கொரோனா கொடூரனின் கோர தாக்குதல் எப்போது குறையும்?
ஜோதிட ரீதியான விரிவான கணிப்புகள்)
இன்று உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரானா வைரஸ் வளர்ந்த வல்லரசு நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.
சீனாவில் டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கொஞ்சம் ,கொஞ்சமாக ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளுக்கு பரவி ,நம் இந்தியாவிலும் ,பல்வேறு மாநிலங்களிலும் பரவி , தமிழகத்திலும் கொரோனா வந்துவிட்டது என்பதை செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் காவு எண்ணிக்கை தொடங்கிவிட்டது.(கர்நாடகா,டெல்லி).
நமது அண்டை மாநிலமான கேரளாவில் அதிகமான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது நமக்கு பீதியை ஏற்படுத்துகிறது.
இந்தக் கொடூர கபளிகரங்களை உண்டாக்கும் இந்த வைரசுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேதனையான விஷயம் தான்.
அதனால் தான் மிக வளர்ந்த நாடுகளான சீனாவிலும்,இத்தாலியிலும் ஸ்பெயினிலும் ,பிரிட்டனிலும்,அமெரிக்காவிலும் கொத்து கொத்தாக மரணங்கள் ஏற்படுவதை கண்டு உலகமே அஞ்சி நடுங்குகிறது.
சரி ஜோதிடப்படி என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.
12 ராசிகள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.FLAW.
FIRE -நெருப்பு
LAND-நிலம்
AIR-காற்று
WATER-நீர்
மேஷம் -நெருப்பு. ரிஷபம் -நிலம் மிதுனம் -காற்று கடகம் -நீர்.
உலகியல் ஜோதிட விதிப்படி சீனாவை குறிக்கும் ராசி கும்ப ராசி .சனியின் மூலத்திரிகோண வீடு.
காலபுருஷ தத்துவத்தின்படி ஆறாம் வீடு ஒரு ஜாதகத்தில் நோயை குறிக்கும் ஸ்தானம்.(கன்னி ராசி.)
டிசம்பர் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், டிசம்பர் 28-ஆம் நாள் சீனாவில் யுகாங் மாகாணத்தில் முதல் உயிரைப் பறித்தது.
அந்த நேரத்தில் தனுசில் 6 கிரகங்கள் சேர்க்கை.
கால புருஷனுக்கு 6ம் அதிபதியான புதனும், 6க்கு ஆறாம் அதிபதியான சீனாவை குறிக்கக்கூடிய கும்ப ராசிக்கு அதிபதியான சனியும் , தனுசில் அமர்ந்து மிதுன (காற்று) ராசியில் இருக்கும் ராகுவை பார்க்கின்றனர்.
சனியே ஒரு ஜாதகத்தில் நோயை கொடுக்கும் கிரகமும் கூட.ராகு சனியின் பிரதிபலிப்பு.
இங்கே குரு, மூலத்திரிகோண வீட்டில் அமர்ந்து ஆட்சி பெற்றாலும் ,சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம்.
தற்போது கோச்சாரத்தில் குரு தனுசு வீட்டில் இருந்தாலும் 30.3 .2020 அதிகாலை 3.55 முதல் அதிசாரமாக மகரத்தில் பிரவேசிக்கிறார்.மகரம் குருவின் நீச வீடு.
கிட்டத்தட்ட 30. 6 .2020 காலை 5 .20 வரை மகரத்தில் நீச நிலையில் இருப்பார்.
இங்கு சனியுடன் இணைந்து நீச பாவ பங்கத்துவத்தை பெறுவார்.
இந்த காலங்களில் குருவின் பார்வை ராகுவிற்கு கிடைக்காமல் போவதால் தற்போதைய நிலையில் ஜோதிட ரீதியான கணிப்பில் பலன்கள் கொஞ்சம் எதிர்மறையாக தான் உள்ளது.(நாளுக்கு நாள் அதன் தீவிரத்தை உணர முடிகிறது.)
தற்போது உலக அளவிலும்,இந்திய அளவிலும் நாளுக்கு நாள் பெருகி வரும் நோயாளிகளின் எண்ணிக்கையே இதற்கு சான்று.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, டாஸ்மாக் ,தியேட்டர்களுக்கு விடுமுறை , பஸ் ஸ்டாண்ட் ,ரயில் நிலையங்கள் ,விமான நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு நடைபெறுவதில் இருந்து இதன் தாக்கம் அதிகமாகி கொண்டிருப்பதை உணர முடிகிறது.
நம் பாரத பிரதமர் மோடி கொரோனாவை தடுக்க தகுந்த சரியான ஆலோசனைகள் வழங்கினால் ஒரு லட்சம் பரிசு என்று அறிவித்துள்ளார்.
நிலைமை சீர்கெட்டிருப்பதை இதிலிருந்து உணர முடியும்.
இன்றைய நாளில் (17/3/2020) தற்போதைய நிலையில் குரு தனுசில் 268.09 டிகிரியில் .ஏறக்குறைய மகரத்தில் நீசம் அடைய போகிறது.
குரு மகரத்தில் 5 பாகையில் அதி நீச நிலையை அடையும்.
கால புருஷனுக்கு அட்டமாதிபதி ஆன செவ்வாய் , ராகுவை இன்றைய கோட்சாரத்தில் பார்க்கிறார்.
குருவும் பலம் இழக்கிறார் என்பதால் அடுத்து வரும் சில நாட்கள் கொஞ்சம் தீவிரமான எச்சரிக்கை தேவை.
அதுவரை கலவரமான காலம் தான்.
நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எட்டாம் இடம் என்பது ஒரு ஜாதகத்தில் மறைந்திருக்கும் பொருளை குறிக்கக்கூடிய இடமாகும்.(மறைந்திருக்கும் பொருளை கண்டுபிடிப்பது)(மருந்து கண்டுபிடிப்பு)
கால புருஷனுக்கு எட்டாம் அதிபதியான செவ்வாய் 23.3.2020 முதல் 10 வீடான மகர வீட்டில் உச்சமாகி திக் பலமாகிறார்.
கால புருஷனுக்கு ஒன்பதாம் அதிபதியான குரு 30. 3 .2020 முதல் மகரத்தில் பிரவேசிக்கிறார்.
கால புருஷனுக்கு பத்தாம் அதிபதியாகிய சனி பத்தில் ஆட்சி பெற்றுள்ளார்.
கொரோனாவுக்கு தற்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
எட்டாம் அதிபதி ,பத்தாம் இடத்தில் உச்சமாகி, கால புருஷனுக்கு பத்தாம் அதிபதி சனியும் ஆட்சியாகி ,பாக்கியாதிபதி குரு அதனுடன் இணையும் காலகட்டங்களில் 10மிடம் சுபத்துவமாகி அதாவது ஏப்ரல் மாததிற்கு மேல் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும்.
செவ்வாய் தனுசு ,மகரம், தாண்டி கும்ப ராசியில் பிரவேசிக்கும் பொழுது இதன் தாக்கம் குறையத் தொடங்கும்
குரு அதிசார நிலையை முடித்து கொண்டு மறுபடியும் தனுசில் பிரவேசிக்கும் பொழுது நோய் கட்டுக்குள் இருக்கும். கவலை வேண்டாம்.
கந்தனையும், கால பைரவரையும், தன்வந்திரி பகவானையும் தினசரி நித்திய பூஜையில் வழக்கமாக வழிபடுங்கள்.
எந்த குறையும் அணுகாது.
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் .தேவையற்ற பொது இடங்களுக்கு செல்வதை கூடுமானவரை தவிருங்கள்.
வீட்டு வாசலில் மஞ்சள்,வேப்பிலை கலந்து தண்ணீர் தெளியுங்கள் .
பொது இடங்களுக்கு செல்லும் பொழுது முக கவசம் அணிந்து செல்வது நல்லது.
யாருடனும் மிக நெருக்கமான இணைவில் இருக்க வேண்டாம்.
முடிந்தவரை முத்தமிடுவதை தவிர்ப்பது நல்லது.
நான் ஜோதிடன் மட்டுமல்லாமல் மருத்துவத்துறை சார்ந்தவன் என்பதால் ஜோதிடப்படியும் ,மருத்துவ படியும் இரண்டையும் சேர்த்து ,என்னால் முடிந்த தீர்வு கொடுத்துள்ளேன்.
இறைவன் கருணை புரிவான் .கவலை வேண்டாம்.
ஓம் நமசிவாய
Comments are closed.