பன்னிரண்டாம் பாவம்
அயன சயன போக ஸ்தானம்
பன்னிரண்டாம் வீடு அயன, சயன, போக, முக்தி ஸ்தானம் எனப்படும்.
நல்ல சாப்பாடு கிடைக்குமா?
நல்ல தூக்கம் வருமா?
பயணங்கள் எப்படி?
செலவுகள் நல்ல செலவுகளா?
பஞ்சு மெத்தையில் படுப்பவரா?
அல்லது ரோட்டில், சாவடியில், வெறுந்தரையில் படுத்து உறங்குபவரா?
சிறை தண்டனை பெறுபவரா? இவற்றையெல்லாம் பன்னிரண்டாம் வீட்டின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்..
பன்னிரண்டாம் இடத்தில் ஒரு சுபக்கிரகம் ஆட்சி, உச்சம் பெற
பன்னிரண்டாம் இடத்து அதிபதியும் ஆட்சி உச்சம் பெற
பன்னிரண்டாம் இடத்தில் லக்ன சுபர்கள் அமைய
நல்ல சாப்பாடு கிடைக்கும். சூடாக, நேர நேரத்திற்கு நல்ல தூக்கம் வரும். தூங்குவதற்கு நல்ல வீடும், பஞ்சு மெத்தையில் படுத்துறங்கும் யோகத்தையும், கொசுவலை, ஆல் அவுட் எல்லாம் போட்டுகிட்டு தூக்கம் துளியும் தன்னை பாதிக்காத அளவுக்கு மிக நிம்மதியாக தூங்குவார்கள்.
செலவுகள் நல்ல செலவுகளாக அமையும். தான தருமங்கள்,
சொத்துக்கள் சேர்க்க, குருபகவான் 12 ல் இருக்க கல்விக்காகவும், சுக்கிரன் 12ல் சுபத்தன்மை பெற பெண்கள் தன்னை மெச்ச வேண்டும் என்பதற்காகவும் ஆடம்பரத்திற்காகவும், செலவு செய்ய வைப்பார்கள்.
செல்வத்தை நியாயமான வழியில் செலவு செய்வார்கள். இவர்களுக்கு மோட்ச பதவியும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
12 க்குடையவனும், 9க்கு உடையவனும் பரிவர்த்தனை ஆக அல்லது நல்ல வீடுகளில் சேர்ந்திருக்க பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவார்கள். ஷேத்ராடனம் செய்வார். தானதருமங்கள் செய்வார் .
மாறாக
பன்னிரண்டாம் வீட்டில் பாவக்கிரகங்கள் இருந்து, அல்லது பன்னிரண்டாம் வீட்டில் நீசம், அஸ்தமனம், வக்கிரம் பெற்ற கிரகம் அமையப்பெற்று, அந்த வீட்டதிபதி பகை, நீசம், அஸ்தமனம் பெற பகை கிரகங்களால் பார்க்கப்பட, சேர்க்கைபெற அடிக்கடி பழைய சோறு சாப்பிடுபவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்.
வெறுந்தரையில், இருக்க இடம் இல்லாமல் ரோட்டில, சத்திரம், சாவடியில் படுத்துறங்குபவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்.(இது அவர்கள் தசாபுக்தி காலங்களில் மட்டுமே நடக்கும்)
தூங்குவதற்காக டேப்லெட்ஸ், தூக்க மாத்திரை போட்டு கொள்பவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்.
இதே அமைப்போடு, ஆறுக்குடையவன் வலுப்பெற, பாவத்துவம் பெற சிறைத்தண்டனை கூட கிடைக்கும்.
இவர்களுக்கு அமையும் செலவுகள் ஆஸ்பத்திரி, கோர்ட், கேசு, போலிஸ் ஸ்டேசன் வழக்கு, அபராதம், பெனால்டி என்று தெண்டச் செலவுகளாக வே அமையும்.
பன்னிரண்டாம் வீடு மோட்ச ஸ்தானம் அல்லது முக்தி ஸ்தானம் என்றும் அழைக்கப்படும். முக்தி யோகம் எனப்படும் மோட்சம் யாருக்கு கிடைக்கும்?
யோகங்கள் அமைவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல.
அதற்கெல்லாம் கொடுப்பினை இருக்கனும். கொள்வினையும், கொடுப்பினையும் இருக்கனும். இந்த கொள்வினை, கொடுப்பினை என்பது பேங்க்ல நம்ம அக்கௌன்ட்ல பணம் இருக்கறமாதிரி. பேங்க்ல நம்ம அக்கௌன்ட்ல பணம் இருந்தால் தான் நாம எடுத்து செலவு பண்ணமுடியும். அதுபோல அவர் அவர்கள் கர்ம வினைப்படி, ஊழ்வினைப்படி இன்ப, துன்பங்களை, சுக, துக்கங்களை அனுபவித்து முடித்த பின் முக்தி கிடைப்பதற்கும் யோகம் வேண்டும்.
பாவம் அதிகமானால் பாவத்தை அனுபவிப்பதற்காக அடுத்த பிறவி ஏற்படும். ஒரு ஜாதகத்தில் மோட்சம் என்னும் பிறவாமை யோகம் யாருக்கு அமையும்?
ஞான மோட்ச காரகன் கேது.
மோட்சத்தை குறிக்கும் பாவம் பன்னிரண்டாம் பாவம். இந்த பன்னிரண்டாம் பாவத்தில் கேது இருக்கப்பெற்று அவர் சுபத்தன்மை பெற மோட்சம் உண்டு. பன்னிரண்டாம் பாவத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகம் இருக்க, அது சுபக்கிரகமாக மோட்சம் உண்டு.
சிம்ம லக்னமாக அமைய அதுவே ஜாதகருக்கு கடைசி பிறவி. ஆனால் இறந்த நாளில் கெட்ட நட்சத்திரங்களில் மரணம் சம்பவித்து வீடு அடைப்பு வந்தால் மறுபிறவி உண்டு.
பண்ணிரண்டாம் அதிபதியும், ஒன்று, ஐந்து, ஒன்பது, பத்து, அதிபதிகள் பரிவர்த்தனை செய்து கொள்ள மறுபிறவி இல்லை. மோட்சம் உண்டு.
பன்னிரண்டாம் அதிபதி, நீசமாக, பன்னிரண்டாம் வீட்டில் நீச, அஸ்தமனம், வக்கிரம் பெற்ற கிரகம் இருக்க மறுபிறவி நிச்சயம் உண்டு.
Comments are closed.