குரு கேது சேர்க்கை கோடிஸ்வர யோகமா?
நேற்றைய பதிவில் குரு ராகு சேர்க்கை குரு சண்டாள யோகம் பற்றிய கட்டுரை சிறப்பான வரவேற்பை பெற்றது.
அதில் நிறைய பேர் குரு கேது பற்றி சொல்லுங்கள் எனக் கேட்டு இருந்ததால் குரு கேது பற்றிய பதிவு இது.
பொதுவாக மூலநூல்களில் குரு கேது சேர்க்கை கோடீஸ்வர யோகம் என மொட்டையாக போடப்பட்டுள்ளது.
நடைமுறையில் யோசித்துப் பார்த்தால் இது சிறிதும் நடைமுறை வாழ்க்கைக்கு பொருந்தவில்லை.
குருவும், கேதுவும் வருட கோள்கள்.
இன்றைய நாளில் கோட்சாரத்தில் குருவும் கேதுவும் தனுசில் உள்ளனர்.
ஏறக்குறைய ஐந்து மாதங்களாக இந்த நிலை நீடிக்கிறது.
இப்படி இருக்கையில் குருவுடன் கேது சேர்ந்து இருக்கும் போது பிறக்கும் அனைத்து குழந்தைகளும் கோடீஸ்வர யோகத்தை பெற்று வாழுமா என்றால் நிச்சயமாக இல்லை.
அதேநேரத்தில் குருவும் ,கேதுவும் ஆன்மீக கிரகங்கள் .
குரு கேது சேர்க்கை பெற்றவர்கள், குறிப்பாக ஒன்பதாமிடத்தில் இந்த அமைப்பு இருக்க பெற்றவர்களுக்கு ஆன்மிக எண்ணங்களும், இறை தொண்டாற்றும் அமைப்பும் இயற்கையாகவே வாய்க்கப் பெறும்.
குரு கேதுவை சுபத்துவ படுத்தும் போதும், கேது குருவோடு சேர்ந்து சூட்சும வலுப்பெறும் இந்த அமைப்பு ஆன்மீகத்திற்கு சிறப்பான அமைப்பாகவே உள்ளது.
வாழும் காலங்களில் மற்ற கிரகங்களின் அமைப்பை பொறுத்து சிலருக்கு மட்டும் (லக்னங்களுக்கு)மட்டும்.கோடீஸ்வர யோகத்தை வழங்கும்.
பொதுவாக ராகு சனியைப் போல் செயல்படும் .கேது செவ்வாயைப் போல் செயல்படும் என்பதால் தேவகுரு அணியில் உள்ள சூரிய, சந்திர, செவ்வாய், குரு லக்னங்களுக்கு இந்த அமைப்பு சிறப்பான யோகத்தை வழங்கும்.
மற்ற லக்னங்களுக்கு முழுமையான யோகத்தை வழங்குமா என்றால் அதுவும் கேள்விக்குறியே.
உதாரணமாக துலா லக்னத்தை எடுத்துக்கொள்ளலாம்.
துலா லக்னத்திற்கு குரு வாங்கும் ஆதிபத்தியம் சிறப்பானது இல்லை என்பதால் குரு திசையில் கோடீஸ்வரன் ஆவது கனவிலும் நடக்காது.
(எந்த ஒரு ஜாதகத்திலும் திசா ,புத்தியை பொருத்து பலன் அமையும் என்பதால் இப்பலன் சொல்லப்படுகிறது.மற்ற அமைப்பும் ஆராயபட வேண்டும்)
வாழும் காலத்தில் குரு கேதுவின் தயவால்,செய்த புண்ணியங்களின் உதவியால் ,வாழும் வாழ்க்கைக்கு பிறகு அழியா நிலையான ஆனந்த நிலைக்கு அழைத்துச் செல்வதே கோடீஸ்வர யோகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குரு ராகு சேர்க்கை ஏற்படுவதை விட குரு கேது சேர்க்கை ஏற்படுவது நிச்சயமாக யோக அமைப்பு .ஆனால் அதை முறைப்பபடுத்தி யோகமாக மாற்றுவது உங்கள் கையில் உள்ளது.
அந்த யோகத்தை முறைப்படுத்தினால் யோகம் செயல்படுவது இப்பொழுது அல்ல. இறப்பிற்கு பின்னால்.
Comments are closed.