திருமண பொருத்தம்
இப்போது ஜோதிடத்தில் அனைவருக்கும் சவாலாக விளங்குவது திருமண பொருத்தம் தான்.
10 ஜோதிடர்களிடம் ஜோதிடம் பார்த்தேன். 6பேர் செய்யலாம் என்றார்கள். 4 பேர் வேண்டாம் என்கிறார்கள்.6-பேர் பெரும்பான்மையாக சொன்னதால் திருமணம் செய்கிறேன் என்ற முடிவுக்கு வருகின்றனர்.
வெகு நாட்களாக இந்த பதிவை வெளிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.எம்முடைய குருநாதரின் 53 வருட ஆராய்ச்சியும் ,எனது 10வருட ஆராய்ச்சியும் இதில் கலந்திருக்கிறது.இதில் சிறப்பம்சம் என்னவெனில் ஏழாம் பாவகம் என்று சொல்லக்கூடிய திருமண பாவகத்தை அதிகமாக நாங்கள் ஆய்வு செய்ததுதான்.
திருமண பொருத்தம் பற்றிய இந்தப் பதிவை எமது நண்பர்கள் தங்களால் முடிந்தவரை தமிழகத்தின் எந்த மூலை முடுக்கு வரை கொண்டு செல்ல வேண்டுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன்.
நட்சத்திர பொருத்தம்:
10-க்கு 7அல்லது 8 பொருத்தம் இருந்து ராகு கேதுக்கு ராகு கேது இருந்தாலும் செவ்வாய்க்கு செவ்வாய் இருந்தாலும் பொருத்தம் பார்க்கும் முறைதான் அதிகமாக காணப்படுகிறது.இது முற்றிலும் மிகத் தவறான செயலாகும்.
நட்சத்திர பொருத்தம் 10 இருப்பினும் ஜாதக கட்டப் பொருத்தம் இல்லையெனில் இல்லற வாழ்க்கை இனிமை அளிக்காது.
சிலருக்கு இது திருப்தி அளிக்கலாம்.சிலருக்கு இல்லாமல் கூட போகலாம்.சுக்கிர பகவானின் பொற்பாதங்களைத் தொட்டு ஜாதக கட்ட ரீதியான தோஷங்களையும் அதற்கு பரிகாரம் இல்லாமல் கட்டத்திலேயே சரி செய்வது எப்படி என்பதையும் பற்றி பதிவிடுகிறேன்.
1)சதயம் நட்சத்திரம் +சப்தமி திதி + செவ்வாய்கிழமை
2)ஆயில்யம் நட்சத்திரம்+துதியை திதி+சனிக்கிழமை
3)கார்த்திகை நட்சத்திரம் +துவாதசி திதி+ஞாயிற்று கிழமை
4)சனி 1-ல் பகை +5-ல் சூரியன் + 9-ல் செவ்வாய்
இந்த அமைப்பு பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் விதவை யோகத்தை ஏற்படுத்தும்.இது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.இதற்கு பரிகாரமாக 7-ம் அதிபதி 7-ல் ஆட்சியாக ஜாதகத்தில் இருக்க வேண்டும்.இது உபய லக்கினம் என்று சொல்லக்கூடிய மிதுனம்,கன்னி ,தனுசு,மீனம் லக்கினத்துக்கு பொருந்தாது.
அப்படி இல்லையெனில் ஜாதகிக்கு திருமணம் செய்யக்கூடாது.இதற்கு பரிகாரமாக சேர்ந்து வாழப்போகும் ஆடவரின் அக்கா தங்கையை தாலி கட்டச் சொல்ல வேண்டும்.இது மட்டுமே பரிகாரம்.மற்றது பயனளிக்காது.
5)ஞாயிறு -பரணி நட்சத்திரம்
6)திங்கள்-சித்திரை நட்சத்திரம்
7)செவ்வாய்-உத்திராடம் நட்சத்திரம்
8)புதன் -அவிட்டம் நட்சத்திரம்
9)வியாழன்-கேட்டை நட்சத்திரம்
10)வெள்ளி -பூராடம் நட்சத்திரம்
11)சனி-ரேவதி நட்சத்திரம்.
இந்த கிழமை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு முன்பு தனது குடும்பத்தில் யாரேனும் ஒருவரை(தாய்,தந்தை) இழந்திருப்பார்கள்.அப்படி இல்லையெனில் திருமணம் இடத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுவார்கள்.
பரிகாரம்:
ஆண்வீடு-தங்கை அல்லது அக்கா,தாய்,தந்தை இருந்தால் பெண் வீட்டில் தாய்,தந்தையர் யாரேனும் ஒரூவர் மட்டுமே இருக்க வேண்டும்.தம்பி கூடாது .தங்கை இருக்கலாம்.
பெண் வீடு-அண்ணன் அல்லது தம்பி ,தாய் ,தந்தையர் இருந்தால் ஆண் வீட்டில் தாய் தந்தையர் யாரேனும் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும்.அண்ணன் தம்பி இருக்கலாம்.சகோதரி கூடாது.
மொத்தத்தில் இரண்டு குறைகள் இரண்டு குடும்பத்திலும் இருக்க வேண்டும்.
12)பெண்கள் ஜாதகத்தில் 8-ல் சனி, செவ்வாய் ,ராகு இருந்தால் அது விதவை தோஷமாகும்.7-ம் அதிபதி நன்றாக இருந்தால் இரண்டாம் தாரமாக கொடுக்க வேண்டும்.இது 7-ல் இருந்து 2-ம் அதிபதி பலம் இழந்தாலும் இப்படி செய்ய வேண்டும்.
13)பெண்கள் ஜாதகத்தில் 7-ல் சனி அல்லது சூரியன் இருந்து 2,7-ம் அதிபதிகள் கெட்டால் இரண்டாம் தாரமாக கொடுக்க வேண்டும்.
14)ராகு கேதுக்களின் கால சர்ப்பப் பிடியில் லக்கினமும் மற்ற கிரகங்களும் மாட்டிக் கொண்டால் ஆண்களுக்கு 32 வயது முடிந்த பின்பும் பெண்களுக்கு 27 வயது முடிந்த பின்பும் திருமணம் செய்ய வேண்டும்..
15) ஆண்கள் ஜாதகத்தில் 7-ல் செவ்வாய் சனி அல்லது சந்திரன் சுக்கிரன் இருந்தால் விதவை அல்லது கலப்பு திருமணம் செய்ய வேண்டும்..
16)ஜாதகத்தில் 1,4,7,10-ம் ஸ்தானங்களில் செவ்வாய் சுக்கிரன் இணைந்து இருந்தால் கலப்பு திருமணம் செய்ய வேண்டும்..
17)இருவர் ஜாதகத்திலும் செவ்வாய் ஓரளவுவாது சரியான பலத்தில் அமைய வேண்டும்.
18)ஆண்கள் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் 1,4,7,10 எனும் கேந்திர ஸ்தானங்களில் இணைவு பெற்றிருந்தாலும் சூரியனுடன் எந்த இடத்தில் அஸ்தங்கம் அடைந்திருந்தாலும் சுக்கிரன் நீசம் பெற்று நீசபங்கம் அடையாமல் இருந்தாலும் குறையுள்ள வீட்டில் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்.
19)பெண்கள் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரனுடன் அல்லது செவ்வாயுடன் சேர்ந்து கேந்திர ஸ்தானங்களில் இருந்தாலும் சூரியனுடன் மிக நெருங்கிய பாகையில் எங்கு இருந்தாலும் குறையுள்ள வீட்டில் திருமணம் செய்ய வேண்டும்.
20)ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரனும் கேதுவும் இணைந்திருந்தாலும் பெண்கள் ஜாதகத்தில் செவ்வாயும் கேதுவும் இணைந்திருந்தாலும் குறையுள்ள வீட்டில் திருமணம் செய்ய வேண்டும்.7-ல் சனி சந்திரன் இருந்தால் இரண்டாம் தாரமாக பெண்கள் செல்ல வேண்டும்.
21) இருவர் ஜாதகங்களில் ஒருவர் ஜாதகத்திலாவது 2 மற்றும் 5-ம் இடங்கள் சிறப்பாக இருக்க வேண்டும்.
மேலே சொன்ன அமைப்பில் திருமணம் அமையவில்லை எனில் இல்லற வாழ்வில் ஏதேனும் குழப்பங்கள் ஏற்படும்.
அனைவரின் இல்லறமும் நல்லறமாகட்டும்.
நன்றியுடன்
V.N.பாலசுப்பிரமணி B LIT,TPT,DA