கடன் தொல்லையை தரும் ஸ்தானம் ஆறாமிடம். மற்றும் ஆறாமாதி.

(கடன் இருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள்)

ஒரு சிலருக்கு, ஏன் அனைவரும் ஏதோ ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க நேரிடுகிறது.

ஆண்டி முதல் அம்பானி வரை அவரவர் தகுதிக்கேற்ப கடன் ஏற்படுகிகிறது.

லக்னத்திற்கு 6க்குடைய திசையும், பாவகிரக சம்பந்தம் பெற்ற திசையும் நடந்தால் கண்டிப்பாக கடன் ஏற்படும்.

71/2சனி, அட்டம சனி, பாவர் சேர்க்கையுடன் சனி, ராகு திசை நடந்தால் கடன் ஏற்படும்.

லக்னாதிபதியை விட 6ம்பதி வலுப்பெற்றால் வாழ்க்கை முழுவதும் கடன், நோய் ஏதாவது ஒன்று தொடரும்.

செவ்வாய் கிழமையும் குளிகை நேரம்

கடன் அடைபட நிறைய வழிமுறைகள் இருந்தாலும் செவ்வாய் கிழமை மதியம் 12 To 1.30 வரை குளிகை நேரம்.

இக்காலத்தில் கடனில் சிறு தொகையை கொடுத்தால் கடன் நிச்சியமாக சீக்கிரம் அடைபடும்.

ஜோதிட காரணம்

செவ்வாய் வேகமான, பரபரப்பான ஆற்றல் மிகுந்த கிரகம்.

குளிகை ஒரு செயலை திரும்ப திரும்ப செய்ய வைக்கும்.

செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் கடனை கொடுத்தால் கடனை அடைக்க திரும்ப, திரும்ப தொகையை கொடுக்கும் அமைப்பை உருவாக்கும்.

கடன் கழுத்தை நெறிப்பபவர்கள் நாளை செவ்வாய் கிழமை 12 To 1.30 Pm முயற்சித்து பாருங்கள் .நிச்சியம் வெற்றிகிடைக்கும்.

ஓம் நமசிவாய

Blog at WordPress.com.

%d