ஏழரைச்சனி ,அஷ்டம சனிசனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் வாக்கியப்படி 26 டிசம்பர் 2020 திருக்கணிதப்படி 24 ஜனவரி 2020

ஓரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு 71/2 , அட்டம சனி நடந்தால் ?

71/2 சனி, அட்டம சனி இவற்றை சரியான வயதில் அனுபவித்த பல பேர் இந்த வார்த்தை கேட்டவுடன், அவர்கள் முகத்தில் இனம் புரியாத கலவரம் தோன்றி மறைவும்.

தன் அனுபவித்த இன்னல்கள், கண் முன் வந்து செல்லும். கனவிலும், நினைவிலும் அந்த காலகட்டடத்தை மனித மனிதத்தின் பதிவேட்டிலிருந்து அழிக்கவே மனம் முயலும்.

50 வயது கடந்தவர்களும் கண்டிப்பாக கண் முன் வந்து செல்லும் அச்சோதனையான காலகட்டம்.

வாழ்க்கை பாதையை ஆற்று நீர் போல் மாற்றும் தன்மை சனி பகவானுக்கு உண்டு. அதை புரிந்து கொண்டால் வாழ்க்கை தெளிவாகும்.

தடம் மாறினால் திசை மாறும். ஆனால் நாம் ஆசிரியர் அடிப்பது மாணவரை திருத்தவேயன்றி தண்டிப்பதற்காக இல்லை.

அறிவியல் ரீதியாகவும், Astrology ரீதியாகவும் சனி பகவான் மந்த தன்மையுடையவர்.

மனிதன் எப்போது பிரச்சனையில் சுற்றுகிறான் என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

ஏழரைச் சனி அட்டமச் சனி

எந்த ஒரு மனிதனின் வாழ்க்கைளும் ஏழரைச் சனியும், அட்டமச் சனியும் கருப்புப் பக்கங்களாகவே இருக்கும்.

சந்திரன் வேகமாக சொல்லும் கிரகம். மனோகாரகன் ராசியை குறிப்பிடுபவன்.

சனி மந்த தன்மையுள்ளவன், முடவன்.

உலகிலுள்ள எதிர்மறை செயல் (Negative Energy ) எல்லாவற்றிக்கும் சனியே அரசன்.

நோய், நொடி, பீடை, பிணி, மந்தம், அவமானம், அசிங்கம், கடன், கவலை அனைத்திற்கும் காரணகர்த்தா சாட்சாத் நம் சனிபகவானே.

உசைன் போல்ட்டிற்கும்(சந்திரன்), ஊனமுற்றவனும் ஒட்ட பந்தயம் வைக்கும் நிலையே 71/2, அட்டம சனி.

சந்திரன் மனதை ஆழ்பவன். சனி சந்திரனை(ராசியை) நெருங்கும் போதே சனியயின் Negative energyயால் தவறுகள் செய்ய துவங்கிவிடுவோம்.

மனத்தை குழப்பி, புத்தியை தடுமாற வைத்து நானா இச்செயலை செய்தேன் என நம்மை நாமே கேட்டு கொள்ள வைப்பதில் கில்லாடி நம் சனிபகவான்.

சனியின் தாக்கத்தை நாம் ஒவ்வொரு உயிரினத்திலும் உணர முடியும்.

திட்டும் போது குரு பிடித்தவன், செவ்வாய் பிடித்தவன் மற்ற கிரகங்களை குறிப்பிடுவதில்லை. சனியின் வலிமை இதிலிருந்தே புரியும்.

சனி சுய ஜாதகத்தில் பாவர் சேர்க்கை, பார்வை பெற்று கெட்டு 71/2, அட்டம சனி நடப்பில் இருக்கும் போது தீய திசைகள் நடப்பில் இருந்தால் நரக வேதனைதான்.

ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு சுப பலமற்ற ராகு திசை, சனி திசை, 8-க்குடைய திசை, நீச்ச கிரக திசை நடைபெறும் பொழுது ஏழரை சனியும் அட்டமச் சனியும் நடப்பில் இருந்தால் பலன் கடுமையாகவே இருக்கும்.

இந்த காலகட்டத்தில் சிலருக்கு வேலை சார்ந்த விஷயங்களில் கடுமையான பிரச்சனையும் ஏற்படுவது உண்டு. அதனால் வேலையை ராஜினாமா செய்து சொந்த தொழில் ஆரம்பிக்கிறேன் என்று சொந்தத் தொழில் செய்ய ஆரம்பித்தால் உள்ளதும் போய்விடும் கவனம்.

சனி் சுப தொடர்பில் இருப்பது தீய பலனை குறைக்கும்.

ஸ்ரீராஜெயம் எழுதுவது, பாராயணம் செய்வது, அனுமன் வழிபாடு சனி தோஷத்தை குறைக்கும்.

பிரதோஷ பூஜை சனியின் இன்னல் தீர்க்கும்.

சனிக்கிழமை காலை சனி ஹோரையில் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்வது சனி தோஷத்தை வெகுவாகக் குறைக்கும்.

ஓம் நமசிவாய

Blog at WordPress.com.

%d bloggers like this: