புத்திர பாக்கியம் தரும் அமைப்புகள்
ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும், பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்” என்ற முக்கியமான சொற்றொடரைச் சொல்வார்கள்.
அதாவது நம்முடைய இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் நன்மை,தீமை, யோகம், அதிர்ஷ்டம், பாக்கியம், எல்லாம் நம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் ஏற்பட்ட கர்ம வினைப்படியே அமையும் என்பதாகும்.
திருமண பந்தம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் இன்றியமையாதது.
திருமணத்தின் அடிப்படை நோக்கமே வம்ச விருத்தி.நாம் இப்பூமியில் வாழ்ந்ததன் அடையாளம் நம் வாரிசுகளே.
பண்டைய நூல்களில் புத்திர பாக்கியம் இல்லாமல் மடிவோர் சொர்க்கத்திற்கு செல்ல முடியாது என்று கூறியுள்ளனர்.
அந்த வகையில் புத்திர பாக்கியம் பெறுவதைப் பெரும் பாக்கியமாக மக்கள் கருதுகின்றனர்.
காசு,பணம் கோடி கணக்கில் இருந்தாலும் கடைசியில் கொள்ளி போட வாரிசு அவசியம்.
புத்திர பாக்கியம் பெற உறுதி தரும் அமைப்புகள் :
இலக்கனாதிபதியும், 5ம் இடத்து அதிபதியும் பரிவர்த்தனை பெற்று அமைந்து இருப்பின் நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டு .
5ம் இடத்து அதிபதியும், 7ம் இடத்து அதிபதியும் பரிவர்த்தனை பெற்று சஞ்சரிக்கிற அமைப்பு நிச்சயம் புத்திர பாக்கியத்தை தரும்.
5ம் இடத்து அதிபதி, இலக்கனாதிபதியோடும், அல்லது ஏழாம் இடத்து அதிபதியோடும் இணைந்து இலக்கினத்திலும், கேந்திரத்திலும் அல்லது திரிகோணத்திலும் சஞ்சரிக்கிற காலம் உறுதியாக புத்திர பாக்கியம் உண்டு என நம்பலாம்.
5ம் இடத்து அதிபதியும், ஆண் கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு போன்றவர்களும், ஆண் இராசியில் வலிமை பெற்று விளங்குகிற அமைப்பு புத்திர பாக்கியத்திற்கு உறுதி தரத்தக்கதாக அமைகின்றது.
5ம் இடத்து அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று பலம் பொருந்தியதாக அமைந்து குரு பகவானோடு இணைந்து அல்லது பார்வை பெற்று சுக்கிரன், புதன் போன்ற சுபர்களால் பார்வைபெறுகிற அமைப்பும் நிச்சயம் புத்திர பாக்கியத்திற்கு உறுதி அளிக்கிக்கூடியதாக அமைகிறது.
5ம் பதியின் திசை, புத்தியிலும், 5ம்பதியும் லக்னாதிபதியும் கோட்சாரத்தில் இணையும் போதும், 5ம் மிடத்திற்கு குரு பார்வை கிடைக்கும் போதும் குருவால் குழந்தை அமையும்.
5ம்பதி ஓரளவு நன்றாக இருந்து, 2ம்பதிசா, புத்தி நடக்கும் போதும் குழந்தையை எதிர்ப்பார்க்கலாம்.
5ம்பதி நீசம், அஸ்தமனம், மறைவு, 5ல் சனி ராகு இருந்து பாவர் தொடர்பு ஏற்பட்டால் குழந்தை தாமதமாகும்.
இப்படி நுண்ணியமாக பார்க்க வேண்டிய பல அமைப்புகள் உள்ளன.
பரிகாரம்
குல தெய்வ வழிபாடு.திருசெந்தூர் முருகன் வழிபாடு.
பெங்களூருக்கு அருகில் தொட்டமளூர் கிருஷ்ணனையும், குருவாயூரப்பனையும் தொடர்ந்து வழிபட்டு வர நிச்சயமாகப் புத்திர பாக்கியம் அமையும்.
ஓம் நமசிவாய
Comments are closed.