காதல் திருமணமும் அதற்கான கிரக நிலைகளும்
காதல் ஏற்படுவதற்கு லக்னம், ராசி இருவருக்கும் ஒன்றாகவோ, ஸ்திரீ, புருஷன் ராசி, லக்னம் இருவருக்கும் ஒன்றுக்கு ஒன்று திரிகோணமாகவோ அமைந்திருக்கும். ஒருவரின் லக்னம் இன்னொருவருக்கு ராசியாகவோ, ஒருவரின் ராசி இன்னொருவருக்கு லக்னமாகவோ அமைந்திருக்கும். கிரகங்களும் இருவருக்கும் ஒன்றுக்கு ஒன்று திரிகோணமாக அமைந்திருக்கும்.
இருவருக்கும் வசியப்பொருத்தம் இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிடித்துபோய்விடும்.
காதலுக்கான கிரக நிலைகள் என்ன?
பொதுவாக ஐந்தாமிட அதிபதியும், ஏழாம் இட அதிபதியும் இணைந்திருக்க இவர்கள் காதல் வயப்படுவார்கள்.
இது ஒரு விதி. இந்த விதி எல்லோருக்கும் தெரியும். 5 + 7
இந்த சேர்க்கை நல்ல சேர்க்கை இல்லை. ஏன் என்று சிந்தித்தோமானால் இவர்கள் இருவரும் லக்ன, ராசிக்கு ஒருவருக்கு ஒருவர் பகைவர்களாக வருவார்கள்.
இப்போ மிதுன லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதி சுக்கிரன். ஏழாம் அதிபதி யார் என்று பார்த்தோமானால் குரு பகவானாக வருவார். இருவருக்கும் ஒத்து போகாது.
கால புருஷ தத்துவப்படி மேச ராசிக்கு ஐந்தாம் அதிபதி சூரியனாக வருவார். ஏழாம் அதிபதி சுக்கிரன். இருவருக்கும் பகை. எனவே இந்த சேர்க்கை நல்ல சேர்க்கை யாக இருக்க வாய்ப்பு இல்லை.
சரி இந்த சேர்க்கை காதல் திருமணத்தை தரும். இதில் ஐந்தாமாதிபதி வலுக்குறைந்தால் தான் காதல் திருமணம்.பூர்வ புண்ணியம் வலுத்திருப்பவர்களுக்கு காதல் திருமணம் ஏற்படுவதில்லை. ஐந்தாமிடம் என்பது காதலை குறிப்பிடும் ஸ்தானம்.ஐந்தாமிடம் கீர்த்தி ஸ்தானம்.
ஐந்தாமிடத்தில் பாவக்கிரகங்கள் இருப்பது காதல் திருமணத்தை ஏற்படுத்தும். ஐந்தாமிடத்தில் பாவர்கள் இருப்பது அபகீர்த்தியை ஏற்படுத்தும். அதோடு குரு பகவானும், பாக்கியாதிபதியும் பாதிக்கப்படும்போது சமுதாய பழக்க வழக்கங்களை, கட்டுப்பாடுகளை மீறுவார்கள்.
காதல் திருமணம் செய்தவர்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடம், சந்திரனுக்கு ஏழாம் இடம் ,சுக்கிரனுக்கு ஏழாம் இடம் பாதிக்கப்பட்டிருக்கும். உடனே நமக்கு ஒரு கேள்வி வரும்? வரக்கூடிய காதல் மனைவி நம் இனத்திலா? அல்லது அன்னிய இனத்திலா என்ற அடுத்த கேள்வி வரும்?
அதற்கு உடனே இரண்டாம் இடத்திற்கு சென்று விடவேண்டும். இரண்டாம் இடம் அதிக வலுப்பெற்று சுபர்கள் சம்பந்தப்பட்டு இருந்தால் தன்னுடைய இனத்திலும், இரண்டாம் இடம் எந்தளவுக்கு தாழ்ந்துள்ளதோ அந்தளவுக்கு தாழ்ந்த குடும்பத்திலும், காதல் மனைவி அமைவார்.
பூர்வ புண்ணியம் வலுத்தவர்களுக்கு காதல் திருமணம் ஏற்படுவதில்லை. ஐந்தாம் அதிபதி + ஏழாம் அதிபதி சேர்க்கை பெற்று இதில் ஏழை விட ஐந்து பலமிலந்தால் இந்த காதல் உடல் கவர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருப்பார்கள். இது உண்மை காதல் இல்லை.
ஏழைவிட ஐந்து பலமானால் இந்த காதல் உண்மைக்காதல்…மனசப்பார்த்து வர காதல். தெய்வீக காதல். இந்த காதல் நீடித்து நிலைத்து நிற்கும். இந்த அமைப்புகளோடு நான்கு, ஒன்பது பலமானால் காதல் ஏற்பட்டு அப்பா, அம்மா சம்மதத்துடன் திருமணம் ஏற்படும். ஐந்தாம் அதிபதியும், ஏழாம் அதிபதியும் இணைந்து லக்னம், ராசி, லக்னாதிபதி, ராசியாதிபதி யோடு சம்பந்தப்படும்போது காதல் திருமணம் உறுதியாக நடக்கும்.
சூரியனும் சுக்கிரனும் சேர்ந்து 1, 4, 7, 10 போன்ற கேந்திரங்களில் இருக்கும்ஜாதகர்கள் காதலில் ஈடுபட்டு அந்த காதல் தோல்வியில் முடிவதை பார்க்கலாம். இதேபோல சுக்கிரனும், செவ்வாயும் இணைந்து 1, 4, 7, 10 போன்ற கேந்திரங்களில் இருக்கும் போது ஜாதகன் ஒருவரை மனதார நேசித்து, காலச்சூழ்நிலை காரணமாக ஒருத்தரை ஒருத்தர் பிரிய வேண்டி ஏற்படுகிறது. ஓ! இதைத்தான் காதல் தோல்வி என்பதோ??
Comments are closed.