நோயற்ற வாழ்வு யாருக்கு?

3,089

தற்போது உள்ள நவீன உலகத்தில், மக்கள் தொகை பெருக்கத்தினால், உணவுத்தேவைகளை சமாளிக்க வேண்டி மரபணு மாற்றப்பட்ட பயிர்களாலும், அதிகமாக இடப்படும் ரசாயன உரங்களாலும், பயிர்களுக்கு தெளிக்கப்படும் பூச்சி கொல்லி மருந்துகளாலும், களைக்கொல்லி மருந்துகளாலும்,உணவு படிப்படியாக, கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தன்மை அடைகிறது. உணவினால் நோய் உண்டாகிறது.

இன்று டூவிலர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்றளவில் அவைகள் வெளியேற்றும் நச்சு புகைகளாலும் காற்று மாசுபட்டு ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகிறது.

போதாக்குறைக்கு அரசாங்கமே டாஸ்மாக் மூலம் மதுவை விற்று வருவதால் பல இளைஞர்கள் குடிக்கு அடிமையாகி அல்சர், கல்லீரல் நோய்கள், மஞ்சள் காமாலை நோய்களால் அவஸ்தை படுகிறார்கள். குடியினால் வாகன விபத்துகள் ஏற்பட்டு சிலர் நிரந்தரமான நோயாளிகளாக உள்ளனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் நீர்நிலைகளை அடைத்து கொண்டு தண்ணீரை கெடுக்கிறது. தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் ஆற்றில் கலந்து நீர் கெட்டு நீரினால் பரவும் நோய்களும் மனிதனை வாட்டி வதக்குகிறது.

நோய்கள் பெருத்துவிட்டது.நோயாளிகளும் பெருத்து விட்டார்கள். மருத்துவ மனைகளும் பெருத்து விட்டது. நிலைமை இப்படி இருக்க ஜோதிட ரீதியாக யாரெல்லாம் நோயற்ற வாழ்க்கை வாழ முடியும்? யார்க்கெல்லாம் நோய் தாக்கும்? என்பதை இப்போது காண்போம்

முதலில் லக்னாதிபதி வலுவாக இருக்கனும். அப்பத்தான் நோய் வந்தாலும் சமாளிக்க முடியும். ஆறாமாதிபதியை விட லக்னாதிபதி வலுத்து விடவேண்டும். ஆறாமாதி லக்னாதிபதிய விட வலு குறையனும்.

சனி லக்னாதிபதிய விட வலுகுறையனும். ஏன்னா? சனி நோய்காரகன். நோய்காரகன் வலுக்கக்கூடாது இல்லையா?வலுத்தால் நோயும் வலுக்குமே!!

லக்னத்திற்கு இருபுறமும் சுபர்கள் இருக்கனும். லக்னத்தை சுபர்கள் பார்த்து இருக்க வேண்டும். லக்னத்தோடு சுபர்கள் சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும். சுகாதிபதி வலுத்து இருக்க வேண்டும். அப்பத்தான் நோயில்லாமல் சுகமாக வாழ முடியும். அப்பதான் நோயற்ற வாழ்க்கை வாழ முடியும்நோய் வந்தாலும் வந்தவுடன் சூரியனை கண்ட பனிபோல வந்த இடம் தெரியாமல் விலகிவிடும்.

சந்திரனும், வலுவாக இருக்கனும். ராசியாதிபதியும் வலுவாக இருக்கனும். ஏன்? ராசி என்பது உடல். லக்னம் என்பது உயிர். இரண்டுமே ரொம்ப முக்கியம். உயிர் இல்லாமல் உடலும், உடல் இல்லாமல் உயிரும் இயங்கவே முடியாது.

வலுவாக இருப்பது அப்படினா? மேலே குறிப்பிட்டு உள்ளவர்கள் ஆட்சி, உச்சம் பெற, திக்பலம் பெற, கேந்திர திரிகோணங்களில் லக்ன சுபர்களின் சேர்க்கை பெற, அந்த கிரகங்கள் வலுவாக உள்ளது என்று அர்த்தம். மேலே குறிப்பிட்ட கிரகங்கள் நீசம் பெற்றால் நீச பங்க ராஜயோகம் பெறவேண்டும். இவர்கள் எல்லாம் நோயற்ற வாழ்வு பெற தகுதி உள்ளவர்கள்.

நோய் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள் யார்? லக்னம்,
லக்னாதிபதி வலுக்குறைந்து ஆறாம் இடம், ஆறாமிடத்ததிபதி, நோய்க்காரகன் சனி அதிக வலுப்பெற நோய் தொல்லைகள் பெருமளவு தாக்கும். அதேபோல பாதகாதிபதி பாதகத்தை பார்த்து தசையை நடத்தும் போது நோய்தொல்லைகள் இருக்கும்.

லக்னாதிபதியும், ஆறாமாதிபதியும் பரிவர்த்தனை ஆகி இவர்களின் தசை நடக்கும் போது சுய ஜாதகத்தில் சனியும் வலுத்திருந்தால் இவர்கள் தசையில் நோய்தொல்லைகள் இருக்கும். நான்காம் அதிபதியான சுகாதிபதி பகை, நீசம் பெற்று 6, 8, 12 ல் மறைய அவருடைய தசை வருங்காலத்தில் சுகவீனம் ஏற்பட்டு நோய் தாக்கும். இதுவும் அவர்கள் தசையில் மட்டுமே நடக்கும்.

லக்னம், ராசியோடு பாவிகள் இணைந்து பார்த்து கோட்சாரத்திலும் அதே அமைப்பில் வரும்போது நோய் தொல்லைகள் இருக்கும். இதே அமைப்பில் ஜென்ம சனி நடக்கும் போதும் நோய் தொல்லைகள் இருக்கும்.

லக்னத்துக்கு இருபுறமும் பாவிகள் இருந்து அவைகள் நீசம் பெற்றாலும், லக்னத்தை இன்னொரு பாவக்கிரகம் பார்த்தாலும் நோய் தொல்லைகள் இருக்கும். பூர்வ புண்ணியம் கெட்டிருந்தால் ராகு,கேது தசைகளில் கர்மவினைகளின் காரணமாக நோய் தொல்லைகள் ஏற்படும்.

முத்தாய்ப்பாக லக்னம், ஒளிக்கிரகங்களான சூரியன், சந்திரன் வலுத்து, ஆறாமிடம், அதன் அதிபதி,நோய் காரகன் சனி வலுக்குறைய நோய் வந்தாலும் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். நோய் வந்தமாயம் சூரியனை கண்ட பனிபோல விலகிவிடும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More