அவரவர் ஜாதகமே பார்க்க வேண்டும். ஜாதக கர்மாவை அனுபவிக்கவே பிறவி எழுத்துள்ளோம்.
அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என நாம் வாழும் வாழ்க்கையில் பல நடிகர்கள் வந்து போகின்றனர்.
ஓரே தாயின் வயிற்றில் பிறந்து, ஒரே சூழ்நிலையில் வளரும் இரண்டு குழந்தைகளுக்கே எவ்வளவு வேறுபாடு.
ஒருவன் கோடீஸ்வரன். மற்றொருவன் சாதரண வாழ்க்கை வாழ்பவன்.
ஜோதிடரிடம் கேட்க்கும் பொதுவான கேள்வி. என் குழந்தை பிறந்த பின் எனக்கு அதிர்ஷ்டம் கிட்டுமா? என் குழந்தை ஜாதகம் பேசுமா? என்பதே
உடல் நிலை சரியில்லை என்றால் பாதிக்கப்பபட்டவர் மட்டுமே மருந்து சாப்பிட வேண்டும்.
அப்போதுதான் உடல்நிலை சரியாகும்.
அதுபோல் பிள்ளை கையில் கத்தியால் வெட்டிக்கொண்டது என வைத்துக்கொள்வோம். வலி, ரத்தம் அந்த குழந்தைக்கு மட்டுமே இருக்கும். ஆனால் உணர்வு, தன் குழந்தை வலியால் துடிக்கிறதே என பெற்றோர் உணர்வு ரீதியாக வருத்தப்பட மட்டுமே முடியும்.
வலியை குழந்தையிடமின்று கடனாக வாங்க முடியாது.
ஆனால் உணர்வுகள் ஏதே ஒரு விதத்தில் ஒன்றுபடும்
சிலர் எனக்கு குழந்தை பிறந்த பின் யோகம் என சொல்கின்றனர்.
உண்மை அது வல்ல.
அவருடைய ஜாதகத்திலும் அதே நேரத்தில் யோக அமைப்பான கிரக தசைகள் நடைமுறையில் இருக்கும்.
ஆனால் சில விஷயங்கள் பொதுவாக ஒத்து போகும்.
அசுப சம ராகு, சனி நடக்கும் போதும் 71/2 ,அட்டம சனி நடக்கும் போதும் குடும்பம் கொந்தளிப்பாகவே காணப்பபடும்.
அதுபோல் ஜாதகத்தில் கர்மம் செய்ய வேண்டிய காலத்தில் இருவருக்கும் ஓரே புள்ளியில் அமையும்.
மற்றபடி அவரவர் ஜாதகமே நன்மை, தீமை பொருத்து செயல்படும்.
இருக்கும் வரை புண்ணியத்தை சேர்ப்பதே பிறப்பின் நோக்கம். இறப்பிற்கு பின் இன்னொரு வாழ்க்கையும் உள்ளது.பிறவியின் நோக்கமே பிறவி பெருங்கடலை கடப்பது. அதை கெடுத்து கொள்ள கூடாது.
ஓம் நமசிவாய