பித்ரு தோஷம் என்றால் என்ன?

ஒரு ஜாதகத்தில் சூரியன் பிதுர்காரகன் எனவும், சந்திரனை மாதுர் காரகன் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

பித்ருக்கள் என்பவர்கள் நம்முடைய முன்னோர்கள் அவர்.

ஒரு ஜாதகத்தில் ஒன்பதாம் பாவகம் பாக்கிய ஸ்தானம் எனப்படும்.

ஒன்பதாம் பாவகம் என்பது நம்முடைய முன்னோர்கள் செய்த நல்வினை, தீவினைப் பயனை குறிக்கும் இடமாகும்.

இந்த ஒன்பதாம் பாவகத்தில் சனி, ராகு கேது மற்றும் ஒன்பதாம் அதிபதி நீசம், ஒன்பதாம் அதிபதியுடன் ராகு கேதுக்கள் மிக நெருக்கமாக இணைந்து பலமிழக்க வைத்திருப்பது, ஒன்பதாம் அதிபதி பாவ கர்த்தாரி தோஷத்தில் இருப்பது, பித்ரு காரகன் சூரியன் ராகு, கேது சனியுடன் சேர்ந்து இருப்பது, அது போல் மாத்ரு காரகன் எனப்படும் சந்திரன் ராகு, கேது, சனியுடன் சேர்ந்து இருப்பது, சேர்ந்திருப்பது மட்டுமல்லாமல் ராகு கேதுக்கள் சூரிய, சந்திரனுடன் நெருக்கமான இணைவில், கிரகண தோஷத்தில் இருந்தால், கடுமையான பித்ரு, மாத்ரு தோஷம் உண்டு.

காரகோ பாவ நாஸ்திப்படி சூரியன் ஒன்பதாம் இடத்திலும் ,சந்திரன் நாலாம் இடத்தில் இருப்பதும் தோஷமே.

சூரிய மற்றும் சந்திரனை சனி நேரடியாக சமசப்தமாக பார்ப்பதும் தோஷமே.

சூரிய, சந்திர கிரகங்கள் சனி ராகு கேதுவின் நட்சத்திரத்தை பெறுவதும் தோஷமே.

லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி கெட்டவர்கள் குண்டூசியால் கிணறு தோண்டி தண்ணீர் குடித்த கதை தான் வாழ்க்கையில் முன்னேற்றமும்.

நாம் செய்த புண்ணியங்கள் நமது ஐந்தாம் பாவகத்தில் பதிவாகி, நம் குழந்தைகளுக்கு அது ஒன்பதாம் பாவமாக அமையும். அல்லது அமைந்திருக்கும்.

பித்ரு தோஷம் மற்றும் மாத்ரு தோஷம் இரண்டும் ஒருங்கே அமையப் பெற்ற ஜாதகர்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்பதை கனவில் மட்டும் கண்டு கொள்ளுங்கள்.

பித்ரு தோஷம் மற்றும் வழிபாட்டு, பரிகார முறைகளை தெளிவாக, தொடர் கட்டுரைகளாக அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன் .கட்டுரைகளை தொடர்ந்து படியுங்கள் .

Blog at WordPress.com.

%d bloggers like this: