திருட்டு குணம் யாருக்கெல்லாம் உண்டு?

1,907

இன்றைய காலகட்டங்களில் பணத்தைத் திருடுவது, நம்பிக்கையை திருடுவது என்பது சர்வசாதாரணமாகிவிட்டது.

அதுபோல் ஆன்லைன் மோசடியும் பெருகிவிட்டது.

இன்றைய காலகட்டத்திலும் அடுத்தவர் காசுக்கு ஆசைபடாமல் வாழ்வோர் பலர் உண்டு.

பொதுவாக ஜாதகப்படி எந்த மாதிரியான கிரக அமைப்பு இருந்தால் திருட்டு குணம் இருக்கும் என்பதனை பார்ப்போம்.

எந்த ஒரு ஜாதகத்திலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் உரைக்கப்படுகிறது. லக்னமே உயிர்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுப கிரகங்கள் எனப்படும் குருபகவான் வளர்பிறை சந்திரன் சுக்கிரன் புதன் போன்ற சுபகிரகங்கள் லக்னத்தில் அமையப் பெற்று, லக்னாதிபதியும் நன்கு வலுப்பெற்று , லக்னம் லக்னாதிபதி பாவ தொடர்பு இல்லாமல் இருந்தால் நிச்சயமாக அடுத்தவர் காசுக்கு ஆசைப்பட மாட்டார்கள்.

நிச்சியமாக நல்ல மனிதர்கள்.

5மிடம் புத்திஸ்தானம்.

சந்திரனும் மனோகாரகன் .

பொதுவாக சனிக்கு மந்தன், திருடன், எதிர்மறை பலன்களின் அரசன் என்ற பல அடைமொழிகள் உண்டு.

அது போல் ஒரு ஜாதகத்தில் ஐந்தாமிடம் புத்தி ஸ்தானம்.

பொதுவாக லக்னாதிபதியுடன் சனி இணைந்து பாவ கிரக தொடர்பு பெற்று ஐந்தாம் இடத்தில் அமர்ந்தால் திருட்டு குணம் இயற்கையாகவே ஏற்படும்.

நமது மனதில் தோன்றும் எண்ணங்களை எக்ஸிக்யூட் பண்ண சந்திரனின் தயவு தேவை.

சந்திரபகவான் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு அடிப்படை காரணகர்த்தா.

சந்திரனும் இயற்கை பாவிகள் என சொல்லக்கூடிய ராகு கேதுக்களுடன் இணைந்து ஐந்தாம் இடத்தில் தொடர்பு கொண்டாலோ அல்லது லக்னாதிபதி 5ம் அதிபதி அல்லது சனியுடன் தொடர்பு கொண்டால் நிச்சயம் திருட்டு குணம் இருக்கும்.

எந்த ஒரு நல்ல கெட்ட குணமும் அதனுடைய தசாபுத்தியில் வெளிப்படையாக வெளிப்படும்.

அதிலும் குறிப்பாக லக்னத்திற்கு எட்டாம் அதிபதி திசை, ஆறாம் அதிபதி திசை, சனி திசை நடந்தால் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு செல்லும் நிலைமை ஏற்படும்.

பொதுவாக எந்த தீய பலன் நடைபெற்றாலும் அதனுடன் கோட்சார துணையும் தேவை.

எட்டாம் அதிபதி திசையோ, புக்தியோ, அந்தரமோ மேற்சொன்ன அமைப்போடு தொடர்பு கொண்டால் திருடுவதன் மூலம் சிறைக்கு செல்லும் நிலைமையும் ஏற்படும் .

பொதுவாக இந்த மாதிரியான ஜாதக அமைப்பில் இருப்பவருக்கு . லக்னாதிபதி நிச்சயம் வலு குறைந்திருக்கும்.

சனியும் அதனுடன் ஏதோ விதத்தில் நட்சத்திர பரிவர்த்தனையோ பெற்றிருக்கும் சுப கிரக தொடர்பு நிச்சயம் இருக்காது.

லக்னத்தை பாவகிரகங்கள் பார்த்தாலும் இதே நிலை.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More