கடன் வாங்க கடன் அடைக்க உகந்த ஹோரைகள் எது.?

32,192

சுப ஹோரைகள் என்னென்ன?

அசுப ஓரைகள் என்னென்ன?

சுபகாரியங்களுக்கு எந்த ஓரையை தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஹோரைகளை பற்றி அறிய எளிய வழிகள்:

கால ஹோரை என்பது இரண்டரை நாழிகை அல்லது ஒருமணிநேரம் ஆகும்.

ஒருநாள் என்பது 60 நாழிகை கொண்டதாகும்.

ஒருநாளின் அறுபது நாழிகைகளில் சில நாழிகைகள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களின் தனித்துவமான ஆதிக்கத்தில் இருக்கும்.
அந்த நேரமே ஹோரை என்றழைக்கப்படும்

இதில குரு, புதன், சுக்கிரன், வளர்பிறை சந்திரனுடைய ஓரைகள் சுப ஓரைகள் சுபகாரியங்களுக்கு மிகவும் ஏற்றது.

சூரியன், செவ்வாய், சனி ஓரைகள்
சுபகாரியங்களுக்கு ஏற்றதல்ல. விளக்கப்பட வேண்டியது…
அதிலும் குறிப்பாக சனி ஓரை முழுக்க முழுக்க தீமை பயக்க கூடியது. விபத்து நடப்பது பெரும்பாலும் இந்த ஹோரையில்தான். சனி ஓரையில் என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் கேட்கக்கூடிய கேள்வி.
நோயை பற்றியது. விபத்தை பற்றியதாக தன்னுடைய வருமையை பற்றியதாக கேள்விதான் என்னிடம் கேட்பார்கள்.

நோய் எப்போது தீரும்? மருத்துவ செலவு செய்தால் இவர் பிழைப்பாரா? என்பது போல

செவ்வாய் ஓரையும் கிட்டத்தட்ட சனி ஓரையை போலத்தான் இதுவும் நன்மை பயக்காது. இந்த ஓரையில் கடன் வாங்க கூடாது. அடைக்கவே முடியாது. கடனை கட்டலாம். ஒரு பகுதி கடனை செவ்வாய் ஓரையில், செவ்வாய் கிழமையில் அசபதி நட்சத்திரத்தில், அல்லது அனுஷம் நட்சத்திரத்தில் மேச, விருச்சிகம் லக்னமாக வரும் போது செவ்வாய் ஓரையில் கடனை அடைக்கலாம்.கடன் தீரும். செவ்வாய் யுத்த கிரகம். செவ்வாய் ஓரையில் வம்பு, வழக்கு, யுத்தம் இவைகளை தரும். இந்த ஓரையை சுபகாரியங்களுக்கு சுத்தமாக விலக்க படவேண்டும்.

என்னிடம் சூரியன் ஓரையில் வருபவர்கள் தந்தை பற்றிய கேள்விகள் இருக்கும். அரசு வேலை கிடைக்குமா? என்பது பற்றிய கேள்வி இருக்கும்.
சிவ வழிபாடு செய்து கொள்ள, அரசு பதவி ஏற்க, அரசு உதவி பெற, தந்தை வழி ஆதாயங்களுக்கு இந்த ஓரை சிறந்தது.

வளர்பிறை சந்திர ஓரையில் வெளிநாட்டு பிரயாணங்கள் மேற்கொள்ள, திருமணம்போன்ற சுபகாரியங்களுக்கு ஏற்றது. அம்பாள் வழிபாடு, கற்பனைகளை மூலதனமாக கொண்ட எந்த வேலையும் செய்யலாம். கதை, கவிதை, எழுதுவது போன்றவை

புதன் ஓரையில் கல்வி சம்பந்தப்பட்ட விவகாரங்கள், வியாபாரம் ஆரம்பிக்க, திருமணம் போன்ற சகல சுபகாரியங்களுக்கும் ஏற்றது இந்த புதன் ஓரை.

குரு ஹோரை 100/100 சுப ஓரை.
இதில் எந்தவிதமான சுபகாரியங்களும் செய்யலாம். ஆலய கும்பாபிஷேகம், திருமணம், கல்வி, வித்யாரம்பம், போன்ற சகல சுபகாரியங்களுக்கும் ஏற்றது.

சுக்கிரன் ஓரையில் என்னிடம் வருபவர்கள் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான கேள்விகளையே கேட்பார்கள். சுக்கிரன் ஓரையில் பணம் கடனாக தரக்கூடாது. வரவேண்டிய பணத்தை வசூல் செய்து கொள்ளலாம்.
கலைகளுக்கு உரிய கிரகம் சுக்கிரன்.
ஆடல், பாடல் போன்ற ஆய கலைகள் 64 ஐயும் கற்றுக்கொள்ள சுக்கிரன் ஓரை சிறப்பானது. காதல் விவகாரங்களுக்கு ஏற்ற ஓரை. சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்ற ஓரை. அலங்கார ஆடம்பர பொருட்கள் வாங்க உகந்த ஓரை இந்த சுக்கிரன் ஓரை. சினிமா படப்பிடிப்பு இந்த ஓரையில் துவங்கலாம். பெண் பார்க்க இந்த ஓரையில் செல்லும் போது வெற்றி உறுதி.

ஒவ்வொரு நாளும் அன்று என்ன கிழமையோ அந்த கிழமைக்குரிய ஹோரையே முதலில் இடம் பெறும்.

இன்று செவ்வாய்கிழமை. காலை ஆறு மணிமுதல் ஏழுமணிவரை செவ்வாய் ஓரையே முதலில் வரும்.

ஞாயிற்றுக்கிழமை எனில் சூரியன் ஓரை அந்த நாளின் முதலில் வரும்.

சரி அடுத்து வரும் ஓரை எது?

ஞாயிற்றுக்கிழமை தொடங்கி எண்ணிவரும் ஆறாவது நாள் அடுத்த ஓரையாகும். அதாவது சுக்கிர ஓரை. வெள்ளிக்கிழமை சுக்கிரன் ஆதிக்கம் உள்ள நாள் தானே அப்ப சூரியன் ஓரை க்கு அடுத்த ஓரை சுக்கிரன் ஓரை.

அடுத்த ஓரை வெள்ளிக்கிழமை யிலிருந்து எண்ணிவரும் ஆறாவது நாள். அதாவது புதன்கிழமை. அப்ப சுக்கிரன் ஓரைக்கு அடுத்து வரும் ஓரை புதன் ஓரை.

அதற்கு அடுத்து வரும் ஓரை அடுத்த ஆறாவது நாளான திங்கள் கிழமையாக வரும். எனவே புதன் ஓரைக்கு அடுத்து வரும் ஓரை சந்திர ஓரை

திங்கட்கிழமை யிலிருந்து எண்ணி வரக்கூடிய ஆறாவது நாள் சனிக்கிழமை அப்ப அதற்கு சந்திர ஓரைக்கு அடுத்து வரும் ஓரை சனி ஓரை.

சனிஓரைக்கு அடுத்து வரும் ஓரை குரு ஓரை. எப்படி? சனிக்கிழமையில் இருந்து எண்ணிவரும் ஆறாவது நாள் வியாழக்கிழமை எனும் குரு நாள் ஆகும்.

குரு ஓரைக்கு அடுத்த ஓரை செவ்வாய் ஓரை என்று இப்போது நான் சொல்லாமலே உங்களுக்கு புரிந்து இருக்கும்.

இதற்கும் பார்முலா உண்டு.

“சூட்சுமம் சுலபத்தில் புரியவேண்டின் சந்தர்ப்பம் சனியாகாமல் குருவாய் செயல்படவேண்டும்”

இதில் உள்ள முதலெழுத்துக்கள் அந்தந்த ஹோராதிபதியை குறிக்கும்

சூட்சமம் முதலெழுத்துசூ

ஞாயிறு காலை 6_7 சூரிய ஓரை

அடுத்த ஓரை சுலபத்தில்
சு_சுக்கிரன்

7__8 சுக்கிர ஓரை

புரியவேண்டின்

பு_முதலெழுத்து

8_9 புதன் ஓரை

அடுத்த ஓரை உங்களுக்கே தெரியும்

சந்தர்ப்பம்__சந்திர ஓரை

9–10 சந்திர ஓரை

10__11 சனிஓரை

11__12 குரு ஓரை

12__1 செவ்வாய் ஓரை

இந்த ஏழு வார்த்தைகளைஅடங்கிய வாக்கியம் ஏழு ஹோரைகளையும் வரிசையாக தெரிவிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு எளிமையான வழி இருக்கிறது.

ஓரையை சுலபமாக அறிந்து கொள்ள ஒரு ராசிக்கட்டம் வரைந்து, சூரியனை உச்ச வீட்டிலும், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் இவர்களை ஆட்சி வீட்டிலும் குறித்து கொண்டு ஓரையை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

இப்ப உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் ஓரை சூரியன் ஓரை, இரண்டாவது ஓரையாக சுக்கிரன் ஓரை வரும், மூன்றாவதாக புதன் ஓரை,நான்காவதாக சந்திரன் ஓரை, ஐந்தாவதாக சனி ஓரை, ஆறாவதாக குரு ஓரை, ஏழாவதாக செவ்வாய் ஓரை புரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More