சென்னையை தாக்குமா சுனாமி ? Will tsunami hit Chennai in 2017?

சென்னையை தாக்குமா சுனாமி ? Will tsunami come again in Chennai December 2017? Will tsunami happen again in India?

2,730

சென்னையை தாக்குமா சுனாமி ?

(Will tsunami hit again Chennai in December 2017)

[ ஜாமக்கோள் ஆருட ஆய்வு கட்டுரை ]

சில மாதங்களாகவே வாட்ஸ் அப், முகநூல், யூடூப் போன்ற சமூக வலை தளங்களின் வாயிலாக சுனாமி பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. நாளை மறுதினம் பிறக்கும் 2017 டிசம்பர் 31 – க்குள் சுனாமியால் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் சுனாமி பெரும் அளவில் தாக்கும் என மக்களிடையே ஒரு பெரும் பீதியை ஏற்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் 2004 டிசம்பர் 26 ல் ஏற்பட்ட சுனாமி ஏற்படுத்திய பேரழிவின் வடு இன்னும் மாறாமல் இருப்பதே ஆகும்.மேலும் சென்ற வருடம் வந்த வர்தா புயலும் ஒரு காரணம்.

இதற்கிடையில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும், சென்னை வரும் டிசம்பர் மாதம் சுனாமியால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் என்ற அச்சுறுத்தல்கள் வேறு. இதைப்பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் போது சென்னையை சுனாமி இந்த முறை தாக்குமா என அவர் கேட்ட கேள்வி நேரத்தை கொண்டு ஜாமக்கோள் ஆருடம் வாயிலாக கணித்துள்ளேன். சென்னையை தாக்குமா சுனாமி இதற்கான பலனை பார்ப்போம்.

நாள் : 29-11-2017

கேள்வி நேரம்: இரவு 09-08 உதயம் : கும்பம் ஆருடம் : ரிஷபம் கவிப்பு : மீனம்

Astrological prediction for tsunami hit again Chennai in December 2017
tsunami hit Chennai in 2017 – astrological research for tsunami in Chennai

உதயம் கும்பமாகி சிரோதய ( இருகால் ) இராசியாக வருவதால் மனிதர்கள் பற்றிய சிந்தனை. கும்பம் இராசி ஊரை குறிக்கும்.(அதனால் சென்னை.) ஆருடம் இராசியாகிய ரிஷபமும், கவிப்பு ராசியாகிய மீனமும் நீரை குறிப்பதால் சுனாமி பற்றிய சிந்தனை. உதயத்தில் இருந்து 4 மிடம் ஆருடமாக அமைந்ததால் எதிர்காலத்தைப் பற்றிய கேள்வி.

ஆருட இராசியாகிய 4 -மிடம் நீர்கீழ் இராசியை குறிப்பதால் கடலுக்குள் ஏற்படும் மாற்றத்தால் பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு நஷ்டம் வருமா என்பதை பற்றியதாக கேள்வி நேரம் சுட்டிக் காட்டுகிறது.

கவிப்பு மீனத்தில் அமைந்துள்ளது. கவிப்பை கொண்டு ஏற்பட இருக்கும் அழிவை [ நட்டத்தை] அறியலாம்]

உதயத்தில் இருந்து 10 மிடத்தைக் கொண்டு கேள்வி கேட்டவரின் சிந்தனையை அறியலாம்.

உதயத்திற்கு 10 இடம் விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாயே திடீர் விபத்துக்கள், பூகம்பம் , எரிமலை வெடித்தல், போன்ற நிகழ்வுகளுக்கு காரக கிரகம். உதயத்திற்கு 10 ம் அதிபதியான செவ்வாய் கவிப்பில் அமர்ந்துள்ளார். அதுவும் பிரளய இராசியான மீனத்தில் உள்ளார். மேலும் மீனம் சமுத்திரத்தை [ கடல் ] குறிக்கும்.

ஆஹா நீங்க சொல்ல வருவதை பார்த்தால் சுனாமி வந்திடும் போல இருக்கே என்று தானே கேட்கிறீர்கள். பயப்படாதிங்க நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி சரியா என்று எந்த அளவிற்கு ஜாமக்கோள் ஆருடத்தில் துல்லியமாக வருகிறது என்று தான் ஆராய்ந்து வருகிறோம்.

1 ] ஆருட அதிபதி உதயத்தில் இருந்து 9 பாவத்தில் உள்ளதால் தலை நகரத்தைப் பற்றிய கேள்வி [ ஸ்திர ராசிகள் [ (ரிஷ்பம்,சிம்மம்,விருச்சிகம்,) கும்பம் ]- உதயமாக வந்து கெட்டதை கேட்டால் அதனால் எவ்வித பாதிப்பும் வராது. சுனாமி வரும் ஆனா வராது என்பதே சரியான பதில்.

2 ] உதயத்திற்கு 2 ல் கவிப்பு அமைவதால் சுனாமி வருவது தடைபட்டு போகும்.

3 ] உச்சியால் (10 மிடம்) சிந்தனையை அறியலாம். நீர்கீழால் (4மிடம்) கனவு நிலையை அறியலாம். உதயத்திற்கு 4 மிடம் ரிஷபம் ஆருடமாக வந்துள்ளதால் சென்னையை தாக்குமா சுனாமி என்ற கேள்வி கற்பனையிலும், கனவிலுமே வந்து போகுமே தவிர நேரில் வராது.

4 ] உதயத்திற்கு பத்தாம் அதிபதி செவ்வாய் கவிப்பில் அமர்ந்திருப்பதால் செவ்வாயின் [ பூகம்பம், எரிமலை வெடித்தல், விபத்து, கடலுக்குள் ஏற்படும் பூகம்பமான சுனாமி ] காரகத்தால் வரும் பாதிப்பு நிச்சயம் வரவே வராது.

5 ]உதயம் சிரோதய இராசியாக ( கும்பம் ) வந்து, ஆருடம் பிருஷ்டோதய இராசியாக ( ரிஷபம் ) வந்ததால் கேட்ட கேள்வி நிறைவேறாது.தடைபடும். சென்னையை சுனாமி தாக்காது.

6 ] உதய அதிபதி சனி உதயத்திற்கு 8 ல் இருப்பதாலும், கவிப்பின் அதிபதி குரு உதயத்திற்கு 12 ல் நீசம் அடைவதாலும் , என் நண்பர் கேட்ட கேள்வி நடைபெறாது.

7] உதயம் மற்றும் ஆருடம் , கவிப்பில் பாம்பு ( இராகு, கேது ) நின்றால் மட்டுமே கொடிய தீங்குகள், மரணம் சம்பவிக்கும். அவ்வாறில்லை எனில் பாதிப்பு இல்லை .கீழ்கண்ட ஆருட சக்கரத்தில் உதயம், ஆருடம், கவிப்பில் இராகு கேது அமரவில்லை.

8 ) கவிப்பில் செவ்வாய் அமர்ந்து, உள் வட்டத்தில் கோட்சார சந்திரன் இணைவதால் புயல் மழையால் சில இயற்கை சீற்றங்கள் உருவாகும் என்பது உண்மை.

 

9 ] வெளிவட்ட கிரகமான ஜாமக்கோள் சக்கரத்தில் 7 மிடம் சூரியன் 3 ல் உச்சம் பெறுவதால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் நேராது. 9 மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி, 5 க்குடைய புதன் லாப தானத்தில் இருக்கிறார்.6 ல் சந்திரன் ஆட்சி பெற்று இருக்கிறார். கிரக அமைவுகள் நல்ல நிலையில் இருப்பதால் சுனாமி அச்சுறுத்தலால் எவ்வித பாதிப்பும் நேரிடாது.

 

10 ] உதயாதிபதி சனி 8 ல் மறைந்து, கவிப்பில் உள்ள செவ்வாய் பார்வை செய்வதாலும், அவ்விடத்தில் கோட்சார சந்திரன் இருப்பதால் பொது மக்கள் சில அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி உள்ளனர் அவ்வளவே.

11] உதயத்தை கோட்சார குரு பார்வை செய்வதும், கவிப்பில் கோட்சார சந்திரன் இருப்பதும், ஆருடத்தை கோட்சார சுக்கிரன் பார்வை செய்து கொண்டும் இருப்பதால் நிச்சயம் சென்னைக்கு சுனாமியும் வராது. வரவேயில்லை என்றால் பிறகு எப்படி தாக்கும் . ஆகவே இந்த வருடம் டிசம்பரில் சென்னைக்கு சுனாமியால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இறை சித்தத்தால் மக்கள் அனைவரும் வளமுடனும் நலமுடனும் வாழ்வாங்கு வாழ்வார்கள். நல்லதை எண்ணுவோம் . நல்லதே நடக்கும்.

என்றும் அன்புடன் அஸ்ரோ சக்திகுரு நாமக்கல்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More