சொந்த தொழிலா உத்யோகமா யாருக்கு எது அமையும்?
நம்மில் பலரும் சொந்த தொழில் செய்யலாமா வேண்டாமா என்று குழப்பம் அடைவது உண்டு. அதற்கான கிரக அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காணலாம்.
1) ஜாதகத்தில் 6-ம் அதிபதி பலம் இழந்து 10-ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் வலுப்பெற்று அமர்ந்தால் ஜாதகர் எந்த தொழிலை செய்தாலும் வெற்றி பெறுவார்.
2) சொந்த தொழில் யோகம் இருந்தாலும் சரியான திசாபுத்திகள் வராவிட்டால் தொழில் செய்தும் பயன் இருக்காது.
3) லக்கினாதிபதி வலுப்பெறவில்லை என்றால் தொழிலில் அலைச்சலும் சிரமங்களும் இருந்து கொண்டே இருக்கும்.
4)2, 9, 11 ம் அதிபதிகளில் யாரேனும் ஒருவர் வலுப்பெறவில்லை எனினும் தொழிலில் போதிய லாபம் இருக்காது.
5)உபய லக்கினக்காரர்களுக்கு (மிதுன, கன்னி, தனுசு, மீனம்) 10-ம் அதிபதி கேந்திர ஸ்தானங்களில் இருந்தால் சொந்த தொழில் செய்யக் கூடாது. செய்தால் நஷ்டம் ஏற்படும்.
6) தொழில் ஸ்தானத்தில் 8-ம் அதிபதி இருந்தாலும், குரு இருந்தாலும் தொழிலை அடிக்கடி மாற்றம் செய்வார் அல்லது தொழிலுக்கான இடத்தை மாற்றம் செய்து கொண்டே இருப்பார்கள்.
7) சர லக்கினக்காரர்களுக்கு 11-ம் அதிபதி 10-ல் அமர்வது அடிக்கடி தொழில் மாற்றத்தையும் இடம் மாற்றத்தையும் அலைச்சல்களையும் தந்து கொண்டே இருக்கும்.
8) 10-ம் அதிபதி பலம் குன்றி 6-ம் அதிபதியும் செவ்வாயும் வலுப்பெற்று அமர்ந்தால் நல்ல உத்யோகம் அமையும்.
9)6-ம் அதிபதி, செவ்வாய், 10-ம் அதிபதி, சனி ஆகிய கிரகங்கள் வலுவிழந்தால் தொழில் உத்யோகம் இரண்டும் சரிவர அமையாது.
10) உபய லக்கினங்களில் தனுசு மற்றும் மிதுன லக்கினத்திற்கு 6-ம் அதிபதி வலுவிழந்தாலும் (6, 8, 12) நல்ல திசை நடப்பின் உத்யோகத்தை தந்துவிடும். உபய லக்கினக்காரர்களுக்கு 10- அதிபதி மறைவு பெற்று நல்லதிசை நடந்தாலும் சிலருக்கு கூட்டுத்தொழில் அல்லது சொந்த தொழில் யோகம் அமையும்.
11) தொழில் ஸ்தானாதிபதி நீசம், பெற்றால் சொந்த தொழில் கூடாது.
12) உபய லக்னகாரர்கள் கூட்டுத் தொழில் செய்ய கூடாது. செய்தால் Partners இடையே பிளவு ஏற்படும்.
13) பல தொழில் செய்தாலும் லாபாதியை வைத்தே லாபம் நிர்ணயம் செய்யபட வேண்டும்.
14) எந்த திசையிலும் சுய புத்தியில் தொழில் ஆரம்பிப்பது நல்லதல்ல.
15) 71/2, அட்டம சனி புதிய முதலீடுகளை செய்யகூடாது.
இந்த 15 விதிகளை நினைவில் கொண்டாலே ஒருவர் சொந்த தொழில் செய்வாரா அல்லது உத்யோகத்திற்கு செல்வாரா என்பதை 80% சொல்லிவிட முடியும்.
Comments are closed.