குரு கோடிக்கணக்கான தோசங்களை நிவர்த்தி பண்ணுவார்

குரு பார்க்க கோடி நன்மையா?

சுபகிரகங்கள், பாவகிரகங்கள் என்று இரண்டு பிரிவுகளில் குரு,சுக்கிரன், தனித்த சுபர்களோடு சேர்ந்த புதன் ,வளர்பிறை சந்திரன் இவர்கள் சுபகிரகங்கள்.இவற்றில் முதன்மை சுபகிரகம், No 1 சுபகிரகம் குரு. முழு முதற் சுபகிரகம். இந்த குரு பகவான் தான் இருக்கும் ராசியிலிருந்து 5,7,9 ம் வீடுகளை பார்வையிடுவார்.

“கோல விளங்கதிர் கண்ட
பனிப்போல தேயும்
குரு,வெள்ளி, புதன் நோக்கால்
குற்றமெல்லாம் தானே”

குரு கோடிக்கணக்கான தோசங்களை நிவர்த்தி பண்ணுவார்.. குருவின் மங்கள கரமான, பொன்னொளி,அருள் பார்வையானது முகூர்த்த லக்னங்களுக்கும், சுபகாரிய சம்பவ லக்னங்களுக்கு, ஆருட லக்னங்களுக்கு, பன்னிரண்டு பாவகங்களுக்கும் கெடுதல்களை நீக்கி நன்மைகளை தருவதோடு மட்டும் அல்லாமல் , களத்திர தோசம், செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோசம் , புத்திர தோசம், அஸ்தங்க தோசம், போன்ற கோடிக்கணக்கான தோசங்களை குருபகவான் தன்னுடைய அருள் பார்வையால் போக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மற்ற சுபக்கிரகங்களான சுக்கிரன் லட்சக்கணக்கான தோசங்களை நிவர்த்தி செய்வார்.புதன் நூற்றுக்கணக்கான தோசங்களை நிவர்த்தி செய்வார்.

ஒரு ஜாதகத்தில் லக்னத்தையோ,ராசியையோ குரு பார்த்து இருப்பது யோகம்.. குரு பார்வை இல்லாவிட்டாலும் லக்ன, ராசிக்கு சுக்கிரன், தனித்த புதன் ,பௌர்ணமி சந்திரன் பார்வையிடுவதும் சிறப்பாகும். யோகம் தரும்.

நல்ல புத்திசாலித்தனம்,பெருந்தன்மை, செல்வம்,ஆயுள் கீர்த்தி போன்ற பலன்களை லக்னத்தை பார்த்த சுபர்கள் தருவார்கள்.

குரு லக்னத்தை ,ராசியை பார்ப்பது யோகம் என்று சொல்லிட்டோம். எந்தெந்த லக்னங்களுக்கு என்று பார்க்க வேண்டும். குரு நல்ல ஆதிபத்தியம் வாங்கியிருக்க கூடிய லக்னங்களுக்கு , ஆதிபத்திய விஷேஷம் உள்ள லக்னங்களுக்கு குருவின் பார்வையால் நிச்சயமாக நன்மைகள் அநேகம் இருக்கும்.

ஆதிபத்திய விஷேஷம் இல்லாத ரிஷபம், துலாம், மகரம் இந்த மாதிரியான லக்னங்களுக்கு குருவின் பார்வை எந்த மாதிரியான நன்மைகளை செய்யும் அப்படினா கொடுத்து கெடுக்கிறது. இருக்கு ஆனால் இல்லை அப்படிங்கற மாதிரி கிடைக்கும் ஆனா கிடைக்காது அப்படிங்கற மாதிரி

கடந்த சில நாட்களாக என்னிடம் வந்த ஜாதகங்களை பார்த்த பிறகு இதை எழுத தூண்டியது. ஒருவருக்கு மகர லக்னம். பன்னிரண்டாம் பாவத்தில் ஆட்சி பெற்ற குரு தனது தசையை தடத்துகிறது. நிறைய சொத்துக்கள் இருந்தது. குரு தசைக்கு முன்னாடி. பல கோடிகளுக்கு சொத்து மதிப்பு.

மகர லக்னத்துக்கு நான்கில் செவ்வாய் ஆட்சி. குரு தனுசு ராசியில் செவ்வாய்க்கு , தனுசுவில் ஆட்சி பெற்ற குருவின் பார்வை கிடைத்துள்ளது.

குருதசை முடிவதற்குள் அத்துணையும் காலி. வீடு கூட தற்போது இல்லை என்ற நிலமை. குருதசை முடிவதற்குள் எல்லாவற்றையும் இழந்து தெருவுக்கே வந்து விட்டார்கள். விரையாதிபதி தசை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து என்றாலும் நான்காம் இடத்துக்கு , நான்காம் அதிபதிக்கு குருவின் பார்வை நன்மையளிக்கவில்லை காரணம் மகர லக்னத்திற்கு அவர் ஆதிபத்திய விஷேஷம் இல்லாத பாவி

இங்கே பொதுவான இன்னொரு விஷயத்தையும் சொல்லி விடலாம் அது என்னன்னா? பன்னிரண்டாம் இடத்தில் நல்ல கிரகம் இருந்து ஆட்சி, உச்சம் பெற்று தசையை நடத்தினால் அவருடைய தசை முடிவதற்குள் எவ்வளவு இருந்தாலும் அத்தனையும் காலி பண்ணிவிடும். உதாரணமாக மிதுன லக்னம். பன்னிரண்டாம் பாவத்தில் சந்திரன் உச்சம். சந்திர தசையில் எல்லாவற்றையும் இழந்து விடுவார்கள். இவர்கள் பணத்தை ஒரு பதினைந்து வருடங்களுக்கு பிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்துக்கொள்வது நல்லது

அடுத்து ரிஷப லக்னம்.பதினொன்றாம் பாவத்தில் ஆட்சி பெற்ற குரு ஏழாம் பார்வையாக ஐந்தை பார்க்கிறது.குரு ஐந்தாம் பாவகத்தை பார்த்த காரணத்தினால் பூர்வீக சொத்து இருக்கிறது. ஆனால் அந்த சொத்தால் எந்தவித நன்மைகளும் இல்லை. வருமானம் இல்லை. ஒரு ப்ரயோசனமும் இல்லை. பூர்வீக சொத்தை விற்றுவிடலாம் என்று நினைக்கிறோம். எப்போது விற்கும் என்று கேள்விகளை எழுப்பினார்.

இன்னொரு உதாரணமாக துலாம் லக்னம், துலாம் ராசி.. குரு இரண்டை பார்த்த காரணத்தால் குரு தசை முடிவதற்குள் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. காரணம் குரு ஆதிபத்திய விஷேஷம் இல்லாத பாவியாவார்.

ஆதிபத்தியம் விஷேஷம் இல்லாத குரு தகப்பனார் ஸ்தானத்தை பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். குரு பார்த்ததால் தகப்பனார் இருப்பார். ஆனால் உதவாக்கரை தகப்பனாராக இருப்பார்.

குரு பார்வை எல்லா இடங்களிலும் கோடி தோச நிவர்த்தியா அப்படினா இல்லை. இங்கேயும் விதிவிலக்குகள் உள்ளது. கோடி தோசத்தை நீக்கும் குரு வலிமையாக இருக்கனும். சுபர்களோடு சேர்ந்து இருக்கலாம். ஆட்சி உச்சம் , நட்பு பெற்று இருக்கலாம். ஆனால் இந்த குரு தீட்டுப்படாமல் சுத்தமாக இருக்கனும்.

சனி,செவ்வாய் போன்ற கிரகங்கள் குருவை பார்த்து குருவை பலவீனப்படுத்தி விடக்கூடாது. குரு ராகுவுடன் இணைந்து கிரகணம் பெற்று விடக்கூடாது. குரு பாவியாகி விடுவார். இதற்கு டிகிரி கணக்கு பாக்கனும்.
சூரியனுடன் இணைந்து பகை,நீசம் பெற்று விடக்கூடாது. சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் அடைந்து விடக்கூடாது.

குருபகவான் வலிமையோடு இருந்து பார்த்தால் தான் குரு மற்ற தோசங்களை நிவர்த்தி செய்ய முடியும். இல்லாவிட்டால் அவர் மற்ற தோசங்களை நிவர்த்தி செய்ய முடியாது.

குருபகவான் ஆறை பார்த்தால் கடன் குறையும் என்று கணிக்க கூடாது. ஆறாமிடம் வளரும், பெருகும் என்ற அடிப்படையில் கடன், நோய், வம்பு, வழக்கு, எதிரிகள் பெருகுவார்கள்.

குரு எட்டை பார்த்து எட்டாமிடம் குருவின் வீடாக இருக்கும் பட்சத்தில் எட்டாமிடமான தன்வீட்டை தானே பார்த்து ஆயுள் பலத்தை அதிகப்படுத்துவார். ஆனால் அவருடைய தசையில் கீழ விழுகறது , மேலே விழுகிறது மாதிரியான கண்டங்களை ஏற்படுத்துவார். ஆனால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

குரு பார்க்க கோடி குற்றம் நீங்கும் என்பது உண்மைதான் என்றாலும் அவர் ஆதிபத்திய விஷேஷம் உள்ள சுபராக இருந்தால் அவர் பார்வையில் நன்மைகள் அநேகம் (கோடி)இருக்கும்.
அதேசமயம் அவரும் வலிமையோடு , பலத்தோடு இருந்து பார்த்தால் தான் அவரால் தோசங்களை நீக்க முடியும். பகை,நீசம் பெற்று அல்லது வேறு வகையில் அவர் ஒளியிழந்தால் அவருக்கு மற்ற கிரகங்களின் தோசத்தை போக்கக்கூடிய வலிமை இருக்காது.

Blog at WordPress.com.

%d bloggers like this: