பிருகு நந்தி நாடி கிரக சேர்கை விதிகள் + கிரக காரகதுவங்கள்

பிருகு ஜோதிட வகுப்பு பதிவு 1

23,611

உச்சிஷ்ட மகாகணபதி துணை

 

ஜோதிட வகுப்பு பதிவு 1

 

பிருகு நாடி ஜோதிடம்

( சேர்கை பெரும் கிரக காரகதுவங்கள் அடிபடையில் பலன் )

 

தலைப்பு:

1 நாடி ஜோதிடத்தில் கிரக சேர்கை விதிகள்.

2 கிரக காரகதுவங்கள்.

 

1 நாடி ஜோதிடத்தில் கிரக சேர்கை விதிகள்.

 

எந்த ஒரு கிரகமும் தான் அமர்ந்த பாவத்திலிருந்து 1 5 7 9 / 2 / 3 11 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களுடன் சேர்கை பெற்றே இயங்கும்.

 

நாடி ( பிருகு ) ஜோதிடத்தில் கிரக சேர்கை பலன்களின் தரவரிசை.

 

1 முதல்தர சேர்கை பலன்: 1 5 7 9 பாவ கிரகங்களுடன் பெரும் சேர்கை.

 

2 இரண்டாம் தர சேர்கை பலன்: 2 பாவ கிரகங்களுடன் பெரும் சேர்கை.

 

3 முன்றாம் தர சேர்கை பலன் 3 11 பாவ கிரகங்களுடன் பெரும் சேர்கை.

 

முதல்தர வரிசை 1 5 7 9 கிரக சேர்கை விளக்கங்கள்.

( நேர்கோட்டு கிரக அ பாவ சேர்கை விளக்கங்கள் )

 

நாடி ஜோதிடதில் முதல்தர கிரக சேர்கை விளக்கங்கள் அறிவதற்கு முன் திரிகோனபாவங்கள் படறிய ஒரு சிறு விளக்கம் அறிவது அவசியம். எந்த ஒரு பாவதுக்கும் அந்த பாவத்திலிருந்து வரும் 5 9 ஆம் பாவங்கள் திரிகோனபாவங்கள் ஆகும். குறிப்பிடும் ( ஆய்வு ) கிரகம் அ ஒரு பாவம் வலிமை குன்றிருந்தாலும் அதன் திரிகொனாதிபதி கிரகங்கள் அ திரிகொனபாவங்கள் வலுவாக இருப்பின் அந்த குறிப்பிட்ட ( ஆய்வு ) கிரகம் அ பாவம் ஏதோ ஓடும் அ தப்பித்து கொள்ளும். காரணம் ஒரு பாவம் அ கிரகம் இயங்கும் பொழுது அதன் திரிகொனாதிபதி கிரகங்கள் மற்றும் திரிகொனபாவங்களும் இயங்கும் ( இயங்குகிறது ) என்பது பாரம்பரியம் நாடி மற்றும் கேபி ஜோதிட விதிகளாகும்.

 

எந்த ஒரு பாவமும் எந்த ஒரு கிரகமும் தனித்து இயக்குவது இல்லை

 

12 பாவத்தின் திரிகோண பாவங்கள்.

 

1 ஆம் பாவம் வீக் என்றால் 5 9 வலிமை என்றால் 1 ஓடும் அ தப்பிக்கும்.

 

2 ஆம் பாவம் வீக் என்றால் 6 10 வலிமை என்றால் 2 ஓடும் அ தப்பிக்கும்.

 

3 ஆம் பாவம் வீக் என்றால் 7 11 வலிமை என்றால் 3 ஓடும் அ தப்பிக்கும்

 

4 ஆம் பாவம் வீக் என்றால் 8  12  வலிமை என்றால் 4 ஓடும் அ தப்பிக்கும்.

 

உதாரனம்:

 

திசைகள் அமைப்பு முலம் மொத்தம் 4 திசைகள்.

 

கிழக்கு: மேஷம் சிம்மம் தனுஷு 1  5  9

 

தெற்கு: ரிஷிபம் கன்னி மகரம் 1 5  9

 

மேற்க்கு: மிதுனம் துலாம் கும்பம்  1 5 9

 

வடக்கு: கடகம் விருசிகம் மீனம் 1 5 9

 

மேலும் நட்சத்திர அமைப்பு முலம் ஓர் உதாரனம்:

 

9 கிரகங்கள் 27 நட்சத்திரங்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் 3 நட்சதிரங்கள் விதம் 9 கிரகத்திற்கும் 3 3 நட்சத்திரங்கள் விதம் 27 நட்சத்திர குட்டம் அடங்கியதாக ராசி மண்டலம் அமைகப்பட்டுள்ளது.  உதாரனம் கேது நட்சத்திரங்கள் அஷ்வினி மகம் முலம் முறையே மேஷம் சிம்மம் தனுஷு என்று திரிகொனமாக திரிகொனபாவங்களில் அமைகப்பட்டுள்ளது. மேலும் உதாரனம் கேது நட்சத்திரங்கள் போலவே 9 கிரகங்களின் ஒவ்வொரு நட்சத்திரமும் அதன் திரிகொனபாவங்களில் அமர்ந்திருக்கும். பாரம்பரியம் அடிப்படை ஜோதிட வகுப்பு பதிவுகளில் விளக்கப்படும்.

 

அஷ்வினி ( மேஷம் ) மகம் ( சிம்மம் ) முலம் ( தனுஷு ) 1 5 9

 

அஷ்வினி ( ஆய்வு ) 1 ஆம் பாவமென்றால்……

 

குறிப்பு:

 

ஒரு திசா அ ஒரு பாவம் இயங்கும் பொழுது அதன் திரிகொனபாவங்களும் திரிகொனதிசாகளும் ( திசைகள் ) இயங்கும். எந்த ஒரு பாவமோ அ திசாவோ தனித்து இயங்காது. அதன் திரிகொனங்களும் இயங்கும். அதற்க்கு தான் முன்னோர்கள் அமைத்தனர் ஒரே திசை ராசிகளும் ஒரே திசையில் அமைந்த நட்சத்திரஙகளையும். மேலும் பிறப்பு சந்திரன் ( ஜென்ம நட்சத்திரம் ) அஷ்வினியோ மகமோ அல்லது மூலமோ. கடந்த காலங்களில் கேது திசா இருப்பு என எழுதாமல் பெரியோர்கள் அஷ்வினி மகம் முலம் கொண்ட கேது திசா ( திசை ) இருப்பு என எழுதினர் ஆனால் இன்று வழக்கில் இல்லை.

 

திரிகோண பாவதிபதிகள் கிரகசேர்கை + பாவ காரகத்துவ சேர்கை

 

ஆக பாரம்பரியம் நாடி மற்றும் கேபி ஜோதிட விதிகளின்களின் படி ஒரு கிரக திசா அ புத்தி காலங்கள் அதன் திரிகோண பாவதிபதிகளுடனும் திரிகோண பாவ காரகதுவங்களுடனும் ( 5 9 இல் இருக்கும் கிரகங்களுடன் ) இணைந்தே செயல்படும். ஆனால் பலன் கணிக்க ஒரு கிரகம் அமர்ந்திருக்கும் 1 ஆம் பாவ காரகதுவங்களும் கிரக காரகதுவங்களும் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. விளைவு அங்கு ஜோதிட கணிப்பு பலன் ௦% அ மாறுபட்ட பலன்.

 

முதல் தர சேர்கை 7 விளக்கங்கள்:

 

ராசி மண்டலம் ( பூமியில் இங்கிலாந்து க்ரின்விட்ச்லிருந்து ௦ ஆரம்பித்து முடிவு 360 பாகை ) 360 பாகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிரகம் அமர்ந்த ராசி ௦ பாகை ஆரம்பம் என கொண்டால், அதன் 12 ஆம் பாவம் முடிவு 360 பாகை என கொள்ளுதல் வேண்டும். எந்த ஒரு கிரகமும் ( ராகு கேது தவிர ) நேர் கோட்டு பார்வையையாக 180 பாகை அதாவது எதிர் திசையை நேர்கோட்டு பார்வையாக முழுமையாக பார்வையிடும். இங்கு பார்வை சேர்கை என கொள்ளுதல் வேண்டும்.

 

காலபுருஷ தத்துவ விளக்கம் 7 இன் சேர்க்கைக்கு.

உதாரணம்: மேஷம் மற்றும் ரிஷிபம்.

 

மேஷம் ( 1 ) நெருப்பு என்றால் நெருப்பு நன்றாக ஏறிய துலாம் ( 7 ) காற்றின் அவசியம் முக்கியம். ரிஷிபம் ( 1 ) நிலம் என்றால் நிலம் பண்படுத்த விருசிகம் ( 7 ) நீர் அவசியம் அ முக்கியம்.

 

நேர்கோட்டு சேர்கை 1 5 7 9 ஆம் பாவ கிரக சேர்க்கைகள்:

 

ஒரு கிரகம் தான் அமர்ந்த பாவத்திலிருந்து 1 5 7 9 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களுடன் நேர்கோட்டியில் சேர்கை பெறுகிறது இது நாடி ஜோதிடத்தில் பலன் கணிக்க பயன்படும் முதல்தர வரிசை கிரக சேர்கை பலனாகும்.

 

இரண்டாம் ( 2 ) தர வரிசை கிரக சேர்கை விளக்கங்கள்:

 

அதாவது ( semi sextile ) அரை பங்கு சேர்கை என பொருள். மேஷத்திற்கு ( நெருப்பிறகு ) துலாம் ( காற்று ) 100% ஆக எதிர்திசை சேர்கையென்றால், மேஷத்திற்கு ரிஷிபம் ( நிலம் ) 50% ஆக எதிர்திசை சேர்க்கையை கிரக சேர்கை கணக்கில் கொள்ளுதல் வேண்டும்.

 

குறிப்பு:

 

ஒரு குறிப்பிட்ட கிரகம் முதல்தர சேர்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களுடன் சேர்கை பெரும் பொழுதோ அ பெற்றிருந்தாலோ, கிரக சேர்கை பலனுக்கு இரண்டாம் தர சேர்க்கையை அதாவது கிரக காரகதுவதை சேர்கை பெரும் முதல் தர கிரகங்களின் காரகதுவ பலனுக்கு ஒத்துவந்தால் உருகாய் போல் எடுத்துக்கலாம் அல்லது தவிர்க்கலாம்.

 

ஆனால் முதல் தர கிரக சேர்கை ஒரே ஒரு கிரகத்துடன் இருந்தாலோ அ முதல் தர வரிசையில் கிரக சேர்க்கையே இல்லையென்றாலோ பலன் குற இரண்டாம் தர கிரக சேர்கை மிக முக்கியம். காரணம் ஒரு தேரை இயக்கும் சாரதி போன்றது இரண்டாம் தர கிரக சேர்கை பலன். ஒரு தேர் இயங்க சாரதி மிக முக்கியம். ஆனால் சாரதிகென்று ஒரு தகுதி உள்ளது. தேவையேன்றலோ அ சாரதியின் உதவி தேவைபட்டால் மட்டுமே இரண்டாம் தர கிரக சேர்கையை கணக்கில் கொள்ளுதல் வேண்டும்.

 

முன்றாம் ( 3 11 ) தர கிரக சேர்கை விளக்கங்கள்.

 

முன்றாம் தர கிரக சேர்க்கைக்கு முக்கியத்துவமே தர வேண்டாம். ஒருவேளை முதல் தர கிரக செர்கையிலோ அ இரண்டாம் தர கிரக செர்கையிலோ கிரகங்கள் இல்லையென்றால் மட்டுமே முன்றாம் தர சேர்க்கையை கிரக சேர்கை பலனுக்கு கணக்கில் கொள்ள வேண்டும். காரணம் முழு நேர்கோட்டு ( 100% ) சேர்கையும் இல்லை. அரை நேர்கோட்டு ( 50% ) சேர்கையும் இல்லை. மேஷம் கிழக்குயென்றால் மிதுனம் ( 3 ) கும்பம் ( 11 ) இரண்டுமே மேற்கு திசையை குறிக்கும்.

 

முன்றாம் தர கிரக சேர்க்கையை கணக்கில் கொள்ளும் விதம்:

 

குறிப்பு:

 

முதல் தர கிரக சேர்கை வரிசையிலும் இரண்டாம் தர கிரக சேர்கை வரிசையிலும் கிரகங்கள் சேர்கை ஆய்வு கிரகத்திற்கு இல்லையென்றால் மட்டுமே பலன் கணிக்க கணக்கில் முன்றாம் தர வரிசையை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். இருந்தால் முதல் மற்றும் இரண்டாம் தர வரிசை கிரக காரகத்துவ சேர்கைக்கு முன்றாம் தர வரிசை கிரகங்கள் காரகதுவங்கள் ஒத்து வந்தால் மேலும் உருகாய் போல் பயன்படுதலாம் அ தவிர்க்கலாம்.

 

மேஷத்தில் ஒரு ஆய்வு கிரகம் அமர்வு 5 பாகையில் இருந்தால், மிதுனம் (3) மற்றும் கும்பத்தில் (11) இருக்கும் முன்றாம் தர வரிசை கிரகம் 2 பாகையில் இருந்து 5 பாகைக்குள் இருத்தல் வேண்டும் அ 5 பாகையில் இருந்து 8 பாகைக்குள் இறுதல் வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே முன்றாம் தர வரிசை கிரக சேர்கையை நாடி ஜோதிட பலன் கணிக்க கணக்கில் எடுத்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு 3 பாகை வித்தியாச சேர்கை தவறினால் முன்றாம் தர கிரக சேர்கை நாடி ஜோதிட பலன் கணிக்க கணக்கில் இல்லை.

 

குறிப்பு: மேற்கொண்டு கணித்தால் நடைமுறைக்கு ஒத்துவராத அ முழுமையாக பலன் தராத விளைவுகளே நிகழும். நாடி ஜோதிட வகுப்பின் பதிவுகளான பிருகு சப்தரிஷி நாடிகளின் பரிணாமம் ஆர்ஜி ராவ் நாடி ( பாகைகள் அடிபடை ) ஜோதிடம் பயிலும் பொழுது முழுமையான விளக்கம் பெறலாம். பேசிக் பிருகு ஆர்ஜி ராவ் நாடி பாகைகள் அடிப்படை சேர்க்கையை பிருகுவில் முன்றாம் தர சேர்க்கையில் பில்ட்டர் செய்து தந்துள்ளேன், பயனாளிகள் பிருகு நாடி ஆரம்ப ஜோதிட பதிவுகளில் இருந்தே follow செய்து செய்து கொள்ளவும்.

 

2 கிரக காரகதுவங்கள்.

 

அதாவது குறிப்பிட்ட ஒரு கிரகம் தான் அமர்ந்த பாவத்திலிருந்து 1 5 7 9 / 2 / 3 11 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களின் காரகதுவங்களை பெற்றிருக்கும்.

 

கிரக காரகதுவங்கள் என்பது:

 

உதாரனம் கேது.

 

1 கிரக பொதுகுணங்கள்.

( விரக்தி, அலட்சியம், முழுமையான இடுபாடு இல்லாத நிலை etc )

 

2 கிரகம் குறிக்கும் உறவு முறைகள்.

( தாய் வழி பாட்டனார் etc..)

 

3 கிரகம் குறிக்கும் கல்விகள்.

( டெக்ஸ்டைலஸ் துறை, ஹோமேயோபதி அ சித்தா, வக்கில் etc..)

 

4 கிரகம் குறிக்கும் தொழில்கள்.

( ஜோதிடம், சித்தமருத்துவம், டெக்ஸ்டைலஸ் துறைகள் etc… )

 

5 கிரகம் குறிக்கும் அதிதேவதைகள். ( தீவிரம் குறைய வணங்கும் கடவுள்கள் )

( விநாயகர், அனுமன், 18 சித்தன்மார்கள் etc..)

 

6 கிரக பாராயணம். ( மந்திரங்கள் )

( கணேசா ஸ்தோத்திரங்கள் etc …)

 

7 கிரக நட்பு பகை.

( சூரியன் + கேது பகை etc.. )

( அகம் புறம் ஆர்ஜி ராவ் நாடியில் காணலாம் )

 

கோட்சாரபாலன்

( பிருகு நாடியில் வான மண்டல கிரக சஞ்சார (கோட்சார) பலன் போதுமானது )

 

குறிப்பு:

பிருகு, சப்தரிஷி மற்றும் ஆர்ஜி ராவ் நாடி ஜோதிட வகுப்பு பதிவுகளில் முதல்நிலை பிருகு நாடி ஜோதிட வகுப்பு பதிவுகளில் மேலே குறிப்பிட்ட கிரக  காரகங்களும் + கோட்சார பலனும் அறிந்தால் போதுமானது.

 

குறிப்பு:

 

நாடி ஜோதிடம் சிம்பிள் ஆக பலன் காணும் ஒரு ஜோதிட முறையாகும். மேலும் நாடியின் வகைகள் மற்றும் பரிணாமங்கள் கற்கும் பொழுது ஒரு குறிப்பிட அளவு துல்லிய பலன் காணலாம். முதல் நிலையான பிருகு நாடி ஜோதிடங்களில் அடுத்தடுத்த பரிணாமங்கள் கற்க பயன்படும் ஒரு எளிய முறை ஜோதிடம் ஆகும். மேலும் பயனாளிகள் சலுப்பு தட்டாமல் கற்க உதவும் ஆரம்ப நிலையாகும். மற்ற விபரங்கள் ஜோதிட வகுப்பு முனோட்ட பதிவுகளில் உள்ளது தேவையன்றால் காணவும்.

 

அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

 

அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல். மேற்கொண்டு சந்தேகம் இருப்பின் ஜோதிட வகுப்பு முனோட்ட பதிவுகளை எனது kalidaskalidassiddhan என்ற முகநூல்யில் முழுமையாக காணவும் விரைவில் அணைத்து பதிவுகளும் தமிழ் ஜோதிடம் டிப்ஸ். காம்யில் இடம் பிடிக்கும். .

 

இலவசம்! இலவசம்! இலவசம்!

 

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன் சி,காளிதாஸ்.

 

 

 

 

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More