ஜோதிடத்தில் கேதுவும் ,விநாயகரும்
கேது , நைசர்க்கிய பலத்தின் அடிப்படையில், கிரகங்களில் மிக வலிமையான கிரகம்.
மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு கேதுவிற்கு உண்டு.
ஆம், கேதுவுடன் சேரும் எந்த ஒரு கிரகமும், கேதுவை பலவீனப்படுத்த முடியாது.
அசுபத்துவம் பெற்றதாக மாற்ற முடியாது.
கேதுவுடன் சேரும் பாபகிரகங்கள் கூட , கேதுவின் ஆளுமைக்குள் வந்துவிடும்.
ஜோதிடத்தில் , முழு முதல் பாவ கிரகங்கள் என்று சனி, ராகு, செவ்வாய் குறிப்பிடப்படுகின்றன .
சூரியன் அரை பாவர்.
பாவ கிரகமான ,பாம்பின் உடலில் தலைப்பகுதியை கொண்ட ராகு, கேதுவுடன் இணைய வாய்ப்பு இல்லை
காரணம்.
கேதுவிற்கு 180 டிகிரியில், ராகு நின்று கேதுவை பார்க்க மட்டுமே முடியும்.
ஜோதிட விதிப்படி ராகுவும் , கேதுவும் இரு எதிரெதிர் துருவங்கள் . இணையவே முடியாது.
மற்றொரு பாவ கிரகமான சனி, கேதுவுடன் இணையும் பொழுது சூட்சும வலுவை பெறும்.
Jothida Rathna Chandrasekaran Post
கேது பாவத்துவம் அடையாது.
( ஆனால் சனி+ராகு கடுமையான பாவத்துவ அமைப்பு)
மற்றொரு பாவ கிரகமான செவ்வாய், கேதுவுடன் இணையும் பொழுது ,பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. காரணம் ஜோதிடத்தில் கேது, செவ்வாயின் பிரதிபலிப்பு.
மற்றோரு பாவ கிரகமான சூரியன், கேதுவுடன் இணையும் பொழுது சூரியன், கிரகணபடுமே தவிர , கேது பலவீனப்படாது.
மற்ற சுப கிரகங்களுடன் கேது சேரும்பொழுது சொல்லனா சுபத்துவம் பெறும்.
நவகிரகங்களில் இந்த அமைப்பு வேறு எந்த கிரகத்திற்கும் பொருந்தாது.
கேது கொடுக்கும் துன்பம், பெரும்பாலும், ஞானத்தை கொடுக்கக்கூடிய அமைப்பாகவே இருக்கும்.
குறிப்பாக எட்டாமிடத்தில் இருந்து சுப தொடர்பின்றி கேது திசை நடத்துவது, துன்பத்தை தூக்கலாக தரும்.
சூரியன் கேதுவுடன் சேர்ந்து இருந்து, சூரியன் பலவீனப்பட்டு இருந்தாலும், கேது திசையும் சுமாராகத்தான் இருக்கும்.
சிம்ம வீட்டில் கேது இருந்து சுப தொடர்பற்று , கேது திசை நடத்தினாலும் பிரச்சினைகள் மேலோங்கும்.
மகர லக்கினத்திற்கு கேது ,தன் பகை வீடான சிம்மத்தில் அமர்ந்து திசை நடத்தும் பொழுது 200% இந்த அமைப்பை உறுதியாக வழங்கும்.
பொதுவாக செய்து 3,6,11-ஆம் இடங்களில் இருந்து சுப அமைப்புகளை பெறும்பொழுது கேதுதிசை ஓரளவு யோக திசை ஆகவே அமையும். (ராகு திசை அளவிற்கு எதிர்பார்க்க வேண்டாம்).
சிம்மத்தை தவிர எந்த வீட்டில் சுப அமைப்பில் இருந்தாலும், ஓரளவு நல்ல யோக பலனைக் கொடுக்கும். இருந்தாலும் கேதுவிற்கு பிடித்த வீடுகள் என்றால் கடகம், கன்னி கும்பம்.
கேது உச்சம் பெறும் விருச்சிக ராசியில் சுப அமைப்பில் இருந்தாலும், நல்ல ஞானத்தை கொடுக்கும். ( இங்கு யோகபலன் என்பது இரண்டாம் பட்சம். ஆனால் ஞானம் முதல் நிலையாக இருக்கும்)
கேது, குரு மற்றும் சனியுடன் இணைவது ஆன்மீகத் துறையில் அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.
மற்ற கிரகங்கள் கேதுவுடன் இணையும் பொழுது ,இணைவின் அளவைப் பொறுத்து ,இணையும் கிரகங்கள் பலவீனப்படும்.
லக்னம் , லக்னாதிபதியுடன் கேது தொடர்பு கொள்ளும்பொழுது ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஞானத்தைக் கொடுக்கும் . தடை தாமதங்கள் தொடர்ந்தாலும் , தனி வழியில் செல்ல வைக்கும்.
முக்கிற்கு முக்கு அமர்ந்திருக்கும், முழு முதல் மூலப்பொருளான, மூஷிகவாகனனான விநாயகரே கேதுவிற்கு அதிதேவதை
கேது திசை நடப்பவர்கள், முழு முதற்கடவுளான விநாயகரை பற்றி கொள்வது, மிகச்சிறந்த நல்ல பலனைக் கொடுக்கும்.
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி அன்று, விரதம் இருந்து , மாலையில் விநாயகரை வழிபடுவது அளவற்ற நல்ல பலனைக் கொடுக்கும்.
உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று கற்பக விநாயகர் குடியிருக்கும் பிள்ளையார்பட்டி சென்று, உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்வது, மிகச்சிறந்த நல்ல பலனை வாரி வழங்கும்.
விநாயகர் அகவல் படிப்பது விருப்பங்களை விரைந்தோடி வரவைக்கும்.
கேதுவிற்கு மற்றொரு அதிபதி சித்திரகுப்தர்.
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் சித்திரகுப்தருக்கு தனி கோவில் உள்ளது .அங்கும் வழிபடலாம்.
கீழ்பெரும்பள்ளம் கேதுவின் தனி அடையாளம்.
கேது திசை கொடுக்கும் ஞானம் காலத்தால் அழியாதது .கேது திசை வந்தால் வெறுப்பில்லாமல் விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.