விழிகள் அச்சடிக்க
உதடுகள் உச்சரிகக்க
நெஞ்சம் நச்சரிக்க
இதயத்தை எச்சரிக்க
வருகிறது காதல்
வழி விடுங்கள் !
வாழ விடுங்கள் !!
காதல் என்பது இரு மனங்களில் ஏற்படும். அன்பின் பரிமாற்றத்தின் வெளிப்பாடே !
காதல் இன்றைய ஆண் /பெண்களின் மனதில் நிறைந்துள்ளது.இதைப் பற்றி பாடாத கவிஞர்கள் இல்லை எனலாம்.காதல் பற்றி சினிமா பத்திரிக்கை அதிகமாக கூறியுள்ளது.
காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல்
உனக்கும் எனக்கும் விரும்பம்
கண்ணும் கண்ணும் சந்திக்கின்றன. உடலும் உடலும் துடிக்கின்றன. அஏதோ ஒரு வகையில் ஈர்க்கப் பட்டு காதல் ஆரம்பமாகின்றது.
காதல் கனவு நனவாகுமா? தோல்வியில் முடியுமா? ஜோதிட ரீதியாக ஆராய்வோம்.
ஒருவருக்கு காதல் திருமணம் தானா ? என ஆராய்வோம்.
காதல் தொன்றுவதற்கு மனசு முக்கிய பங்குவகிக்கிறது.மனதுக்கு காரகர், உடல் காரகர், சஞ்சலத்தை தருபவர் சந்திரன் -ராகு ஒரு தலைக்காதல் சந்திரன்.
காதலித்தால் மட்டும் போதுமா ? துணிவான முடிவெடுக்க உதவுபவர், தைரியத்துக்கு காரகர் செவ்வாயின் உதவி தோவை.
காதல் இளவரசன், அதிதேவதை, அறியாத வயதில் அறிய வைப்பார்.பெண்களுக்கு /ஆண்களுக்கு பரஸ்பரம் புறிந்து கொள்ளும் காதல், இளமையில் ஏற்ப்படும் காதலும், கல்விக்கூட காதலுக்கும் காரகர் புதன்.
சமுதாய ஆச்சாரங்ககள், கட்டுப்பாடுகள், உயர் வகை காதல், மதிப்பு மிக்கவை காதல் வர குருவே காரகம்.
காதலுக்கு இணம் புறியாத பாசத்திற்கும், இன்பத்திற்கும்.ஆடம்பரம் அழகு, எதிர்பாலினத்தை ஈர்க்கும் சக்தியை தருபவர், வசீகரத்தின் காரகர் சுக்கிரன்.
சனி அவமானத்தையும், முறையற்ற காதலையும், தாமதத்தையும் தருவார்.
குழப்பம், திடீர்முடிவுகள், ஒருவரை அடைய மாந்திரீக /செய்வினை செயல்கள்.துண்டிக்கும், ஏமாற்றுத்தன்மை, பல பொய் செல்லி பிறரை அடைவர், மதம்மாறிய, குலம் மாறிய -வழக்கத்துகு மாறான அனைத்து திருமணங்களுக்கு காரகர் ராகு புதன் -ராகு காதல் தடை, ஒரு தலைக்காதல்.
சட்டரீதியாக திருமணம், பதிவு திருமணம், காதல் உருவாக்குவது, உணர்ச்சி பூர்வமாக மாற்றும் கேது காரகர்.
காதலுக்கான ராசிகள் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ராசிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பொற்றால் காதல் கை கூடும்.
துலாமில் சுக்கிரன் அமைந்து மற்ற ராசிகளும் கை கொடுக்குமானால் காதல் கை கூடும்.
லக்னம் உயிர் இணைபிரியாத அன்பு, பாசம், பதம் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் மனோபாவம் ஒருவரின் விருப்பத்தை மற்றவர் கேட்டு அதன்படி நடக்கும் நிலை உடல் கவர்ச்சி இவற்றை காண உதவும்.
குடும்பத்தில் வறவிருக்கும் நபரையும்,ஒற்றுமை குரிப்பது இரண்டாம் வீடு.
ஒருவரின் தைரீயம், வீரிய, போகம், ஒழுக்கத்தன்மைகள், அறிய முன்றாம் வீடும்.
காதலலில் சிக்குவாரா? இருமனம் ஒன்றிபோகுமா? விருப்பு, வெறுப்பு, காதல் கனவுகள் மயங்கும் தன்மை, காதல் வகையினை அறிய ஐந்தாம் வீடு அறிவுர்தும் .
திருமணத்தினால் உண்டாகும் உறவின் தன்மை இருவரின் தகுதி நிலை, பெற்றோர் மற்றும் சமூக, சமுதாய அங்கீகாரத்தைக் குறிக்கும். ஏழாம் வீடாகும்
ஒருவரின் ஆசைகளின் தன்மை நிறைவேறும் தன்மையை அறிய பதினொன்றும் வீடு அறிவுர்த்தும்.
மிதுனம், கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சப்தமாதிபதி குரு இந்த உபய லக்கினத்திற்கு குரு திருமணத்தை மிகவும் தாமதப்படுத்தி முடிக்கிறார். இவர்களை காதலில் ஈடுபடுத்தி பின்பு இருவரும் பல வருடங்கள் பிரிந்து திடீரென ஒரிடத்தில் எதிர் பாராமல் சந்தித்து அதன் அதன்பின்னர் திருமணத்தை நடத்தி வைப்பார்.
சுக்கிரன் செவ்வாய் 5-பாவத் தொடர்பு ஏற்பட்டால் காதல் கனியும்.
ஏழாம் அதிபதிக்கும் தொடர்பு ஏற்பட்டால் காதல் திருமணம் அமையும்.
பொதுவாக எந்த ராசிகளுக்கும் 5-9-ஆம் ராசியாகி அமைபவருடன், காதல் ஏற்படும்.
ஒரு ராசிக்கு 3-4-7-11-ஆம் ராசிக்காரர்களுடன் நண்பர்களாகி நட்பாக அமைய வாய்ப்புண்டு.
ஒரு ராசிக்கு ஏழாவது ராசிக்காரருடன் காதல் மலர வாய்ப்புண்டு.
ஐந்தாம் அதிபதி ஏழாம் அதிபதியும் இணைந்திருப்பது. அல்லது அதிபதி ஐந்தாம் இடத்தில் இருப்பது அல்லது ஏழாம் அதிபதிக்கும் ஐந்தாம் அதிபதி பார்வை பெறுவது அல்லது ஏழாம் அதிபதியின் நட்சத்திரத்தில் ஐந்தாம் அதிபதி இருப்பது, ஐந்தாம் அதிபதியின் நட்சரத்தில் ஏழாம் அதிபதி இருப்பது காதல் திருமணம் அமையும்.
ஒன்பதம் அதிபதிக்கும், வீட்டிற்க்கும் ஐந்தாம் அதிபதிக்கும் தொடர்பு ஏற்பட்டால் காதல் கை கூடும்
களத்திரக்காரனாகிய சுக்கிரன், ஏழாம் அதிபதிகளை சனி பார்த்தால்,சுக்கிரன், சனி ஏழாம் இணைந்திருந்தால் காதல் திருமணம்.
லக்கினத்திற்கு 1-5-9-ல் சுக்கிரன் இருப்பதும்.
சந்திரன், சுக்கிரன் இணைந்து நீர் இருந்தாலும் காதல் திருமணம்.
பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் உள்ள ராசியும், ஆணின் ஜாததில் சுக்கிரன் உள்ள ராசியும் ஒரே ராசியானால் கண்டதும் காதல் ஏற்படும்.
Comments are closed.