பத்தாம் பாவம்

தொழில் ஸ்தானம், ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம், ராஜ்ய ஸ்தானம்.

பத்தாமிடம் எவ்வளவுக்கு எவ்வளவு பலமாக உள்ளதோ, எவ்வளவு க்கு எவ்வளவு உயர்வாக உள்ளதோ அவ்வளவுக்கு தொழில் சிறப்பாக இருக்கும். தொழிலின் மூலமாக பிரபல்யமாக இருப்பான்.

சொந்தத்தில் தொழில் நடத்த வேண்டும் என்றால் பத்தாமிடம், அதன் அதிபதி, பணக்காரனாகிய, பெரிய மனிதனாகிய குரு, லாபாதிபதி, தனாதிபதி மிகச்சிறப்பாக அமைய வேண்டும்.

தன, லாபாதிபதி பரிவர்த்தனை, சேர்க்கை பெறுவது சொந்த தொழிலுக்கு நல்லது. யோகம் குருவுக்கு 5, 9 ல் சூரியன், சுக்கிரன் இருப்பது சொந்த தொழிலுக்கு நல்லது.

பத்தாமிடத்தில் தர்ம கர்மாதிபதிகள், ராஜயோக கிரகங்கள் இருப்பது புகழ்பெற்ற வணிகராகவும், மந்திரியாகவும், அதிகாரிகளாகவும் ஆக முடியும்.

பொதுவாழ்க்கை, மற்றும் அரசியலில் புகழ்பெற பத்தாமிடம் அதிபலம் பெற்றும், அதிபலம் என்றால் என்ன? தர்ம கர்மாதிபதிபதிகளான ஒன்பது, பத்துக்குடையவர்கள் சேர்க்கை, பார்வை பத்தாமிடத்திற்கு இருப்பது, பத்தாம் இடத்து அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று சுபர்கள் பார்வையை பெறுவது, குரு முதலான சுபர்கள் பத்தாமிடத்தை பார்வை செய்வது

பத்துல ஒரு பாவியாவது பழுதாவது இருக்கனும். சுபத்தன்மை பெற்று இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் ஐஸ்வர்யம் குன்றும். கொடியவர்கள் பத்தில் நின்றால் கடுமையாக உழைத்து பிழைக்க வேண்டி வரும். உடல் உழைப்பு மிகுந்து காணப்படும். அடிமைத்தொழில். சிலருக்கு கீழ்படிந்து, பயந்து பணிபுரிய வேண்டும். சனி பத்தில் பாவத்தன்மை பெற்று இருக்க கெடுதல் உண்டாகும். உயர்ந்த நிலையில் இருந்தாலும் தாழ்வடைய வைக்கும்

பத்தாமிடத்தை பார்க்கும் போதே பத்துக்கு பத்தான ஏழாமிடத்தையும் பார்க்க வேண்டும். ஏழாமிடம் அதிக சுபத்தன்மை அடைய, அதிபலம் பெற கூட்டுத்தொழில் லாபத்தை தரும். ஆளடிமை கிரகமான சனி (வேலைக்காரன்) புதனுடன் சேர்ந்து நல்ல இடங்களில், சுபத்தன்மை பெற புதனும் பலம்பெற, மூன்றாம் அதிபதி மூன்றில் இருந்தாலும் நிறைய ஆட்களை வைத்து வேலை வாங்கும் முதலாழியாக, தொழில் அதிபராக, இருப்பார்.

பத்தாமிடம், பத்தாமாதிபதி சரராசியில் இருந்து அஷ்டமாதிபதி + விரையாதிபதி தசை சுபத்தன்மை பெற்று நடக்க ஜாதகன் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு சென்று பிழைப்பான். நீர் ராசிகள் பலமாக இருக்க, அதில் சுபக்கிரகங்களால் பார்க்கப்பட, யோகர்கள் நீர் ராசிகளில் இருக்க ஜாதகன் கடல்கடந்து வெளிநாடு சென்று பிழைப்பான்.

சூரியன் பத்தில் இருக்க, பத்தாமிடத்து அதிபதியுடன் சேர்க்கைபெற, சூரியனே பத்தாமாதிபதி ஆனாலும், குருபகவான் வலுத்து வலுத்து மீன்ஸ் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்று சூரியனை, பத்தை, பத்தாமாதியை வலுவாக பார்க்க அரசியல் வாதியாக முடியும்.

குரு பத்தாமாதிபதி ஆனாலோ, அல்லது பத்தாமிடத்தை பார்த்தாலோ கோவில் பூசாரி ஆகலாம். ஆன்மீக, புண்ணிய காரியங்களுக்கு சிறப்பானாலும் அரசியலுக்கு சிறப்பு இல்லை.

பத்தில குரு வரும்போது ஈசன் ஒரு பத்திலே தலைஓட்டிலே இரந்துண்டதும் என்று வரும். பத்தாமிடத்தில் கோசாரத்தில் குருவரும்போது பதவியை பறிக்கும். அப்போது ஏழரைச்சனி நடந்தால் நிச்சயமாக இந்த பலன் நடக்கும். தொழிலில் இடமாற்றம் இருக்கும்.

சரிங்க ஐயா பத்தில எனக்கு எந்த கிரகமும் இல்லை. நான் என்ன செய்யறது என்று நீங்கள் கேட்பது எனக்கு நிச்சயமாக புரிகிறது.
ராசிக்கு பத்தில எந்த கிரகம் உள்ளதோ ?
அல்லது லக்னாதிபதிக்கு பத்தில எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரகத்தின் தொழில் ஜாதகருக்கு அமையும்.

Blog at WordPress.com.

%d bloggers like this: