இது லாக் டவுன் நேரம். கிட்டத்தட்ட இரண்டு மாதமாக அனைவரும் வீட்டில் உள்ளோம். இன்றைய சூழ்நிலையில் அரசு ஊழியர் தவிர, மற்ற தொழில் செய்பவர் அனைவருக்கும் பணப்பற்றாக்குறை நிச்சயமாக ஏற்பட்டிருக்கும்.
அதனால் எல்லோருக்கும் அவசர, அடிப்படை தேவைக்காக ஏதேனும் ஒரு விதத்தில் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கும்.
கடன் என்பது காலை சுற்றிய பாம்புதான்.
அஸ்த நட்சத்திர நாளில் வாங்கினால் கடன் குறையவே குறையாது.
6க்குடையவன் திசை நடந்து, ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால், கடன் உற்று போல் பெருகவே செய்யும்.
சனி, ராகு எதிர்மறையான அமைப்பில் இருந்து திசை நடத்தி் ஹஸ்தம் நட்சத்திர நாளில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகி, காலனிடம் நம்மை காவு கொடுக்கும் அல்லது ஊரை விட்டு ஓடும் நிலை ஏற்படும்.
குளிகை நேரம் நடைமுறையில் இருக்கும் பொழுது கடன் வாங்கக்கூடாது. திரும்ப திரும்ப வாங்க நேரிடும்.
வெள்ளிக்கிழமை கடன் வாங்கவும், கடன் கொடுக்கக்கூடாது.
அஸ்த நட்சத்திரமாக ஆக அமைந்து, அன்று வெள்ளிக்கிழமை ஆக இருந்து, குளிகை நேரத்தில் நீங்கள் கடன் வாங்கி, 6க்குடைய திசை நடந்தால் நீங்கள் கடன் தொடர்ந்து வாங்குவதை யாராலும் தடுக்க முடியாது.
அவசர தேவைக்கு பணம் தேவைதான், இருந்தாலும், கால நேரத்தை அனுசரித்து கடன் வாங்குவது கவலையில்லா வாழ்க்கையைக் கொடுக்கும்.
ஓம் நமசிவாய