குரு ,சுக்கிரன் நெருங்கி இணைவது குழந்தை பிறப்பில் தாமதத்தை கொடுக்குமா?
ஆம் .சில நிலைகளில். ஒரு பலன் என்பது ஒரு குறிப்பிட்ட கிரகத்தை மட்டும் வைத்து செயல்படும் அமைப்பாக இருக்காது.
ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் தொடர்புகள் கண்டிப்பாக இருந்தே தீரும்.
குழந்தை பிறப்பு என்பது சுக்கிரனின் தொடர்போடு, குருவால்,5ம் அதிபதியால் நிகழ்த்தப்படுவது.
அதாவது, திருமணத்திற்கு முன்னால் வரும் காதல்,( நிச்சயதார்த்தத்தில் இருந்து , திருமணம் ஆகும் காலகட்டம் வரை, இடைப்பட்ட காலகட்டங்களில் ஆணுக்கும் ,பெண்ணுக்கும் காதல் இருக்கும். ) பின்பு திருமணம். திருமணத்திற்கு பின் நடைபெறும் தாம்பத்தியத்திற்கு ,சுக்கிரன் முழு பொறுப்பு (காரகம்) வகிக்கும்.
தாம்பத்தியத்திற்கு பின் கரு உருவாகும் அமைப்பையும், குழந்தை நன்றாக வளர்ந்து பிறப்பதையும், அந்தக் குழந்தை அந்த தம்பதிகளோடு இணையும் பொழுது, குடும்பம் என்ற சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படக்கூடிய ஒரு நிலையை அடையும்.
இந்த அமைப்பை கொடுப்பது, ஒரு ஜாதகத்தில் குருபகவான்.
காதலில் இருந்து தாம்பத்தியம் வரை சுக்கிரனின் ஆளுமை.
தாம்பத்தியத்தின் மூலம் கரு உருவாகி, குழந்தை பிறந்து ,குடும்பம் அமைத்துக் கொடுக்கக்கூடிய கடமை குருவை சார்ந்தது.
ஜோதிட ரீதியாக தேவகுருவான குரு பகவானும், அசுர குருவான சுக்கிர பகவானும் ,எதிரெதிர் தன்மையை கொண்ட கிரகங்கள். எதிரிகள்.
பொதுவாக திருமணத்திற்கு பின்பு, குரு ,சுக்கிரன், நெருங்கி இணைந்து சுக்கிரனின் வீடுகளில், குரு அமர்ந்து, திசை நடத்தும் போது, அவர்களுக்கு குழந்தை பிறப்பு தாமதமாவதை பல ஜாதகங்களில் பார்க்க முடிகிறது.
Jothida Rathna Chandrasekaran Post
ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதியை முன்னிலைப்படுத்தி, குரு மற்றும் சுக்கிரனின் நிலையை வைத்து தான், குழந்தை பிறப்பை சொல்ல சொல்ல வேண்டும்.2மிடமும் அவசியம்.
குரு ,சுக்கிரன் ஜாதகத்தில் நெருக்கமான இணைவிலிருந்து, சுக்கிரனின் வீடுகளில் அமர்ந்த குரு திசை ,திருமணத்தின் போது வரும் பட்சத்தில், அந்த ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதியான புத்திர ஸ்தான அதிபதியோ அல்லது குடும்ப பாவகமோ வலுவிழந்த அமைப்பில் இருக்கும் ஜாதகங்களுக்கு ஏற்ற ஓரளவு வலுவான ஜாதகங்களை இணைப்பது நல்லது.
இல்லை என்றால் குழந்தை பிறப்பில் தடை தாமதத்தை கொடுத்தே தீரும்.
குழந்தை பிறப்பில் பிரச்சனை இருப்பவர்கள், திருச்செந்தூர் முருகனை தினசரி வழிபட்டு வர நல்ல மாற்றம் உண்டாகும்.
குரு சுக்கிரன் சேர்க்க இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஹோரையில், ஸ்ரீ ரங்கநாதப்பெருமாளை வழிபட்டு வருவது நல்ல பலனை கொடுக்கும்.