ஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா?

29,027

முடியும். திருமணம் என்ற பந்தம் ஆணுக்கோ, பெண்ணுக்கோ உருவாகும் பொழுது, அது சார்ந்த விஷயங்கள் நடைபெறத் தொடங்கும்.

முகம் தெரியாத ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். நிச்சயதார்த்தம் சார்ந்த விஷயங்கள் என்னென்ன நடைபெறும்.

இன்று இருக்கும் காலகட்டங்களில் திருமண நிச்சயதார்த்தம் ஆன உடன் ,முதல் வேலையாக ஆண்ட்ராய்டு மொபைலை அன்பின் பரிசாக வாங்கி கொடுத்து ,வீடியோ காலில் பேசிக்கொண்டும்,வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி கொண்டும், இரவு 3 மணி வரை மொபைலை கண்ணீர் விட்டு கதற விடுகின்றனர்.இதுதான் திருமண நிச்சியதார்த்தம் ஆன அனைத்து வீடுகளிலும் நடைபெறுகிறது.

தனக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையுடன் ,தன்னையறியாமல் மெல்லிய காதல் அரும்புகிறது.

தனக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை ஒரு கால் செய்ய மாட்டாளா, ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப மாட்டாளா, வாட்ஸ் அப்பில் வரமாட்டாளா ,வீடியோ காலில் வர மாட்டாளா என மொபைலை வெறிக்க, வெறிக்க பார்த்துக் கொண்டே வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

இங்கு தான் காதல் என்ற ஒரு விஷயம் அரும்புகிறது . அதுவரை தூங்கிக் கொண்டிருந்த சுக்கிரன் துள்ளி எழுந்து உட்கார்ந்து ,சரக்கடித்து ,சாவு குத்துக்கு ஆடுவது போல் ,காதல் ரசம் ,சொட்ட சொட்ட கவிதை மழை பொழிவார்.

காதலுக்கு காரகன் சுக்கிரனே.

திருமணம் நடைபெற ஏழாம் அதிபதியின் தயவும் கண்டிப்பாக தேவை.

திருமணத்தின் மூலம் தாம்பத்தியத்திற்கு முறையான லைசன்ஸ் வழங்கப்படுகிறது.

அம்மா ,அப்பாவிற்கு தெரியாமல் ஆண்ட்ராய்டு மொபைலில், பிட்டு படத்தை எல்லாம் பெட்டு கட்டி, மொத்தமாக பார்த்து,அடக்கி வைத்திருந்த ஆசைகளெல்லாம், அணை திறந்துவிட்டது போல் , தீர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

காதலின் முடிவே காமம் .இந்த இரண்டிற்கும் காரணம் சுக்கிரனே.

முறையான தாம்பத்தியத்தின் மூலம் கரு உண்டாகி, கரு குழந்தையாக வளர்ந்து, அந்த குழந்தை அந்த தம்பதிகள் உடன் சேரும் பொழுது குடும்பம் என்ற அமைப்பு உண்டாகிறது.

அதுவரை தம்பதியாக இருந்தவர்கள் ,குழந்தை அவர்களுடன் இணையும் பொழுது குடும்பம் என்ற அடுத்த நிலைக்கு செல்கின்றனர்.

மேற்சொன்ன கருத்துக்களையெல்லாம் ஜோதிட ரீதியாக ஒரே புள்ளியில் இணைத்துப் பார்த்தால் அந்த காலகட்டமே திருமணம் ஆகும் .ஆகியிருக்கும்.

இந்த விதி 200% எந்த ஒரு ஜாதகத்திலும் துல்லியமாக இருக்கும்.

இதை எப்படிப் புரிந்து கொள்ளலாம் என்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெண் மூலமாக காதல் கிடைக்கப்போகிறது அல்லது தாம்பத்தியம் கிடைக்கப்போகிறது(முறையான தாம்பத்யம்) அல்லது அதனால் குழந்தை கிடைத்து குடும்பமாக கூடிய அமைப்புகள் உங்களுடைய ஜாதகத்தில் அதனுடைய தசாபுத்திகள் நடைபெறும் பொழுது நிச்சயமாக உங்களுக்கு திருமணம் ஆகும்.

இங்கு ஏழரைச் சனி ,அட்டமச் சனி குரு பார்வை, குரு பலம் வந்து விட்டது என்ற எந்த ஒரு விஷயத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சில நேரங்களில் ராகு கேதுக்கள் ,நான் மேலே சொன்ன கிரகங்களின் நட்சத்திரத்தை பெற்றிருப்பார்கள்.

அந்த நேரத்தில் ராகு கேதுக்களே திருமணத்தை நடத்தி வைப்பார்.

என்னுடைய ஜாதகத்திலும் ராகுவே திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமண தோஷம் பலமாக இருந்தால் இந்த விதி 100% துல்லியமாக பொருந்தாது.

ஆனால் திருமணம் ஆவது என்னென்னவோ ,மேற்சொன்ன அமைப்புகள் இருக்கும் பொழுதுதான்.

தோஷத்திற்கேற்ப மாறுபடும்.

ஜாதகத்தில் களத்திர தோஷம் ,புத்திர தோஷம்,குடும்ப தோஷம்,சுக்ரன்,குருவின் நிலை எந்த அளவிற்கு உள்ளது என்பதை கணித்து மேற்சொன்ன அமைப்புகளை கூட்டி, கழித்து சரியான முறையில் பலனை நிச்சயமாக எடுக்க இயலும்.

களத்திர தோஷம் ,குடும்ப தோஷம், புத்திர தோஷம், சுக்கிரன் ,குரு இருக்கும் நிலை, ஏழாமிடம் கெட்டிருக்கும் நிலை ,ராசிக்கு ஏழாம் அதிபதியின் நிலை , நடப்பு தசா புத்தி, காதல் ,தாம்பத்தியம் குழந்தைபாக்கியம் இவற்றை பெறக்கூடிய அமைப்புகள் தற்போது நடைமுறையில் செல்கின்றனவா என்பதை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து தான் திருமணம் எப்பொழுது முடிவாகும் என்பதை நிச்சயமாகக் கூற இயலும்.

இரண்டாவதாக ,காலத்திற்கு ஏற்றபடியே ஜோதிடம்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 15 வயதிற்கு கீழ் ஆகவே திருமணம் நடந்தது.

தேசத் தந்தை காந்தியடிகளுக்கு கூட சிறுவர் திருமணம் என்ற அமைப்பிலேயே திருமணம் நடந்தது.

இன்றிருக்கும் காலகட்டங்களில் பெண் குழந்தைகள் அதிகபட்சமாக 10 வயதிற்குள் பூப்பெய்தி விடுகின்றனர்.

இன்று அரசே ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18 என்ற திருமண வயது வரம்பை நிர்ணயித்து விட்டது. அதற்கு கீழ் திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம்.

18 வயது என்பது அதிகபட்சமாக பெண் பள்ளி இறுதியாண்டு முடித்து, கல்லூரியில் முதலாமாண்டு சென்று கொண்டிருப்பார்.

கல்லூரிப் படிப்பை முடிக்க ஏறக்குறைய 21 வயது ஆகும்.

21 வயதிற்கு பிறகு களத்திர தோஷம் இல்லாமல் ,மேற்கூறிய அமைப்புகள் நடைமுறையில் இருந்தால் ,அந்த காலகட்டங்களில் திருமணத்திற்கு முயற்சி நடைபெற்று கொண்டிருந்தால் நிச்சயமாக அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்கும்.

இந்த அமைப்புகள் எல்லாம் ஒரே புள்ளியில் அமையும் பொழுது ,உங்கள் வீட்டிலும் மாங்கல்யம் தந்துநானெ என மந்திரம் ஒலித்து மணமகளே மணமகளே வா , உன் வலது காலை எடுத்து வைத்து வா என்ற மங்கள பாடலால் காது இனிக்கும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More