ஜாதகத்தில் கருச்சிதைவு abortion ஏற்படுத்தும் கிரஹ நிலை

திருமணமமான சில மாதத்தில் பெண்ணிடம் கேட்கும் முதல் கேள்வி ஏதும் விஷேசம் இல்லியா?

அபிராமி பட்டர் பதினாறு வகைப் பேறுகளை திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் வேண்டும்போது, ‘தவறாத சந்தானம் வேண்டும்’ என்று கேட்கிறார். அதாவது மற்றப் பேறுகள் எல்லாம் தவறினாலும் பாதகமில்லை; குழந்தைப் பாக்கியம் எனும் சந்தானப் பிராப்தி தவறாமல் கிடைக்க அருள்செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

ஆணுக்கு 5-ஆம் இடமும் ,குருபகவானும், பெண்ணுக்கு 5-ஆம் இடமும், ஒன்பதாம் இடமும், செவ்வாயும் புத்திர ஸ்தானத்தை குறிக்கும் இடங்கள்.

அடிக்கடி கருகலைவு ஏன் ஏற்படுகிறது?

  1. பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி நீசம் ஆகக்கூடாது.
  2. பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி ராகுவுடன் 5 டிகிரிக்குள் இணையக் கூடாது.
  3. பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி அஸ்தமனமாக கூடாது.
  4. பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி ,ஐந்தாமிடம் பாபகர்த்தாரி தோஷத்திற்குள் இருக்கக்கூடாது.
  5. பெண்ணின் ஜாதகத்தில் 5ல் சனியோ, ஐந்தாம் அதிபதி சனியுடன் மிக நெருங்கிய இணைவில் இருக்கக் கூடாது.
  6. செவ்வாய் ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாகி , நீசமாகியிருந்தால் அடிக்கடி உதிரப் போக்கு ஏற்பட்டு கருக்கலைவு ஏற்படும்.
  7. சந்திரன் ஐந்தாம் அதிபதி ஆகி, ராகுவுடன் கிரகண தோஷத்தில் இருந்தாலும் அடிக்கடி கருக்கலைவு ஏற்படும்.
  8. குரு அஸ்தமனம், நீ்சமானவருக்கு முதல் முயற்சியிலேயே குழந்தை கிடைப்பதில்லை. அடிக்கடி கரு கலைவு உண்டு.

இன்னும் பல விதிகள் உள்ளன.

ஆண், பெண் ஜாதகங்களில் ஐந்தாம் அதிபதி, புத்திர ஸ்தானாதிபதி வலுவிழந்த ஜாதகங்களை இருவருக்கும் இணைக்க கூடாது.

இருவரில் ஒருவருக்கு புத்திர தோஷம் ஏற்பட்டிருந்தால் மற்றவருக்கு வலுவான புத்திரயோகம் உடைய ஜாதகத்தை இணைக்க வேண்டும்.

புத்திர தோஷத்திற்கு சரியான பரிகாரம்.

பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா என்னும் ஊர். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் அமைந்து உள்ளது.

இங்குள்ள கிருஷ்ணனை முறையாக வழிபட்டு, சந்தன கோபாலகிருஷ்ணன மந்திரத்தை தினசரி வழிபட்டு வர புத்திர பாக்கியம் உண்டு.

Blog at WordPress.com.

%d bloggers like this: