சனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எப்படி அறிவது?
சனி இயற்கையில் பாவி. எதிர்மறை பலன்களின் அரசன்.
தற்காலிகமாக சிலருக்கு காகம் அடிக்கடி தலையில் கொத்தவோ அல்லது விரட்வோ செய்யும்.
சிலருக்கு காக்கை அடிக்கடி உடலில் எச்சமிடும்.
சிலருக்கு பஸ்ஸில் பயணம் செய்யும்போது முன்னால் இருப்பவர் திடீரென வாந்தி எடுக்கும்போது இவர் உடல் முழுவதும் தெரித்துவிடும்.
அதுபோல் சிலருக்கு ரயிலில் பயணம் செய்யும் போது பாத்ரூமிற்கு அருகில் இடம் கிடைப்பது அல்லது பாத்ரூமிற்கு அருகில் நின்று கொண்டு வரக் கூடிய சூழ்நிலை இருப்பவர்கள் நிச்சயமாக சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருக்கிறோம் என அறியலாம்.
தெரியாமல் மலத்தை மிதித்து விடுபவர்களும் சனியின் பிடியில் உள்ளோர் என பொருள்.
வாகனங்களில் சென்று கொண்டிருக்கும் போது உங்களுக்கு முன்னால் குப்பை லாரி சென்று அதிலிருந்து உங்கள் மீது குப்பை விழுந்தாலோ அல்லது அதன் பின்னாலேயே சென்று கொண்டிருக்க கூடிய அமைப்பு இருந்தால் சனியின் ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள்.
பிரம்ம முகூர்த்தத்தில் விழிக்க கூடிய நேரத்தில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுவது நல்லது. சிலர் 8 மணி 9 மணி வரை தூங்கி கொண்டிருந்தாலும் சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். சோம்பேறித்தனம் கொண்டவர்கள் அனைவரும் சனியின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள்.
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல், உடலில் வியர்வை நாற்றம் கொண்டவர்களும் சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். காலையில் பல் துலக்காமல் காப்பி அருந்துபவர்களும், குளிக்காமல் சாப்பிடுபவர்களும் சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள்.
பாத்ரூமில் வழுக்கி விழுந்து எலும்பில் அடிபட்டாலும் சனியின் ஆதிக்கத்தில் உள்ளோம் என அறியலாம்.
பரிகாரம்
சனியின் தோஷங்கள் குறைய காலபைரவரையும், விநாயகரையும், அனுமனையும் தினசரி வழிபாட்டில் வழிபட்டு சிவபூஜை செய்தால் சிறப்படையலாம் .
ஓம் நமசிவாய
Comments are closed.