பொதுபலன்களும் நட்சத்திரபலன்களும் நடைமுறைபலன்களும்
" காரகோ பாவநாஸ்தி " குழந்தை பிறப்பு "
ஜோதிட வகுப்பு முன்னோட்ட பதிவுகள்
பாரம்பரியம் முதல்நிலை சார ( நட்சத்திர ) ஜோதிடம்
ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர வேலையைச் செய்யும்.
27 நட்சத்திரம் 27 நட்சத்திரம் என பேசப்படுகிறது ஆனால் நட்சதிர பலனை கருத்தில் கொள்வதில்லை அல்லது நட்சத்திர ஜோதிட பலன் உரைப்பதில்லை. விளைவு நடைமுறை பலனுக்கு ஒத்துவராத பலன்.
உதாரனம்: “ கார்கோ பாவனாஸ்தி “ ஓர் அலசல்:
காரகோ பாவநாஷ்தி சிறு விளக்கம்:
12 பாவங்களுக்கும் காரகர்கள் உண்டு. ஒரு பாவத்தின் காரக கிரகம் அந்த பாவத்தில் இருந்தால் அந்த பாவ காரகங்கள் வலிமை இலக்கும் ( ஒரு பொதுபலன் ) என்று சொல்லப்படுகிறது. பாரம்பரியத்தின் முதல்நிலையான ஆதிபத்திய பலன்கள் முறையில்.
குறிப்பு:
பாவாதிபதி என்பவர் வேறு, காரகர் என்பவர் வேறு, பொதுவான விசயங்களை குறிப்பவர் காரகர் ஆவார், குறிப்பிட ஒரு சில விசயங்களை மட்டுமே குறிப்பவர் பாவாதிபதி ஆவார். பாரம்பரிய வகுப்பு பதிவுகளில் பாவதிபதிகள் மற்றும் காரகர்கள் விளக்கம் பதிவுகள் முலம் வெளிவரும்.
உதாரனம்: குரு ( குழந்தை பிறப்புக்கு காரகர் குரு )
குழந்தை பிறப்புக்கு காரகர்: குரு
முதல் குழந்தை பாவம் 5 ஆம் பாவம் மற்றும் பாவாதிபதி
இரண்டாம் குழந்தை பாவம் 7 ஆம் பாவம் மற்றும் பாவாதிபதி
முன்றாம் குழந்தை பாவம் 9 ஆம் பாவம் மற்றும் பாவதிபதி
நான்காம் குழந்தை பாவம் 11 ஆம் பாவம் மற்றும் பாவாதிபதி
ஏன்? எதனால்? எவ்வாறு?
குறிப்பு:
எந்த ஒரு பாவத்தையும் அதன் 3 ஆம் பாவம் அபிவிருத்தி செய்யும் பாவமாகும். மேலும் முதல் மனைவி 7 ஆம் பாவம் என்றால் இரண்டாம் மனைவி அல்லது வேறு தொடர்பு 9 ஆம் பாவமாகும். மேலும் 3 ஆம் பாவம் முதல் இளைய சகோதரன் என்றால் 5 ஆம் பாவம் இரண்டாவது சகோதரன். மேலும் தனக்கு மேல் இருக்கும் அண்ணனை குறிப்பது 11 ஆம் பாவம் என்றால் அந்த அண்ணனுக்கு மேலே இருக்கும் அண்ணனை குறிப்பது 9 ஆம் பாவமாகும். முனோட்ட பதிவுகளில் 3 ஆம் பாவம் அபிவிருத்தி பற்றி “ “பாரம்பரியத்தில் பாஸ்கரா பலன் கூறும் முறையில் “ சிறு உதாரனம் தந்துள்ளேன்.
பாரம்பரிய இரண்டாம்நிலை சார ஜோதிடமும் + நடைமுறை பலனும்
உதாரனம்:
விருசிக லக்னம் 5 ஆம் பாவம் மீனம் 5 ஆம் பாவத்தில் காரகர் குரு. காரகோ பாவநாஸ்தி குழந்தை பிறப்பு வீக் என்ற ஒரு பொதுபலன் முதன்மை பலனாக உரைக்கபடுகிறது. ஆனால் இங்கு நடைமுறை பலன் மீனத்தில் இருக்கும் குரு நின்ற நட்சத்திரம் பூரட்டாதி பாதம் 4 இல். குரு நின்ற நட்சதிரனாதன் குருவே ஆவார். விருசிக லச்னதுச்கு குரு 2 மற்றும் 5 ஆம் பாவங்களுக்கு பாவாதிபதி ஆவார்.
நடைமுறை பலன்? 5 ஆம் பாவ காரகதுவன்களை குருவின் திசா அ புத்தியில் குருவே நிகழ்த்துவார்.
குறிப்பு:
நட்சத்திரங்கள் மொத்தம் 27 ஒவ்வொரு கிரகத்திற்கும் 3 3 நட்சத்திரங்களாக பிரித்து தரப்பட்டுள்ளன. 3 indo 9 = 27 ஒவ்வொரு கிரகமும் 3 நட்சத்திரங்களின் நட்சதிர அதிபதிகள் ஆவர். குரு புனர்பூசம் விசாகம் பூரட்டாதி நட்சத்திரங்களின் நட்சதிராதிபதி ஆவார்.
அதாவது குரு தான் நின்ற நட்சதிரனாதன் வேலையை செய்வார் ( செய்தார் )
1 பாரம்பரியத்தில் ஜோதிடத்தில் நட்சத்திரம் சிறு குறிப்பு:
நட்சத்திரங்கள் மற்றும் நட்சதிர பாதங்கள் ஒரு பாவத்தில் இரண்டேகால் நட்சத்திரம் இருக்கும் மொத்தம் 9 நட்சத்திர பாதங்கள் இருக்கும் ஒரு நட்சத்திரம் 4 பாதங்களை கொண்டது. ஒரு நட்சத்திரம் முளுபாகையளவு 13.20 பாகையளவு கொண்டது 1 பாதம் 3.20 பாகையளவு ஆகும். 4 + 3.20 = 13.20 பாகையளவு மேலும் பாவங்கள் மொத்தம் 12 indo 9 பாதங்கள் மொத்தம் 108 நட்சத்திர பாதங்கள் மேலும் 27 நட்சத்திரங்கள். 27 indo 9 = 108 பாதங்கள். விரிவாக பாரம்பரியம் சார ஜோதிடம் இரண்டாம் நிலை பதிவுகளில் காணலாம்.
2 கேபி ஜோதிடத்தில் நட்சத்திரங்கள் மட்றும் நட்சத்திரங்களின் உப பிரிவு.
பாரம்பரியத்தின் பரிணாமம் கேபி ஜோதிடம் : நட்சத்திரங்களின் உப நட்சத்திரங்களின் பிரிவே “ 249 “ உப நட்சத்திரங்கள். ராசி மண்டலம் “ 360 “ பாகையில் உப நட்சத்திர கண்டுபிடுப்பு மற்றும் பயன்பாடு ஜோதிடத்தில் பலன் கானுதலில் அடுத்த கட்ட துல்லியம்.
இந்த “ 360 “ பாகையளவு ராசி மண்டலத்தில் “ 249 “ உப நட்சத்திரங்களில் லக்னாதிபதி அதாவது 1 ஆம் பாவாதிபதி யார் என துல்லியமாக கண்டுபிடித்தால் மட்டுமே ஒருவரின் துல்லிய விதி கொடுப்பினையையும் மதி கொடுப்பினையையும் கணிக்க இயலும். தீர்வு: தெய்வதன்மை வாய்ந்த மந்திரகோல் “ ஆளும்கிரகங்கள் “ முலம் துல்லியமாக கணிக்கலாம்.
ஒரு குறுப்பிட்ட நேரத்தில் பலரும் பிறந்திருக்கலாம் ஒரே நட்சத்திர பாதத்தில் ( பாரம்பரியம் கிரகங்கள் அடிப்படை ) அமர்ந்திருக்கலாம் ஆனால் பாவநிலையில் ( கேபி அட்வான்ஸ் ) 2 மணிநேர லக்னத்தில் 30 degree 120 நிமிடத்தில், ஒரு நட்சத்திரம் 52 நிமிடம், இன்னொரு நட்சத்திரம் 52 நிமிடம், மற்றும் ஒரு நட்சத்திர பாதம் 16 நிமிடம் மொத்தம் 120 நிமிடம் அதாவது 2 மணி நேரம்.
52 நிமிடத்தை 9 கிரகங்களுக்கு பிரித்து தந்தால் ( கேது முதல் சுக்ரன் வரை திசா புத்தி வாரியாக ) உப நட்சத்திரம் 4 நிமிடம் முதல் அதிகபட்சம் 10 நிமிடங்கள் மட்டுமே ( இங்கு மாற்றம் காணலாம் ) அடுத்து உப நட்சத்திரம் அதையும் தசா புத்தி வாரியாக பிரித்து தந்தால் உப உப நட்சத்திரம் 30 செகண்டுகளில் மாற்றம் பெரும் உப நட்சத்திரம் உண்டு ( இதில் மாற்றம் பெறலாம் ) அவ்வாறும் இல்லை என்றால் பாவங்களின் உள் தொடர்பில் மாற்றம் காணலாம், அவ்வாறும் இல்லையன்றால் பாவங்களின் விரிவான உள் தொடர்பில் மாற்றம் காணலாம் ( அதாவது தான் மற்றும் தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரங்களின் மாறுபட்ட பாவங்களின் உள் தொடர்பு ) ஒவ்வொரு ஜாதகமும் தனிப்பட்ட அம்சங்கள் நிறைத்து. யாவருக்கும் தனிப்பட்ட விதி கொடுப்பினையே.
இந்த மாற்றங்களே ஒரே இடத்தில, ஒரே மருத்துவமனையில், ஒரே நேரத்தில், பிறந்த குழந்தைகள் குணாதிசயங்கள் முதல் மரணம் வரை வித்தியாசம் கண்டு துள்ளியப்படுதுகிறது. ஒவ்வொரு நபர்களையும் வித்தியாசப்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிபட்ட விதியாகும் யாருக்கும் பொதுவிதி அல்ல. ஆகவே ஒவ்வொரு பிறப்பும் தனிப்பட்ட சிறப்புகளை கொண்டது. சாரம் மட்றும் உப சாரமே ஒருவரின் துல்லிய பலனை நிர்மாணிக்கும்.
குறிப்பு:
கேபி ஜோதிடங்களின் பதிவுகள் மோஸ்ட்லி உதாரன ஜாதகங்கள் மூலமே விளக்கப்படும்.
ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஜோதிடங்களை அறிய வேண்டிய அவசியம்
சப்தரிஷி நாடி ( கிரககாரகதுவங்கள் + பாவகாரகதுவங்கள் )
திரிகொனபாவங்களின் இயக்கம்: எந்த ஒரு பாவமும் பாவாதிபதியும் தனித்து இயங்காது. அதன் திரிகொனபாவங்கள் மற்றும் பாவதிலுள்ள கிரகங்களுடன் இணைந்தே செயல்படும் திரிகோண பாவங்கள் பற்றி முனோட்ட பதிவுகளில் சிறு உதாரணம் தந்துள்ளேன். ஜோதிட வகுப்பில் விரிவாக காணலாம்.
குரு ( 2 5 ) அமர்வு பாவம் மீனம் வடக்கு கடகம் விருசிகம் ஒரே திசா 1 5 9
மேலும் 2 7 / 3 11 ( conjection considered within 3 degree only ) பாவங்களில் உள்ள கிரகங்களுடன் ( கிரகம் இருந்தால் ) சேர்கை பெரும்பொழுது கிரக காரகதுவங்கள் மற்றும் பாவகாரகதுவங்கள் வகையில் பலனை குட்டவோ குறைக்கவோ செய்வார். ஆனால் பாவமே முதன்மையானவை கொடுப்பினை குழந்தை வரதுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. அந்த பலனை குட்டவோ குறைக்கவோ நாடி வகைகள் மட்றும் கொட்சாரங்கள் பலன்கள் பயன்படும்.
இதில்
முதல் தகுதி நிலை: 1 5 7 9
2 ஆம் தகுதி நிலை 2
3 ஆம் தகுதி நிலை 3 11 ( சேர்க்கை 3 பாகையுள் மட்டுமே )
4 ஆம் தகுதி நிலை: எந்த கிரகமும் சேர்கை இல்லையென்றால் அடுத்து தன் சுழற்சியில் சேர்கை பெரும் கிரகத்தின் சேர்கை.
குறிப்பு:
பாரம்பரிய ஜோதிடத்தில் சாரம் முறையை அதாவது இரண்டாம் நிலை கையாளும் பொழுதும் + பாரம்பரிய ஜோதிடத்தில் ஜாதக கொடுப்பினை மற்றும் திசா புத்தி கொடுபினையை அறிய பாஸ்கரா பலன் காணும் முறையை கையாளும் பொழுதும் + ஜாதக அமைப்பு மற்றும் திசா புத்தி பலனை குட்டவோ குறைக்கவோ நாடி முறையை கையாளும் பொழுதும் பலன் கானுதலில் ஒரு குறிப்பிட துல்லிய நிலையை அடையலாம். அதனால் போதுபலன்களை உருகாய் போல் குட்டவோ தவிர்க்கவோ செய்யலாம்.
விரிவாக நாடி ஜோதிட பதிவுகளில் விளக்கப்படும்.
ஷேர் செய்யவும் வகுப்பு ஆரம்பிபாதற்குள் நிறைய நபர்கள் பயன் பெற வாய்ப்புள்ளது. “ அண்டமே பிண்டம் “
அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்.
இலவசம்! இலவசம்! இலவசம்!
பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன் சி,காளிதாஸ்.
Comments are closed.