உட்சிஷ்ட மஹாகணபதி துணை
ஜோதிட வகுப்பு முன்னோட்ட பதிவுகள்
பாரம்பரியம் + நாடி + கேபி ஜோதிடங்கள் மூன்றும் அறிய வேண்டிய அவசியதிற்கான உதாரன பதிவு
உதரணம்:
நீசபங்க ராஜயோகம்.
இந்த நீசபங்கம் உச்சம் நீசம் பகை அஸ்தங்கதம் etc.. போன்ற கான்செப்ட்ஸ் எல்லாம் பாரம்பரியத்தின் முதல்நிலை பரிணாமம் கேபி கிருஷ்ணமூர்த்தி பத்ததி வரை மட்டுமே அடுத்த நிலையான கேபி அட்வான்ஸில் இல்லை கேதுவும் ஒண்ணுதான் சுக்ரனும் ஒண்ணுதான் காரணம் கேபி அட்வான்ஸ்ட் இல் நீசம், அஸ்தங்கதம், பகை, உச்சம் போன்றவை இல்லை கேபி அட்வான்ஸ்ட் வகுப்பில் விளக்கப்படும்.
1. பாரம்பரியம்:
பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு நீசமான கிரகம் ஐந்து வகையில் நீசபங்கம் பெறுகிறது. நீசபங்கம் 5 வகைகள் பாரம்பரிய ஜோதிட வகுப்பில் விளக்கப்படும். இந்த பதிவு அனைத்து வகை ஜோதிடமும் கற்க வேண்டிய அவசியம் ஏன் என்பது மட்டுமே கான்செப்ட்.
விளக்கம்:
பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு கிரகம் நீசம், மேலும் 5 வகையில் எந்த வகையிலும் நீசபங்கம் பெறவில்லை, ஆனால் நீசமான கிரக திசா புத்தி காலங்களில் நல்ல வளர்ச்சி தென்படுகிறது. ஆனால் அக்கிரகம் நடப்பு அல்லது கடந்த கால திசா அ புத்தி நாதர்களாக இருந்து நீசம் ( மேலும் கிரகம் நின்ற சார நாதனும் குறிப்பிடும் படி இல்லை அல்லது சுயசாரம் ) அவுட் என்று கூறினால் வாடிகையாளரிடமிருந்து ஜோதிடருக்கு கிட்டுவது நமுட்டு சிரிப்பு மட்டுமே நல்ல சான்றிதழ் தவறும். இங்குதான் நாடி ஜோதிடம் மற்றும் பாரம்பரியதின் பரிணாமம் கேபி ஜோதிடம் தெரியவேண்டிய அவசியம் முக்கியமாகிறது.
2, கேபி கிருஷ்ணமூர்த்தி பத்ததி:
சிம்பிளாக கேபி ஜோதிட முதல்நிலையான கிருஷ்ணமூர்த்தி பத்ததி மூலம். கேபியில் உபசாரமே முக்கியமாக கருதப்படுகிறது. காரணம் நீசமான கிரகத்தின் முடிவான பயன்நிலையில் ஒரு முக்கிய பங்கு உபசாரம் ( SUBLORD ) ஆகும். அந்த உபசாரம் சம்பந்தப்படும் கிரகம் மற்றும் கிரகம் சம்பந்தப்படும் ஆதிபத்யங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் ( ஆட்சி உச்சம் முலதிரிகோனவீடு அல்லது 2 4 6 10 or 3 7 11 போன்ற வீடுகளில் அமர்ந்திருக்கும். சிம்பிள் ஆக பலன் கிடைக்கும். கிரக உபசாரம் காண ஆளும்கிரகங்கள் உதவிகள் தேவையில்லை.
அல்லது
( அதாவது கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையில் பலன் கிட்டவில்லையென்றால் )
3, நாடி ஜோதிடம்:
நாடி ஜோதிட அவசியங்கள் அறிவதற்கு முன் திரிகோனபாவங்கள் படறிய ஒரு சிறு விளக்கம்.
திரிகோணங்கள்: எந்த ஒரு பாவதுக்கும் அந்த பாவத்திலிருந்து வரும 5 9 ஆம் பாவங்கள் திரிகோனபாவங்கள் ஆகும். குறிப்பிடும் ஒரு பாவம் வலிமை குன்றிருந்தாலும் அதன் திரிகொனபாவங்கள் வலுவாக இர்ருப்பின் அந்த குறிப்பிட்ட பாவம் ஏதோ ஓடும் அ தப்பித்து கொள்ளும். காரணம் ஒரு பாவம் இயங்கும் பொழுது அதன் திரிகொனபவங்களும் இயங்கும் என்பது விதி.
12 பாவங்களின் திரிகோண பாவங்கள்:
1 ஆம் பாவம் வீக் என்றால் 5 9 வலிமை என்றால் 1 ஓடும் அ தப்பிக்கும்.
2 ஆம் பாவம் வீக் என்றால் 6 10 வலிமை என்றால் 2 ஓடும் அ தப்பிக்கும்.
3 ஆம் பாவம் வீக் என்றால் 7 11 வலிமை என்றால் 3 ஓடும் அ தப்பிக்கும்
4 ஆம் பாவம் வீக் என்றால் 8 12 வலிமை என்றால் 4 ஓடும் அ தப்பிக்கும்.
உதாரனம்:
திசைகள் மொத்தம் 4.
கிழக்கு: மேஷம் சிம்மம் தனுஷு 1 5 9
தெற்கு: ரிஷிபம் கன்னி மகரம் 1 5 9
மேற்க்கு: மிதுனம் துலாம் மகரம் 1 5 9
வடக்கு: கடகம் விருசிகம் மீனம் 1 5 9
நட்சத்திரங்கள் முலம் மேலும் ஓர் உதாரனம்:
9 கிரகங்கள் 27 நட்சத்திரங்கள் ஒவ்வொரு கிரகதிர்ச்கும் 3 நட்சதிரங்கள் உதாரனம் கேது நட்சத்திரங்கள் அஷ்வினி மகம் முலம் முறையே மேஷம் சிம்மம் தனுஷு. உதாரனம் கேது நட்சத்திரங்கள் போலவே 9 கிரகங்களின் ஒவ்வொரு நட்சத்திரமும் அதன் திரிகொனபாவங்களில் அமர்ந்திருக்கும். பாரம்பரியம் அடிப்படை வகுப்பில் விளக்கப்படும்.
அஷ்வினி ( மேஷம் ) மகம் ( சிம்மம் ) முலம் ( தனுஷு ) 1 5 9
குறிப்பு:
ஒரு திசா அ ஒரு பாவம் இயங்கும் பொழுது அதன் திரிகொனபாவங்களும் திரிகொனதிசாகளும் ( திசைகள் ) இயங்கும். எந்த ஒரு பாவமோ அ திசாவோ தனித்து இயங்காது. அதன் திரிகொனங்களும் இயங்கும். அதற்க்கு தான் முன்னோர்கள் அமைத்தனர் ஒரே திசை ராசிகளும் ஒரே திசையில் அமைந்த நட்சத்திரஙகளையும். மேலும் பிறப்பு சந்திரன் ( ஜென்ம நட்சத்திரம் ) அஷ்வினியோ மகமோ அல்லது மூலமோ. கடந்த காலங்களில் கேது திசா இருப்பு என எழுதாமல் பெரியோர்கள் அஷ்வினி மகம் முலம் கொண்ட கேது திசா ( திசை ) என எழுதினர் ஆனால் இன்று வழக்கில் இல்லை.
ஆக நாடி ஜோதிட விதிகளின்களின் படியும் பாரம்பரியம் விதிகளின் படியும் நீசம் பெற்ற அந்த கிரக திசா அ புத்தி காலங்கள் அதன் திரிகோண பாவதிபதிகளுடன் ( 5 9 இல் இருக்கும் கிரகங்களுடன் ) இணைந்தே செயல்படும். ஆனால் நீசம் என கிரகம் இருக்கும் 1 ஆம் வீடு மட்டுமே கணக்கில் எடுதுகொள்ளப்படுகிறது. அங்கு ஜோதிட கணிப்பு பலன் ௦%
திரிகோண சேர்கை பலன்கள்:
ஜோதிட விதிகளின்படி சுபாதிபத்தியம் பெற்ற கிரகங்களுடன் சேர்கை பெட்ரிருக்கும். ( நாடி ஜோதிடத்தில் அறிந்தது கிரகசேர்கை மட்டுமே பாவ சேர்கை இல்லை அல்லது உண்டா? என இங்கு கேள்வி எழலாம். நாடியில் 1 பிருகுநாடி கிரககாரகதுவங்கள் அடிப்படையில் பலன், 2 சப்தரிஷிநாடி கிரககாரகதுவங்கள் மட்றும் பாவகாரகதுவங்கள் அடிப்படையில் பலன், 3 ஆர்ஜி ராவ்நாடி டிகிரி அடிப்படை பலன் ) ஆக அணைத்து ஜோதிடங்களும் அறிந்தால் மட்டுமே ஒரு பாவ விதி கொடுபினையும் திசா புத்தி என்ற மதி கொடுப்பினையும் துல்லியமாக பலன் கணிக்க இயலும்……..
குறிப்பு:
நாடி ஜோதிடம், எந்த கிரகமும் தனித்து இயங்காது. நாடி ஜோதிட கோல்டன் ரூல்ஸ் 1 5 9 / 2 7 / 3 11 ( conjection considered only within 3 degree ) என்னவென்றால் தான் இருக்கும் ராசியில் இருந்து மேலே குறிப்பிட்ட பாவங்களில் இருக்கும் கிரகங்களுடன் குறிப்பிட்ட அந்த கிரகம் இணைந்தே செயல்படும்.
இங்கு பதிவில் 1 5 9 சேர்கைக்கு காரணம் விள்ளக்கபடுள்ளது. மீதி நாடி ஜோதிட வகுப்பு பதிவுகளில். ரெபர் செய்யவும் பின்நாளில் வகுப்பு பதிவுகளில் கமெண்ட்ஸ்யில் கேள்விகள் எழலாம்.
குறிப்பு:
சிறந்த ஆசிரியர்கள் மட்றும் சிறந்த இன்ஸ்டிடுட்யின் பிருகுநாடி புத்தகங்கள், சப்தரிஷிநாடி புத்தகங்கள், ஆர்ஜிவ் ராவ் நாடி புத்தகங்கள் அந்தந்த வகுப்பு பதிவுகளில் பரிந்துரைக்கப்படும்.
நேரமின்மையால் ஆளும்கிரகம் பகுதி 3 இரு தினங்கள் கழித்து.
பலபேர் பயன்பெற ஷேர் செய்யவும்….வகுப்பு பதிவுகள் தொடங்கும் முன் பலபேர் இணையலாம்……அனைவருக்கும் ஜோதிடம்
பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன் சி,காளிதாஸ்…..
Comments are closed.