தனுசு ராசியில் 6 கிரகங்கள் இனைவு பற்றிய பலன் 25-12-2019

2,016

(பயம் தேவையில்லை, முற்றிலும் எனது அனுபவத்தில் இந்த பலனை தருகிறேன்)

இந்த 6 கிரக சேர்க்கைகள் 25-12-2019 மாலை 4:40 முதல் 27-12-2019 இரவு 11:45 இருக்கும்.

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு அசம்பாவிதம், கடுமையான தாக்கம், தாங்க முடியாத பிரச்சினை, திடிர் கெட்ட விளைவு நடக்க வேண்டும் என்றாலோ அல்லது நடக்கும் என்றாலோ அதற்கு #பாபதுவமான #சனி #செவ்வாய் தொடர்பு நிச்சயம் இருக்க வேண்டும் அல்லது இருக்கும். (அதற்கு துணை இருப்பது #ராகு)

இந்த முறை #செவ்வாய் இருப்பது துலாத்தில் #சனி இருப்பது தனுசுவில் #ராகு இருப்பது மிதுனத்தில், இந்த மூன்று ராசிகளும் #இயற்கையாக சுப தன்மையுள்ள ராசிகள் (பலன் என்ன என்றால் கெட்ட செயல்களை பாப கிரகங்கள் இங்கு இருந்தால் குறைத்து தரும்)

மேலும் ஒரு விஷயமாக ஒரு #அசம்பாவிதம் நடக்க வேண்டும் என்றால் அந்த ராசிக்கு உண்டான கிரகம் வலிமையாக இருந்தால் கெடுதலுக்கு வாய்ப்பு குறைவு (அதாவது உங்கள் வீட்டில் நீங்கள் இருந்தால் திருடனோ அல்லது மற்றவர்கள் சன்டையோ போட முடியாது அல்லவா, மாறாக நீங்கள் வீட்டில் இல்லை என்றால் பிரச்சினை நடக்குமே, அதுபோலத்தான்)

ஆக, இந்த முறை #தனுசு ராசியில் அந்த ராசிக்கு உண்டான #குரு கிரகம் #முலத்திரிகோனம் என்ற நல்ல நிலையில் இருக்கிறார்.

மேலும் கெட்ட செயல்களை வளர்ப்பது #ராகுவே கேது அல்ல #கேது கெட்ட விஷயங்களை வடிகட்டிவிடுவார். அதனாலே அவர் குருவுக்கு ஏற்ற நன்பர், அவர் சேர்ந்து இருப்பது ராசிக்கு வலிமையே தவிர குறைவு இல்லை.

அடுத்தபடியாக #சனி கேதுவுடன் இனைவு பெற்று தனிபட்ட தன்னுடைய குணத்தை (பிரச்சினையை உருவாக்குதல்) இங்கே காட்ட இயலாத நிலையில் இருக்கிறார்.

மிக முக்கியமாக

தனுசு ராசியில் மட்டுமே எந்த ஒரு கிரகமும் உச்சமோ, நீசமோ, பகையோ கிடையாது (சுக்ரனையும்) சேர்த்து, இதனால் எந்த கெட்ட செயலையும் தர இயலாது என்று தான் நீங்கள் கருத வேண்டுமே, தவிர பயப்பட கூடாது.

ராசியில், #சூரியன் இருப்பார் அவர் தான் கிரகங்களும் அவர் தான் மற்ற கிரகங்களுக்கு ஈர்ப்பு சக்தி என்னும் அமைப்பை தருவார், அதனால் #கிரக யுத்தம் என்னும் கெட்ட செயலை சரியாக கவனித்து கொள்வார், இதனால் #கிரக சேர்க்கை பிரச்சினை இல்லை என்ற நிலை வருகிறது…..

குரு பகவான் முதலில் வலிமை இழப்பது முதலில் #சுக்ரன் தொடர்பு வரும் போது(சனி, ராகு அடுத்தது தான்) மட்டுமே, இந்த முறை #சுக்ரன் மகர ராசிக்கு சென்று விடுவார், அதனால் #குரு வுக்கு பிரச்சினை இல்லை.

ராசி பாப தன்மையில் உள்ளது என்றால் குழப்பம் வரவேண்டும் #தனுசு ராசி நபர்களுக்கு, இங்கு பாப கிரகம் என்ன இருக்கிறது என்று பார்த்தால் #சனி மட்டுமே, அவரும் கேது தொடர்பு தான், கவலை வேண்டாம் #தனுசு ராசி நபர்களுக்கு. மற்ற கிரகங்கள் #நட்பு மற்றும் இயற்கை சுபரான #புதன் இருப்பது நல்ல பலனை தான் தரும்.

கிரக சாரங்கள் என்று பார்த்தால்.

சந்திரன் – மூலம், பூராடம், உத்திராடம்
புதன் – மூலம்
குரு – மூலம்
சூரியன் – மூலம்
கேது – பூராடம்
சனி – பூராடம்

இதில் சூரியன், குரு, சந்திரன், புதன் மூன்று கிரகங்களை அஸ்தமணம் செய்து தான் வலிமை பெறுவார்.

கேது, சனியை நெருங்கி தான் சனி செயலை கட்டுபடுத்தி #சூரியன்_கேது மட்டுமே இருக்கும் நிலையாகவே ராசி அன்றைய நாளில் செயல்படும்.

நன்பர்களே, நம்முடைய பயத்திற்கு வேலையே இல்லை, ராசி பாதித்தால் தான் நாம் பாதிப்போம், ராசி எப்படி பாதிக்கும், தீய கிரகங்கள் ஒரே ராசியில் பாபத்துவம் என்ற நிலையில் இருந்தால் ஒகே, ஆனால் இங்கே அதற்கான அமைப்பு இல்லை.

உதாரணமாக தற்போது
(#மகர ராசி என வைத்து கொள்வோம், இங்கே, சனி, சூரியன், செவ்வாய், ராகு, சந்திரன் இருந்தால் இந்த ராசி பாதிப்புக்கு உண்டானது என்று எடுத்து கொள்ளலாம்)

எனவே, கிர இனைவு நாளில் இன்று போலவே அன்றைய நாளும் நகரும், நாம அவரவர் வேலையை பார்க்க போகலாம், பயத்துடன் படுக்க வேண்டாம்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More