தசாபுத்தியை அறிந்து அதற்கேற்றபடி வெளிநாட்டு வேலையை அமைத்துக் கொள்வது சிறந்தது.

சமீபத்தில் என் உறவினரின் மகனுக்கு திருமணம் நடந்தது.

திருமணமாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே இங்கு இருந்தார்.

ஒரு மாதம் கழித்து வெளிநாட்டிற்குச் சென்ற அவர் வேலை வேண்டாம் என எழுதிக் கொடுத்துவிட்டார்.

தீபாவளிக்கு சொந்த ஊர் திரும்புகிறார்.

ஆதலால் தசாபுத்தியை அனுசரித்து அதற்கேற்றபடி வேலையை தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும் . இல்லையென்றால் பணவிரயம், மன விரயம் ஏற்படும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More