தாரா பலன்

33,636

தாரா, தாரை போன்றவை நட்சத்திரத்தை குறிப்பவை, ஒருவர் பிறக்கும் பொழுது உடல், மனோ காரகன் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் அவரின் ஜென்ம நட்சத்திரம் என்பதும், அந்த நட்சத்திரம் எந்த ராசியில் உள்ளதோ அதுவே ஜென்ம ராசி என்பதும் பொதுவாக அனைவரும் அறிந்ததே.

[sociallocker id=”363″]

தாரா பலன் மூலம் ஒருவர் வேலை, வியாபாரம், தொழில் தொடக்கம், புதிய முயற்சிகள் போன்ற முக்கிய செயலை துவங்கும் நாளில் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் அவரின் ஜென்ம நட்சத்திர அடிப்படையில் சாதகமாக அல்லது பாதகமாக இருக்கிறது என்பதை அறியலாம்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ண வரும் எண் 1,2,3,4,5,6,7,8, 9 வரை உள்ள எங்களுக்கு பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது , 9க்கு மேல் வந்தால் 9ல் வகுக்க வரும் மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும்.

1 – ஜென்ம தாரை – மனக்குழப்பம் தரும்.

2 – சம்பத் தாரை – தனவரவு, நற்காரியங்கள் செய்யலாம்.

3 – விபத் தாரை – தவிர்க்க வேண்டிய நாள்.

4 – ஷேம தாரை – நன்மை தரக்கூடியது

5 – பிரத்யக் தாரை – வீண் அலைச்சல், மன குழப்பம், கவன சிதறல் தரும்.

6 – சாதக தாரை – புதிய முயற்சி, செயல்களுக்கு சாதகமானது.

7 – வதை தாரை – கடுமையான தீமை தரக்கூடியது,

8 – மைத்ர தாரை – மைத்ரம் – புதிய முயற்சி, செயல்களுக்கு ஏற்றது.

9 – பரம மைத்ர தாரை – அதி நட்பு – அனைத்து சுப செயல்களுக்கு உகந்த நாள்

[/sociallocker]

உதாரணம் : ஜென்ம நட்சத்திரம் அஸ்வினி அன்றைய நட்சத்திரம் பூரம் என இருந்தால் அஸ்வினி முதல் பூரம் 11 நட்சத்திரம் 9ல் வகுக்க மீதி 2வரும், இது சம்பத் தாரை நன்மை தரும். இது போல கணக்கிடு பலன்களை அறிந்து செயல்களை துவங்கலாம்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More