ஜோதிட பரிணாமங்களும் பலன்கள் துள்ளியபடுதலும் பகுதி 1

ஜோதிட முன்னுரை

3,962

உச்சிஷ்ட மஹா கணபதி துணை

 

ஜோதிடங்கள் முன்னுரை:  பகுதி 1

 

ஜோதிட பரிணாமங்களும் + பலன்கள் துல்லியபடுதலும்.

 

1 ஜோதிட பரிணாமங்கள்.

 

1 பிருகு நாடி

( கிரக காரகதுவங்கள் + கிரக கோட்சார பலன்கள் )

 

2 சப்தரிஷி நாடி

( கிரக காரகதுவங்கள் + பாவ காரகதுவங்கள் + கிரக கோட்சார பலன்கள் )

 

3 ஆர்ஜி ராவ் நாடி

( பாகைகள் ( degere ) அடிபடையில் கிரக சேர்கை + கிரக கோட்சார பலன்கள்)

 

4  பாரம்பரியம் ஜோதிடம் முதல்நிலை

( லக்னம் + ஆதிபத்திய பலன்கள் + திசா புத்தி பலன்கள் )

 

5 பாரம்பரியம் இரண்டாம் நிலை

( லக்னம் + சார ஆதிபத்திய பலன்கள் + திசா புத்தி பலன்கள் )

 

6 கிருஷ்ணமூர்த்தி பத்ததி கேபி முதல் நிலை

( லக்னம் + சாரம் + உப சாரம் + கிரகங்கள் அடிபடையில் ஜாதக அமைப்பு மற்றும் திசா புத்தி பலன்கள் + நட்சத்திர கோட்சார பலன்கள் )

 

7 கேபி அட்வான்ஸ் கேபி இரண்டாம் நிலை

( லக்னம் + சாரம் + உப சாரம் + பாவங்கள் அடிப்படையில் ஜாதகங்கள் அமைப்பு மற்றும் திசா புத்தி பலன்கள் + நட்சத்திர கோட்சார பலன்கள் )

 

8 பாவங்களின் விரிவான உள்தோடர்புகள்.

( ஒரு பாவத்தின் அதிபதி + பாவாதிபதி நின்ற நட்சதிரநாதன் + பாவதிபதியின் உப நட்சதிரநாதன் 3 அதிபதிகளும் 12 பாவங்களுடனும் கொள்ளும் தொடர்பு பலன்கள் பாவங்களின் விரிவான உள்தொடர்புகள் எனப்படும். அதாவது 100 % அளவு ஒரு பாவத்தின் விதிகொடுபினையை மற்றும் மதிகொடுபினை ( திசா புத்தி பலன் ) பலனை அறியலாம் )

 

குறிப்பு:

மேலே குறிப்பிட்டவை ஜோதிடத்தின் தொடக்க காலம் தொட்டு இன்று வரை ஜோதிடத்தின் பரிணாம வளர்சிகள் ஆகும்.

 

2 ஜோதிட பரிணாமங்களால் பலன்கள் துள்ளியப்படுதல்.

 

உதாரனம்: தொழில்.

 

10 ஆம் பாவத்தில் சனி சுக்கிரன்.

 

( நாடி ஜோதிட கிரக சேர்கை விதிகள் மற்றும் நாடி ஜோதிட கோல்டன் ரூல்ஸ் நாடி ஜோதிட வகுப்பு பதிவுகளில் காணலாம். இப்பதிவு ஜோதிட பரிணாமங்கள் மற்றும் பலன்கள் துல்லியபடுவதற்கு விளக்க உதாரனம் மட்டுமே )

 

1 பிருகு நாடி பலன்:

 

விளக்கம்:

சனி தொழிலுக்கு காரக கிரகம் ஆகும். சனி சுக்ரன் அமர்ந்த பாவதிலிருந்து 5 மற்றும் 9 ஆம் பாவங்களில் ( ஒரே திசை 1 5 9 திரிகோணம் ) இருக்கும் கிரகங்கள் அ கிரகங்கள் இருந்தால் சனி சுக்ரனோடு இனைந்து சேர்கை பெற்று இருபது போல அந்த கிரகங்களுடனும் சேர்கை பெற்று இருக்கிறார் என்பது கிரக சேர்கை விதிகள் அமைப்பு இது முதல் தரமான கிரக சேர்கை பலன்.

 

குறிப்பு:

ஜோதிட முன்னோட்ட பதிவுகளில் 1 5 9 என்னும் திரிகோண சேர்க்கைக்கு கேதுவின் நட்சத்திரங்கள் முலமும் மற்றும் கிழக்கு திசா முலமும் சிறு உதாரன விளக்கம் தந்துள்ளேன். ஜோதிட முன்னோட்ட பதிவுகளை காணவும்.

 

சனி சுக்ரன் அமர்ந்த பாவதிலிருந்து 2 மற்றும் 7 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்கள் அ கிரகங்கள் இருந்தால் சனி சுக்ரனோடு இனைந்து சேர்கை பெற்று இருபது போல அந்த கிரகங்களுடனும் சேர்கை பெற்று இருக்கிறார் என்பது கிரக சேர்கை விதிகள் அமைப்பு இது இரண்டாம் தரமான கிரக சேர்கை பலன்.

 

இதே போல சனி அமர்ந்த பாவத்திலிருந்து 3 மற்றும் 11 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களும் சனியுடன் சுக்ரன் சேர்கை பெற்று இருபது போல இது முன்றாம் தரமான கிரக சேர்கை விதிகள் பலன்.

 

பிருகு நாடி ஜோதிட ஜாதக அமைப்பு படி கொடுபினையாக தொழிலுக்கு உரைக்கப்படும் பலன்:

சனி முதல் தரமாக சேர்கை பெரும் கிரகங்களின் காரகதுவ தொழில்கள் முதல் தர பலனாகவும் ….சனி இரண்டாம் தரமாக சேர்கை பெரும் கிரகங்களின் காரகதுவ தொழில்கள் இரண்டாம் தர பலனாகவும்…..சனி முன்றாம் தரமாக சேர்கை பெரும் கிரகங்களின் காரகத்துவ தொழில்கள் முன்றாம் தர பலனாகவும் உரைக்கப்படும் அல்லது சனி தான் அமர்ந்த பாவதிளிருது 1 5  9 / 2 7 / 3 11 பாவங்களில் சேர்கை பெரும் கிரகங்களின் காரகத்துவ தொழில்கள் பலன்களாக உரைக்கப்படும்.

 

சப்தரிஷி நாடி பலன்:

 

1 கிரககாரகதுவங்கள்

 

விளக்கம்:

சனி தொழிலுக்கு காரக கிரகம் ஆகும். சனி சுக்ரன் அமர்ந்த பாவதிலிருந்து 5 மற்றும் 9 ஆம் பாவங்களில் ( ஒரே திசை 1 5 9 திரிகோணம் ) இருக்கும் கிரகங்கள் அ கிரகங்கள் இருந்தால் சனி சுக்ரனோடு இனைந்து சேர்கை பெற்று இருபது போல அந்த கிரகங்களுடனும் சேர்கை பெற்று இருக்கிறார் என்பது கிரக சேர்கை விதிகள் அமைப்பு இது முதல் தரமான கிரக சேர்கை பலன்.

 

சனி சுக்ரன் அமர்ந்த பாவதிலிருந்து 2 மற்றும் 7 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்கள் அ கிரகங்கள் இருந்தால் சனி சுக்ரனோடு இனைந்து சேர்கை பெற்று இருபது போல அந்த கிரகங்களுடனும் சேர்கை பெற்று இருக்கிறார் என்பது கிரக சேர்கை விதிகள் அமைப்பு இது இரண்டாம் தரமான கிரக சேர்கை பலன்.

 

இதே போல சனி அமர்ந்த பாவத்திலிருந்து 3 மற்றும் 11 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களும் சனியுடன் சுக்ரன் சேர்கை பெற்று இருபது போல இது முன்றாம் தரமான கிரக சேர்கை விதிகள் பலன்.

 

சப்தரிஷி நாடி ஜோதிட ஜாதக அமைப்பு படி தொழிலுக்கு கொடுப்பினையாக உரைக்கப்படும் பலன்:

 

சனி முதல் தரமாக சேர்கை பெரும் கிரகங்களின் காரகதுவ தொழில்கள் முதல் தர பலனாகவும் ….சனி இரண்டாம் தரமாக சேர்கை பெரும் கிரகங்களின் காரகதுவ தொழில்கள் இரண்டாம் தர பலனாகவும்…..சனி முன்றாம் தரமாக சேர்கை பெரும் கிரகங்களின் காரகத்துவ தொழில்கள் முன்றாம் தர பலனாகவும் உரைகப்படுவதையும் அல்லது சனி தான் அமர்ந்த பாவதிளிருது 1 5  9 / 2 7 / 3 11 பாவங்களில் சேர்கை பெரும் கிரகங்களின் காரகத்துவ தொழில்கள் பலன்களாக உரைகபடுவதையும் கிரககாரகதுவங்கள் வகையில் பலன் குற ஒரு கணக்கில் வைத்து கொண்டு மேலும் பலன்கள் துல்லியமாக காண சனி முதல் சேர்கை பெரும் அணைத்து கிரகங்களின் ஆதிபத்திய பாவங்களை பலன்களை துல்லியபடுத்த இரண்டாவதாக கீழ்வருமாறு கணித்தல் வேண்டும்.

 

2 பாவகாரகங்கள்:

 

( 12 பாவகாரகங்களையும் சப்தரிஷி நாடி வகுப்பில் பயிலலாம் )

 

( உதாரனம் அனலிஸ் ஜாதகம் கும்ப லக்னம் )

 

( பல கிரகங்கள் சேர்கை பெறலாம் உதாரனம் சுக்ரனுக்கு மட்டும் )

 

விளக்கம்; கும்ப லக்னத்துக்கு சனியோடு சேர்கை பெரும் இந்த சுக்ரன் ரிஷிபம் 4 மற்றும் துலாம்  9 அதாவது 4 மற்றும் 9 ஆம் பாவங்களுக்கு அதிபதி ஆவார்.

 

4 ஆம் பாவம் சில காரகதுவங்கள்:

4 ஆம் பாவகாரகதுவங்களில் சில வண்டி வாகனம் வீடு போன்றவை 4 ஆம் பாவகாரகதுவங்களில் அடக்கம் + சுக்ரன் கிரககாரகதுவம் வண்டி வாகனம் வீடு போன்றவை குறிக்கும் காரக கிரகம்  அதனால் வண்டி வாகன கன்சல்டன்ட் மட்றும் ரியல் எஸ்டேட் especially வீடு போன்ற தொழில்களையும் இரண்டாம் தரமாக சப்தரிஷி நாடி ஜோதிட படி தொழில் அமைப்பாக பலனை இன்னும் கொஞ்சம் துல்லிய படுத்தலாம் மேலும் சனி ( எஸ்டேட் நிலங்களை குறிக்கும் கிரக காரகர் ). மேலும் இதே சனி முதல் தரமாகவும் இரண்டாம் மற்றும் முன்றாம் தரமாக அதாவது 1 5 9 / 2 7 / 3 11 பாவங்களில் சேர்கை பெரும் கிரகங்களில் செவ்வாய் இருப்பின் விவசாய நிலம் சம்பந்தமாகவும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம் எனவும் துள்ளியபடுதலாம் மேலும் பருமனான மசினரி தொழில்கள் செய்யலாம் எனவும் துள்ளியபடுதலாம் காரணம் செவ்வாய் கிரக காரகத்துவம் விவசாய நிலம் மட்றும் கடின உழைப்பு  + 4  ஆம் பாவ காரகத்துவங்களில் வண்டி வாகனம் நிலம் புலம் மற்றும் எதையும் உற்பத்தி செய்யும் பருமனான மசினரி தொழில்கள் போன்றவை அடக்கம் மேலும் சனி கடின உழைப்புக்கு காரக கிரகம். இன்னும் ஒரு படி 2 ஆம் பாவம் அணிகலன்களை குறிக்கும் 4 ஆம் பாவம் 2 ஆம் பாவத்தின் அபிவிருத்தி பாவமாகும் சுக்ரன் கிரக காரகத்துவம் அணிகலன் ஆகும் + 4 ஆம் பாவ காரகத்துவம் தாராளமாக காசு பணம் புரளுவதை குறிக்கும் 4 ஆம் பாவதிபதியாக சுக்ரன் ( காசு பணம் ) கும்ப லக்னத்துக்கு வருகிறார் சோ, நகை சம்பந்தமான தொழில் வியாபாரம் போன்றவையையும் add செய்யலாம்.

 

9 ஆம் பாவம் சில காரகதுவங்கள்:

சனி முதல் தரமாகவும் இரண்டாம் தரமாகவும் மற்றும் முன்றாம் தரமாக சேர்கை பெரும் கிரகங்களில் அதாவது 1 5 9 / 2 7 / 3 11 ஆம் பாவங்களில் சேர்கை பெரும் கிரகங்களில் கேது இருந்தால் ஆன்மீகம் மற்றும் ஜோதிட தொழில்களை குரலாம் காரணம் கேது ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்திற்கு காரக கிரகம் + 9 ஆம் பாவம் காரகத்துவங்களில் சில்  ஆன்மீகம் அ ராகு இருந்தால் காசு பணத்திற்காக ( சுக்ரன் ) நீண்ட துற பயணம் செய்தல் மட்றும் வெளிதோடர்பை குரலாம் காரணம் 9 ஆம் பாவ காரகத்துவங்களில் நிண்ட துர பயணம் மற்றும் தொலை துர தகவல் தொடர்பு போன்ற சில காரகதுவங்கள் அடக்கம் + ராகு கிரக காரகத்துவம் அந்நிய நபர் அந்நிய இடம் மட்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் IT துறை போன்றவை.

 

குறிப்பு:

12 பாவங்களும் 9 கிரகங்களும் உலகில் உள்ள அணைத்து விசயங்களையும் தன்னுள் கொண்டுள்ளது என்பதே உண்மை. பயனாளிகள் ஓரளவு தேர்ச்சி பெற்றவுடன்  “ over confitent “ எந்த கட்டத்திலும் கொள்ளுதல்  குடாது. ஏனென்றால் கற்றது கிணற்று நிட்சலே ஆனால் ஒரு விசயத்தில் பலன் துளியமாக காண தேவை இங்கு கடல் நிச்சல்.

 

கவனிக்கவும்:

பிருகு + சப்தரிஷி நாடிகளின் முடிவு முதல் தரமாகவும் இரண்டாம் தரமாகவும் முன்றாம் தரமாகவும் அதாவது சனி அமர்த்த பாவத்திலிருந்து 1 5 9 / 2 7 / 3 11 ஆம் பாவங்களில் சனி தொழில் காரகர் சேர்கை ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கிரகங்களுடன் இருக்கிறது.

 

எந்த தொழிலை செய்வது?

 

பிருகு மற்றும் சப்தரிஷி நாடியில் மோஸ்ட்லி முதல்தர சேர்க்கையை பலனாக எடுக்கப்படும் இரண்டு மற்றும் முன்றாம் தர சேர்க்கையை இரண்டாவது சைடு தொழிலாக இரண்டாம் தர சப்போர்ட் தொழிலாக எடுக்கப்படும். ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு பலன் ஏனோ தானோ என்றே தொழில் அமைப்பு பலனே கிட்டும்.

 

ஆர்ஜி ராவ் நாடி:

 

( பாகைகள் ( degeree ) அடிபடையில் கிரகங்களின் சேர்கை ஆர்ஜி ராவ் நாடி ஜோதிட வகுப்பு பதிவுகளில் விளக்கப்படும் )

 

சனி == சுக்ரன் + செவ்வாய் + கேது அ ராகு

( பிருகு மற்றும் சப்தரிஷி நாடியில் )

 

விளக்கம்:

பிறந்த கால ஜெனன ஜாதகங்களில் ராசி மண்டலம் 360 பாகையில் ( degeree ) 9 கிரகங்களின் அமர்வுகள் ஜனன பிறப்பு நேரத்தில் பஞ்சாங்கங்களின் உதவியால் கணிக்கப்பட்டு குறிகப்படிருகும். இன்று பொதுவாக சாதாரண இலவச மென்போருட்களிலேஹே கிரகங்களின் பாகை அமர்வு அறியும் வசதி உள்ளது. பிறந்த விபரங்கள் தந்தால் போதுமானது.

 

ஆர்ஜி ராவ் நாடி முதல் தர கிரகங்களின் ( பாகைகள் ) சேர்க்கைக்கு முதலிடம் முதல் தர வரிசையிலேய்ஹே ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கிரகங்கள் சேர்கை பெற்றால் பாகைகள் சேர்கை படி பலன் துல்லியமாக பிருகு மற்றும் சப்தரிஷி நாடிகளின் பலன்களை துல்லியபடுதும் அதாவது அழகுபடுத்தும் ஒரு பாகை ( degeree ) கண்ணாடி. ஆர்ஜி ராவ் நாடி.

 

உதாரணம் முதல் தர வரிசையில் கீழே அமைப்பு படி கிரகங்கள்:

 

சனி ( 10 )== சுக்ரன் ( 20 ) + செவ்வாய் ( 18 ) + கேது ( 22 ) அ ராகு ( 22 )

 

சனி சேர்கை:

 

சனி === செவ்வாய் + சுக்ரன் + கேது அ ராகு

 

குறிப்பு: எந்த ஒரு கிரகமும் முதலில் சேர்கை பெரும் கிரக காரகதுவங்களைஹே பிரதிபலிக்கும். அடுத்த கிரக காரகதுவங்கள் சேர்கை அனைத்தும் முதலில் சேர்கை பெரும் கிரக காரகதிற்கு சப்போர்ட் மட்டும் தான் அல்லது இரண்டாம் தர காரகதுவங்கள் மட்டும் தான்.

 

விளக்கம்:

சனி முதலில் செவ்வாய் கிரக காரகத்துவ தொழில் சேர்கை பெறுகிறார் + சனி கும்ப லக்னத்துக்கு மேஷம் 3 மற்றும் விருசிகம் 10 ஆம் பாவ காரகங்களின் தொழில் சேர்கை பெறுகிறார். 3 ஆம் பாவம் காரகத்துவங்களில் சில மக்கள் தொடர்பு, தகவல் தொடர்பையும் சுற்றுதல் பயணம் செய்தலை குறிக்கும் பாவம். 10  ஆம் பாவம் அரசுத்துறை அரசியல் ஆளுமை நிர்வாகம் போன்ற காரகதுவன்களை உள்ளடக்கிய பாவம் + செவ்வாய் கிரக காரகத்துவம் ஆளுமை நிர்வாகம் அரசுத்துறை ஆதரவு துறை அரசியல் போன்றவை. மக்கள் தொடர்பு நிர்வாகம் ஆளுமை அரசு ஆதரவு போன்றவற்றின் முலம் சிரமமின்றி சம்பாதிக்கலாம் ( சுக்ரன் ) என்று பலனை மேலும் துள்ளியபடுதலாம். மேலும் ராகு சேர்கை பெற்றால்  3 ஆம் பாவம் மற்றும் 10 ஆம் பாவ காரகதிற்கு அருமை பலன் கிட்டும் காரணம் ராகு மின்னணு பொருட்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் ஆனா கணணி மற்றும் செல்போன் போன்றவற்றிக்கு காரக கிரகம் மேலும் அரசியல் மற்றும் ஆளுமைக்கு அரசுதுரைக்கு பெரிய அளவில் உதவும் காரகர் ஆனால் குறிப்பிடும் தொழில்களில் சுயநலம் தென்படும் லஞ்சம் பொய் பித்தலாட்டம் போன்றவை ராகு கிரக காரகங்கள் ஆகும் அதாவது புறவாழ்வை தந்து அகவாழ்வை அடிப்பவர் அல்லது கேது சேர்கை பெற்றால் செவ்வாய் கிரக காரகதுவங்கள் மற்றும் 3 10 ஆம் பாவ காரகத்துவ தொழில்களில் அவ்வபொழுது தடைபடுதலும், கருத்து வேறுபாடும், தாமதமும், சண்டை சச்சரவும், வம்பு வழக்கும் வந்த வண்ணம் இருக்கும். அதாவது அவ்வபோளுதுதான் காரணம் செவ்வாய் கிரக காரகதுவதிற்கும் + 3 10 ஆம் பாவ காரகதிற்கும் சுக்ரன் + ராகு அ கேது போன்ற கிரக சேர்கை சப்போர்டிவ் மட்டுமே.

 

குறிப்பு:

ஆர்ஜி ராவ் நாடியில் முன்றாம் தர பலன் 3 மற்றும் 11 ஆம் பாவங்களின் கிரக சேர்க்கைகள் குறிப்பிட்ட அதாவது பலன் காணும் ஒரு கிரகம் அமர்ந்த பாகைக்கு 3 11 யில் இருக்கும் கிரகங்கள் 3 பாகைக்குள் முன்னோ பின்னோ சேர்கை பெற்றால் மட்டுமே கிரக சேர்கை பலனுக்கு எடுத்து கொள்ளப்படும். காரணம் பாகை படி பிருகு மற்றும் சப்தரிஷி நாடியின் துல்லிய பலனே ஆர்ஜி ராவ் நாடி அதாவது நாடி ஜோதிடங்களை பொறுத்தவரை முடிவான “ பாசுபதாஸ்திரம் “ ஆர்ஜி ராவ் நாடி ஆகும்.

 

குறிப்பு:

நாடி ஜோதிட வகைகளில் பிருகு நாடி பரிணாமம் சப்தரிஷி நாடி. ஆர்ஜி ராவ் நாடி சப்தரிஷி நாடியை துல்லியமாக அழகு படுத்தி காட்டும் ஓர் அற்புத கண்ணாடி ஆகும். நாடியின் வகைகள் 3 உம கற்றாலே பலன் ஓரளவு துல்லியப்படும். பிருகு நாடி ஜோதிட வகுப்பு பதிவுகளில் கிரக காரகங்களையும் சப்தரிஷி நாடி ஜோதிட வகுப்பு பதிவுகளில் பாவ காரகங்களையும் ஆர்ஜி ராவ் நாடி ஜோதிட வகுப்பு பதிவுகளில்  பாகைகளையும் கற்கலாம்.

 

குறிப்பு:

இதே டாபிக் நாடியின் பரிணாமம் பாரம்பரியம் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை பாரம்பரியத்தின் பரிணாமம் கேபி ஜோதிடங்கள் வகைகளிலும் எவ்வாறு துல்லியமாகப்டுகிறது என்றும் முடிவில் எந்த பலனை குட்டலாம் எந்த பலனை குறைக்கலாம் என்றும் ஜோதிட முன்னுரை பகுதி 2 இல் காணலாம்.

 

ஷேர் செய்யவும் அனைவர்க்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்.

 

இலவசம்! இலவசம்! இலவசம்!

 

பாரம்பரியம் + நாடி + கேபி ஜோதிட நிபுனன் சி,காளிதாஸ்.

 

நாடி ஜோதிட ஜாம்பவான்கள் பிருகு மற்றும் சப்தரிஷி நாதர்களின் உருவ அமைப்பை காணும் பாக்கியம் யான் பெறவில்லை. ஆனால் பிருகு சப்தரிஷி நாடிகளின் பரிணாமம் எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஐயா ஆர்ஜி ராவ் ஐயா அவர்களின் உருவ அமைப்பில் அனைவரையும் காணும் பாக்கியம் பெற்றேன். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More