கடன் திரும்ப வர ஒரு எளிய பரிகாரம்

கடன் கேட்பவருக்கு தங்களால் இயன்ற பணத்தை கடனாக கொடுக்கும் சில நல்ல மனிதர்கள் இருக்கவே செய்கின்றனர். ஆனால் கடன் கேட்பவர் கடன் வாங்கிய சில நாட்களிலேயே கடன் கொடுத்தவரை பற்றியும், வாங்கிய கடன் தொகை பற்றியும் முழுமையாக மறந்து விடுவதை நம்மில் பலர் பார்த்திருப்போம்.

மேற்கூறிய பிரச்சனைகளை நம் வாழ்வில் சந்திக்காமல் இருப்பதற்கு சிறந்த வழி பிறருக்கு கடன் கொடுக்காமல் இருப்பது தான்.

அப்படியே கடன் கொடுப்பதாக இருந்தாலும் கடன் கேட்பவரின் பின்புலத்தை நன்கு ஆராய்ந்து, ஏதாவது ஒரு பொருளை பணயமாக வாங்கிக் கொண்டு கடன் கொடுப்பதே சிறந்தது. இவற்றையும் மீறி கடன் கொடுத்து, அந்த கடன் தொகை தங்களுக்கு திரும்ப வராமல் தவிக்கும் நபர்கள் சில பரிகாரங்களை செய்வதால் மிக விரைவிலேயே அவர்கள் கொடுத்த பணம் அவர்களுக்கே திரும்ப கிடைக்கச் செய்யும்.

தாங்கள் பிறருக்குக் கொடுத்த பணம் தங்களுக்கு திரும்ப வந்து சேர வேண்டும் என நினைப்பவர்கள் சிறிதளவு கல் உப்பு, சிறிதளவு வெந்தயம் மற்றும் சிறிதளவு கருப்பு எள் ஆகிய மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒரு மிக்ஸியில் இந்த மூன்றையும் போட்டு நன்றாக பொடி பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய தூய்மையான வெள்ளைத்துணியில் அந்த பொடியை கொட்டி, துணியை முடிந்து உங்கள் வீட்டில் கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும்.இது ஒரு எளிய பரிகாரம்.

வாராக் கடனை நம்மிடம் மீண்டும் வரச் செய்யும் ஆற்றல் கொண்ட தெய்வமாக பைரவ மூர்த்தி இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலில் இருக்கும் பைரவர் சந்நிதிக்குச் சென்று, சிறிதளவு தூய்மையான வெள்ளைத் துணியில் 27 கருப்பு மிளகுகளை போட்டு முடிந்து, ஒரு மண் அகல் விளக்கில் அந்த முடிச்சை திரியாக வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.

தீபம் ஏற்றிய பிறகு அந்த தீபத்தை சுற்றி குங்குமத்தை போட வேண்டும். இந்த வழிபாட்டை மூன்று வாரங்களுக்கு செய்து வர நீங்கள் பிறருக்கு கொடுத்த பணம், பிறர் உங்களை ஏமாற்றி கடனாக வாங்கிய பணம் ஆகிய அனைத்தும் மீண்டும் உங்களிடம் வந்து சேரும்.

ஓம் நமசிவாய

Blog at WordPress.com.

%d bloggers like this: