தந்தை சொத்து மகனுக்கு கிடைக்குமா?

2,399

ஜாதகத்தில் தந்தையை குறிக்குமிடம் 9ம்மிடம்.

தந்தையை குறிக்கும் கிரகம் சூரியன்.

அதுபோல் பிள்ளையை குறிக்குமிடம் 5மிடம்.

தந்தையின் காலத்திற்கு பிறகு அவர் சம்பாத்தியம் பிள்ளைக்கு என்றாலும் ஒரே வீட்டிலிருப்பவருக்கு (அண்ணன், தம்பிகளுக்குள் ) சொத்துக்காக வெட்டு, குத்தும் நடக்கிறது.

செவ்வாய் சகோதரனை குறிக்கும் கிரகம்.

லக்னம் என்பது ஜாதகர் அனுபவிக்கும் நன்மை,தீமையை குறிப்பது.

அதுபோல் 4மிடம் சொத்து, வீடு, வாகனத்தை குறிப்பது.

9மிடம் எல்லாம் இருந்தாலும் நாம் அதை அனுப்பவிப்போமா என்பதை குறிக்கும். அதனால் பாக்கிய ஸ்தானம் எனப்படுகிறது.

சூரியனுக்கு கடுமையான எதிரி சனியும், சாயகிரகங்களும்.

ஜாதகத்தில் லக்னாதிபதி, 9ம்பதி பரிவர்த்தனை பெற்றாலும், 9ம்பதியோடு கெடாமல் ஏதேனும் தொடர்பு பெற்றாலும் , லக்னாதிபதி, சூரியனுடன் அஸ்தமனமாகாமல் இணைந்திருந்தாலும் தந்தை சொத்து மகனுக்கு முழுமையாக கிடைக்கும்.

தந்தையாரின் சொத்தை ஜாதகர் வளர்ப்பாரா, தொலைப்பாரா என்பதை லக்னம், 4மிடம், தசா புத்தி, வைத்து தெரிந்து கொள்ளலாம்.

9ல் சூரியன் இருந்து சனி, ராகு அதனுடன் சேர்ந்து இருந்தால் காரகோ நாஸ்திபடியும் தந்தை சொத்து கிடைப்பது கடினம். முதலில் தந்தை சிறப்புடன் இருப்பாரா என்பதே சந்தேகம்.

அதுபோல் செவ்வாய் கெட்டிருந்தால், நீசம் பெற்றிருந்தால் பூமி, மனை அவர் பெயரில் சரிவராது.

செவ்வாய் கெட்டிருந்தால் அண்ணன், தம்பிக்குள் சொத்துக்காக அடிதடியும் உண்டு.

எந்த ஒரு பலனும் திசா, புத்தியை நோக்கியே பயணமாகும்.

அது நன்மையா, தீமையா என்பது அவரின் தனிப்பட்ட ஜாதக கர்மாவை சார்ந்தது.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More