திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தும் (LIVING TOGETHER) ஜாதக அமைப்பு
திருமணம் ஆயிரம் காலத்து பயிர்.
ஆணும், பெண்ணும் உணர்வாலும், உடலாலும் இணைந்து உலகத்திற்கு உயிரை(குழந்தையை) தரும் உண்ணத உவமை சடங்குதான் திருமணம்.
ஆனால் காலத்தின் கோலம், மேலை நாடுகளின் கலாச்சார தாக்கம் ஆண், பெண் திருமணம் செய்யாமலே வாழ்ந்து, உடலுறவை வெறும் உடல் சுகத்திற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
இவர்களுக்குள் எந்த ஆழ்ந்த புரிதலும் இருக்காது.
SENTIMENT என் வார்த்தைக்கு அர்த்தம் இருக்காது.
இவர்களை பொருத்தவரை இரண்டு முழ தாலிகயிறு எங்களை கட்டுபடுத்த கூடாது என்ற அமைப்பில் வாழ்கின்றனர்.
ஆனால் திருமணம் என்பது, இறைவனும், இறைவியும் இல்லறத்தின் இனிமையை இயம்புவதற்காக இறைவனே திருவிளையாடல் புரிந்துள்ளான் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
ஸ்ரீராமன் வில்லை உடைத்து சீதையை திருமணம் செய்தான்.
குறவன் வேடமிட்டு முருகன் வள்ளியை திருமணம் செய்தான்.
நாகரீக மோகத்தால், பணத்தின் செருக்கால் இந்த இடைநிலை தோன்றியுள்ளது.
பிடித்தால் வாழ்வோம், பிடிக்காவிட்டால் பிரிந்துவிடுவோம் என்ற அடிப்படையிலே திருமண பந்தமல்லாத வாழ்வு வாழ்கின்றனர்.
ஜாதகப்படி 7மிடம் திருமண ஸ்தானம்.
7ல் நீச கிரகமிருந்தாலும், 4 மிடம் கெட்டாலும், 2மிடம் கெட்டாலும் சனி, ராகு, நீச சுக்ர போன்ற திசைகள் பாவ ஆதிபத்யம் பெற்று திசை நடந்தாலும் செவிடன் காதில் ஊதிய சங்காக பெற்றோரின் சொல் பேச்சு கேளாமல் தன்னுடைய வாழ்வை தானே தேர்ந்தெடுப்பார்.
4ம் பதி கெட்டு திசை (குறிப்பாக ராகு, சனிதிசை) பருவ வயதில் நடந்தால் திருமணத்திற்கு முன்பே “அனைத்தும்” நடந்து விடும்.
இருவருக்குள் ஒருவருக்கு 71/2, அட்ட சனி நடந்தால் மலருக்கு மலர் தாவும் வண்டாகவே இருப்பார்.
அந்த நேரத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு GOOD BYE சொல்லி பிரிந்தும் விடுவார்.
மேலைநாடுகளில் ஒருவர் 3, 4 திருமணம் செய்ய இதுவே காரணமாகும். அங்கு அதை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. இந்தியாவில் அப்படி முடியாது.
ஒழுக்கம், பண்பு நெறிமுறையை குழந்தைக்கு சொல்லி கொடுத்து வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
அதையும் மீறி வினைப்பயன் வழுவாக இருக்கிறதென்றால் நாம் என்னதான் செய்ய முடியும்.
கலாச்சாரத்தை பாதுகாப்பது நமது கடமை.
ஓம் நமசிவாய
Comments are closed.