பொதுவாக எந்த ஒரு கிரகமும் அந்த லக்னத்திற்கு ஏற்ப நன்மையோ, தீமையோ செய்யும்.
பொதுவாக கேது திசை நடைபெறும் பொழுது எதிலும் ஒரளவு மந்தம் உண்டு.
நூற்றுக்கு 90 பேருக்கு இது சரியாகப் பொருந்தி வருகிறது.
கேது மோட்ச காரகன் என்பதால், கேது திசை நடப்பவர்களுக்கு மோட்சத்திற்கான அறிவுரையை கொடுக்கும்.
அதுபோல் கேது ஞானகாரகன் என்பதால் மோட்சத்திற்கான ஞானத்தை கொடுக்கும்.
ஞானம் என்பது கடையில் ஒரு கிலோ 2 கிலோ என வாங்க முடியாது.
பல விரையங்களையும், வெறுப்புகளையும் சந்தித்த பின்னே முடிவான ஞானம் என்பது பிடிபடும்.
பொதுவாக கேது திசை நடப்பவர்களுக்கு ஆன்மிக எண்ணம் மேலோங்கும்.
புற உலக வாழ்க்கையை நசுக்கி, அக உலக வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லும்.
அதே நேரத்தில் திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் கட்டுபடுபவர்களுக்கு அந்த நேரத்தில் வரும் கேதுதிசை கொஞ்சம் கடினமாகவே இருக்கும்.
திருமணவாழ்வு அல்லாதவர்களுக்கும், திருமண வாழ்க்கையை ஓரளவு நடத்தி வெற்றி கண்டவர்களுக்கும் கடைசி நேரத்தில் வரும் கேது திசை மோட்சத்தை நோக்கி அழைத்துச் செல்வதாகவே இருக்கும். அதேநேரத்தில் மன, பண கஷ்டம் உண்டு.
நாம் எங்கிருந்து வந்தோம், எதை நோக்கி பயணிக்கப் போகிறோம் ,இறப்பிற்குப்பின் என்ன உள்ளது போன்ற விடைதெரியாத பல மர்மங்களுக்கு கேது திசையே விடைகொடுக்கும்.
அதுபோல் உண்மையில் தாய், தந்தை, கணவன் மனைவி, குழந்தைகள், உறவினர்கள் நண்பர்கள் இவர்கள் யார் என நமக்கு உண்மையை புரிய வைக்கும்.
முக்தி மற்றும் மோட்ச நிலையை நோக்கி அழைத்துச் செல்லும் கேது திசை நடப்பில் வந்தால் தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.
அது உங்களுக்குப் பல பாடங்களை கற்றுக் கொடுக்கும்.
கேது திசை இளமையில் வந்து, அந்த ஞானம் பிடிபட்டு விட்டால், அடுத்து வாழக் கூடிய வாழ்க்கையை தெளிவாக்கிவிடும்.
உங்கள் வாழ்வில் கேது திசை அடியெடுத்து வைத்தால் கவலைப்படத் தேவையில்லை.
அழியாத, ஆனந்தமான அற்புத வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் கேது தசை நடப்பில் இருந்தால் சந்தோஷம் கொள்ளுங்கள்.
அதுவே உறுதியானதும், இறுதியானதும் ஆகும்.
மற்ற திசைகளில் எல்லாம் கொடுத்துக் கெடுக்கும் அல்லது கெடுத்து கொடுக்கும்.
மற்ற எந்த திசைகளும் ஞானத்தைக் கொடுக்காது. வெறுப்பை மட்டுமே கொடுக்கும்.
ஆனால் கேதுதிசை ஞானத்தை கொடுக்கும்.
ஆதலால் கேதுதிசை நடந்தால் பிறவிப் பெருங்கடலை கடக்க உதவும் என்பதால் அதைப் பின்பற்றி அழியா ஆனந்த நிலைக்கு அஸ்திவாரம் இடுங்கள் .
ஓம் நமசிவாய