ஜோதிட பரிணாமங்களும் பலன்கள் துல்லியபடுதலும் பகுதி 2

ஜோதிட முன்னுரை

3,616

உச்சிஷ்ட மஹா கணபதி துணை

 

ஜோதிடங்கள் முன்னுரை: பகுதி 2

 

ஜோதிட பரிணாமங்களும் + பலன்கள் துல்லியபடுதலும்.

 

உதாரனம்: தொழில் ( பகுதி 1 இன் தொடர்ச்சி )

( கும்ப லக்னம் 10 ஆம் பாவத்தில் சனி + சுக்கிரன் )

 

பாரம்பரியம் ஜோதிடம் முதல் நிலை.

( லக்னம் + ஆதிபத்திய பலன்கள் + திசா புத்தி பலன்கள் )

 

யோகங்களும் + ஆதிபத்திய பலன்களும் + திசா புத்தி

 

விளக்கம்:

குரு சுக்ரன் போன்ற சுப கிரகங்கள் 10 ஆம் பாவத்தில் இருந்தால் அமலா யோகம் அ வசுமதி யோகம் என்று யோகங்களும் மேலும் கும்ப லக்னத்துக்கு குரு (2 11) மற்றும் சுக்ரன் ( 4 9 ) ஆம் பாவாதிபதிகள் இந்த சுப ஆதிபத்தியம் பெற்ற  பாவதிபதிகள் 10 ஆம் பாவத்தில இருக்க அவர்கள் திசா புத்தி அருமை என்றும் உரைக்கப்படும்.

 

விதிகளும் விதிவிலகுகளும்;

 

கேந்திரதிபதிதோஷம்:

லக்னத்திலிருந்து 4 7 மற்றும் 10 ஆம் பாவங்கள் கேந்திரஷ்தானங்கள் எனப்படும். சனி செவ்வாய் போன்ற அசுப கிரகங்கள் கேந்திரஷ்தானங்களில் இருந்தால் கேந்திராதிபதி தோசத்தால் சுப விளைவுகளையும், குரு சுக்ரன் போன்ற சுப கிரகங்கள் கேந்திரஷ்தானங்களில் இருந்தால் கேந்திராதிபதி தோஷத்தால் அசுப விளைவுகளையும் தனது திசா அ புத்தி காலங்களிலும்  செய்வார்கள் என்பது பாரம்பரிய ஜோதிட விதி ஆகும்.  ஆகவே சுக்ரன் கிரக காரகதுவங்களும் பாவ காரகதுவங்களும் மேலே குறிப்பிட கிரகங்களின் திசா புத்தி கால கட்டங்களில் மட்டும் கெடு விளைவை தரும் என பிருகு சப்தரிஷி நாடிகள் காட்டிய தொழில் வகையிலான பலன்களை மேலும் துல்லியப்படுதலாம். மேலும் விதி விளகுகளாக இந்த அமலா யோகம் அ வசுமதி யோகம் போன்ற அடிப்படை மற்றும் போதுபலன்களை அடுத்தகட்ட பலன்கள் அப்டடேட் செய்யும் பொழுது கைவிடலாம் அ தூக்கி எரியலாம்.

 

பாரம்பரியம் இரண்டாம் நிலை

( லக்னம் + சார ஆதிபத்திய பலன்கள் + திசா புத்தி பலன்கள் )

 

குறிப்பு:

ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர ஆதிபத்தியங்கள் மற்றும் நட்சத்திர ஆதிபத்திய நாதர் அமர்ந்த பாவ வேலையை 70% உம, தனது ஆத்பத்யங்கள் மற்றும் தான் அமர்ந்த பாவ வேலையை 30% உம செய்வார் என்பது பாரம்பரிய ஜோதிட பரிணாமம் இரண்டாம் நிலை விதியாகும்.

 

திசா அ புத்தி நாதர்களின் சாரம்.

 

இங்கு கேந்திராதிபத்யம் பெற்ற சுக்ரன் திசா அ புத்தி காலங்களை விட ( 30% only ) கேந்திராதிபதி தோஷம் பெற்ற சுக்ரன் கிரக நட்சத்திர சாரம் பெற்ற கிரகங்களின் திசா அ புத்தி காலங்கள் சுக்ரன் கிரககாரகங்களும் பாவகாரகங்களும் கொண்ட தொழில்கள் ( 70%  mostly ) கெடு விளைவுகளை தரும் என சுக்ரன் சம்பந்தப்பட்ட தொழில்களின் பலன்களை மேலும் துல்லியபடுதலாம்.

 

குறிப்பு:

அதாவது கேந்திராதிபதி தோஷம் பெற்ற கிரகங்கள் திசா புத்தியை விட, கேந்திரதிபதி தோஷம் பெற்ற கிரகங்களின் நட்சத்திரங்களில் நின்ற கிரகங்களின் திசா புத்தி கெடுதி அதிகம் தரும் காலம். பாரம்பரியம் இரண்டாம் நிலை ஜோதிடத்திற்கு ஒரு சிறப்பு அதாவது பரிணாம பலன்.

 

சுக்ரன் நட்சத்திரங்கள்:

பரணி பூரம் பூராடம்.

 

விதி வழியே மாற்று தொழில் பலன்

 

சனி தொழில் காரகன் தான் அமர்ந்த பாவதிலிருந்து 1 5 9 / 2 7 / 3 11 ஆம் பாவங்களில் பாகை படியோ அ இரண்டாம் தரமாகவோ முன்றாம் தரமாகவோ சேர்கை பெரும் கிரகங்களின் காரகத்துவம் மற்றும் கிரகம் சம்பந்தப்படும் பாவகாரகதுவ தொழில்களை செய்யலாம் என்று கேந்திராதிபதி தோசத்தை கணக்கில் கொண்டும் மேலும் ஒரு சில கிரக மற்றும் பாவங்களை கணக்கில் கொண்டும் தேவையன்றால் தொழிலுக்கு மாற்றுவழி  பலன் உரைக்கலாம்.

 

குறிப்பு:

ஜோதிட பரிணாமங்களில் லக்னம் கண்டுபிடிப்பு ஜோதிட துறையின் அற்புத மற்றும் அளவிட முடியாத பரிணாம வளர்ச்சி ஆகும். லக்னம் பலனை துல்லியபடுத்த ஓர் அற்புத கண்டுபிடிப்பு ஆகும். இன்று பரிணாமம் பெற்றிருக்கும் அணைத்து ஜோதிட முறைகளுக்கும் தாய் பாரம்பரிய ஜோதிடம் ஆகும்.

 

கிரிஷ்ணமூர்த்தி பத்ததி கேபி முதல் நிலை.

( லக்னம் + சாரம் + உப சாரம் + கிரகங்கள் அடிபடையில் ஜாதக அமைப்பு மற்றும் திசா புத்தி பலன்கள் + நட்சத்திர கோட்சார பலன்கள் )

 

குறிப்பு:

உப சாரம், உப உப சாரம், உப உப உப சாரம் என்பவைகளை பற்றி ஜோதிட முனோட்ட பதிவுகளில் சந்திரனின் பயன நிலை என்று ஒரு சிறு விளக்கம் இருக்கும். விரிவாக கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஜோதிட வகுப்பு பதிவுகளில் காணலாம்.

 

கிருஷ்ணமூர்த்தி பத்ததி:

கிரகங்களின் காரகதுவங்களையும், கிரகங்களின் பாவகாரகதுவங்களையும், பாரம்பரிய ஜோதிட முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலைகளையும் மேலும் ஒரு கிரகம் நின்ற நட்சத்திரநாதன், மற்றும் உப நட்சத்திரநாதனையும் கொண்டு பாரம்பரிய ஜோதிடம் இரண்டாம் நிலை காட்டிய பலனை மேலும் துல்லியபடுதலாம் என்பது கலியுக வராகமித்ரர் ஐயா கேபி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நடைமுறை வாழ்க்கைக்கு மேலும் ஒத்துவரும் உண்மை குற்றாகும்

 

கிருஷ்ணமூர்த்தி பத்ததியில் பலன் துள்ளியபடுதுதல்

 

கேந்திராதிபதி தோஷம்:

அதாவது கேந்திராதிபதி தோஷம் பெற்ற கிரகங்களின் நட்சத்திரங்கலிலோ அல்லது கேந்திராதிபதி தோஷம் பெற்ற கிரகங்களின் நட்சதிரங்கழிலோ நின்ற ஒரு கிரகத்தின் உப நட்சத்திரநாதன் சம்பந்தப்பட்ட கிரகத்தின் காரகதுவங்கள் வகையிலும் பாவகாரகதுவங்கள் வகையிலும் மேலும் உப நட்சத்திரநாதன் அமர்ந்த பாவத்தின் வகையிலும் பாரம்பரிய ஜோதிடம் இரண்டாம்நிலை காட்டிய கேந்திராதிபதி தோசத்தின் பலனை குட்டியோ குறைத்தோ பலனை மேலும் துல்லியப்படுதலாம்.

 

உப நட்சத்திரம்:

1 ஒரு கிரகத்தின் நட்சதிரநாதன் காட்டிய சம்பவத்தை உப நட்சத்திரநாதன் தடுத்தால் கேந்திராதிபதிதோஷம் சம்பந்தமான கெடுதி உடனே தடுக்கப்படும் அ ஒரு குறிபிட்ட அளவே நடைபெற்று மேற்கொண்டு நிகழ்வு தடைபடும். 2 ஒரு கிரகத்தின் நட்சத்திரநாதன் காட்டிய சம்பவத்தை உப நட்சத்திரநாதன் தடுக்காமல் நட்சத்திரநாதன் காட்டிய சம்பவத்தை அபிவிருத்தியோ அ வலிமையோ படுத்தினால் கேந்திரதிபதிதோஷம் சம்பந்தமான கெடுதி மேலும் கூடும்.

 

கேபி அட்வான்ஸ் கேபி இரண்டாம் நிலை

( லக்னம் + சாரம் + உப சாரம் + பாவங்கள் அடிப்படையில் ஜாதகங்கள் அமைப்பு மற்றும் திசா புத்தி பலன்கள் + நட்சத்திர கோட்சார பலன்கள் )

 

கேபி அட்வான்ஸ் ( பாவங்கள் அடிபடையை பலன் ) சிறப்பு:

ஆளும் கிரகங்ககளின் விரிவான பயன நிலைகளால் பிறந்த நேரம் சரிசெய்யபடுதலும், துள்ளியமாகபட்ட ஜாதகத்தில் கடந்தகால சம்பவங்களையும், எதிர்கால சம்பவங்களையும் சந்திரன் ( திசா புத்தி ) துல்லியமாக காண்பித்தல் கேபி அட்வான்ஸ் ( பாவங்கள் அடிபடையில் பலன் ) தனிசிறப்பு ஆகும்.

 

குறிப்பு:

கேபி அட்வான்ஸ்யில் தோசங்கள் மற்றும் நட்பு, பகை, நீசம், ஆட்சி, உச்சம், அஸ்தங்கதம், வக்ரம், இவை போன்ற கான்செப்ட்ஸ் கிடையாது. ஆனால் சில தோசங்களும் உண்டு திருமண பொருத்தங்களும் உண்டு. அனைத்தும் அகவாழ்க்கை மற்றும் புறவாழ்க்கை சதவிதங்களாக கணிக்கப்பட்டு பலன்கள் காணப்படும்.

 

கேபி அட்வான்ஸ்:

ஒரு கிரகம் நின்ற நட்சத்திரநாதன், உப நட்சத்திரங்களின் காரகதுவங்கள் மற்றும் பாவகாரகதுவங்கள் வாயிலாகவும், மேலும் நட்சதிரநாத்ன் மற்றும் உப நட்சத்திரநாதன் பாவங்களின் உள்தோடர்புகள் முலமும், மேலும் நட்சத்திரநாதன் காட்டிய சம்பவத்தை ( கிரககாரகதுவம் பாவகாரகதுவம் ) உப நட்சத்திரநாதன் 4 8  மற்றும் 12 ஆக இருந்து தடுத்தால்  கேபி முதல் நிலையில் காட்டிய சம்பவம் முறையே 60% 80% மற்றும்  100% வகையில்  நிகழாமல் தடுக்கப்படும். அதாவது 40% 20% மட்டும் ஒரு சம்பவம் நிகழும். ஒரு கிரகத்தின் ( கிரக காரகதுவங்களும் பாவகாரகதுவங்களும்) வலிமை குன்றும். மேலும் நட்சத்திரநாதன் காட்டிய சம்பவத்தை உப நட்சத்திரநாதன்  அபிவிருத்தியோ ( 3 11 ) அ வலுபடுதிநாளோ ( 1 5 9 )ஒரு கிரகத்தின் ( கிரக காரகதுவங்களும் பாவகாரகதுவங்களும் ) வலிமை பெரும்.மேலும் சமநிலை விளைவுகள் ( 6 10 ) சமசப்தம விளைவுகள் ( 7 )  குறிபிட்ட விளைவுகள் ( 2 ) என பலன்களை துல்லியபடுத்தலாம்.

 

இதனடிப்டையில் கமிசியன் அடிப்படை தொழில்கள், அடிமை தொழில்கள், சொந்த தொழில்கள், வியாபாரங்கள், குட்டுதொழில்கள், அரசுதுறை என பாவங்களின் பலன் அடிபடையில் தொழில் வகையில் கொடுபினைகளின் வகைகளை அதாவது தொழில்களை துள்ளியபடுதலாம். விதி மதி கொடுபினைகள் வழியே மாற்று பலன் தேர்ந்தெடுக்கலாம்.

 

இங்கு கேந்திரதிபதி தோஷம் பெற்ற கிரகத்தின் பலனை குட்டவோ அ குறைக்கவோ தேவையில்லலை. 1 தூக்கி எறியலாம் 2 கெட்டியாக பிடிச்சுக்கலாம் 3 விதி மதி வழியே நன்றாக காட்டும் தொழில்களை ரெபர் செய்யலாம்.

 

முடிவு:

 

1 கொடுகபட்டவையும் இங்குதான்.

 

2 மருகப்பட்டவையும் இங்குதான்.

 

3 மறைகப்பட்டவையும் இங்குதான்.

 

பாவங்களின் விரிவான உள்தோடர்புகள்.

 

( ஒரு பாவத்தின் அதிபதி + பாவாதிபதி நின்ற நட்சதிரநாதன் + பாவதிபதியின் உப நட்சதிரநாதன் 3 அதிபதிகளும் 12 பாவங்களுடனும் கொள்ளும் தொடர்பு பலன்கள் பாவங்களின் விரிவான உள்தொடர்புகள் எனப்படும். அதாவது 100 % அளவு ஒரு பாவத்தின் விதிகொடுபினையை மற்றும் மதிகொடுபினை ( திசா புத்தி பலன் ) பலனை அறியலாம் )

 

பாவங்களின் விரிவான உள்தொடர்புகள்:

விதி கொடுப்பினை வழியே ஒரு தொழிலை செலக்ட் செய்கிறோம். அந்த தொழிலை குறிக்கும் பாவத்தின் தடுப்பாளிகள் எவரேனும் ஒருவர் அதாவது ஒரு குறிபிட்ட பாவத்தின் 12 ஆம் பாவம், குறிப்பிட்ட பாவத்திலிருந்து வரும்  4 ஆம் பாவம்  மற்றும் குறிப்பிட்ட பாவத்திலிருந்து வரும் 8 ஆம் பாவ கொடுப்பினைகளை அந்த குறிபிட்ட பாவம் தனது பாவ உள்தொடர்புகள் முலம் பெற்றாலோ அல்லது லக்ன பாவத்துக்கு ஆகாத 8 மற்றும் 12 ஆம் பாவ கொடுப்பினை ஏதேனும் ஒன்றை தனது பாவ உள்தொடர்புகள முலம் பெற்றிருந்தாலோ கேபி அட்வான்ஸ்யில் ரெபர் செய்த அந்த தொழிலின் நன்மை பலன்களை 20% குறைக்கவோ அ பாவத்தை வலிமை மற்றும் அபிவிருத்தி செய்யும் பாவ உள்தொடர்புகள் பெற்றிருந்தாலோ கேபி அத்வான்செயில் ரெபர் செய்த அந்த தொழிலின் நன்மை பலன்களை 100% confirm செய்யலாம். மேலே அடைப்புகளில் குறிப்பிட்ட வகையில் பாவங்களின் விரிவான உள்தொடர்பை பயன்படுத்தி பயன்படுத்தும் பொழுது.

 

ஷேர் செய்யவும் அனைவர்க்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்.

 

இலவசம்! இலவசம்! இலவசம்!

 

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன் சி,காளிதாஸ்.

 

பராசாரர் மற்றும் வராஹமித்ரர் ஜோதிட மகான்களின் கலியுக ஜோதிட பரிணாமம் ( அவதாரம் ) எனது மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய ஐயா கேபி கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள்..

 

 

 

 

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More