பொதுவாக மேஷ ராசி அன்பர்கள் சற்று வீம்பு பிடித்தவர்கள் என்றும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அற்றவர்கள் என்றும் சொல்லலாம். இவர்களிடம் விவாதத்திற்கு சென்றால் இறுதியில் சண்டை சச்சரவுடன்தான் முடியும். இவர்களைப் போன்றவர்களை பாராட்டி தான் வேலை வாங்க முடியமே தவிர மிரட்டி வேலை வாங்கிவிட முடியாது.
யுத்த காரகன் மற்றும் ரத்த காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் லக்கினாதிபதியாக கொண்டதால் சற்று அசட்டு தைரியமும், எதையும் சமாளித்து விடலாம் என்று வரட்டு தைரியமும் இவர்களிடம் மிகுந்து காணப்படும்.
மற்றவர்களுக்கு உதவும் குணமும் பொதுநலத்தில் ஈடுபடும் நாட்டமும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும் இவர்களைப் போன்றவர்கள் ஒரு அமைப்பில் தலைவராக இருக்கும் பொழுது விடாப்பிடியாக நின்று தான் கொண்ட அமைப்பின் கொள்கையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் முனைப்பாக செயல்படுவார்கள்.
மேற்கண்டவை அனைத்தும் பொது பலன்களே. இது அந்த ராசியில் உள்ள கிரகங்கள் மற்றும் பார்க்கும் கிரகங்கள் அவற்றின் தன்மையை பொருத்து பலனில் மாறுபட வாய்ப்பு உண்டு.
மேஷ ராசி சர ராசி, ஆண் ராசி மற்றும் நெருப்பு ராசி எனலாம்.
செவ்வாய் பகவானை ஆட்சி வீடாகவும், சூரியனை உச்ச வீடாகவும், சனி பகவானை நீச வீடாகவும், குரு, சந்திரன், சூரியனை நட்பு கிரகமாகவும், சுக்கிரனையும், சனியையும் சமமாகவும் மற்றும் புதன், ராகு, கேது ஆகிய கிரகங்களை பகை கிரகமாகும் கொண்டுள்ளது.
மேஷ ராசி சர ராசி என்பதால் பதினோராம் அதிபதியான சனி பகவானே பாதகாதிபதியாகவும், இரண்டு மற்றும் ஏழுக்குடையவர் மாரகாதிபதி என்ற வகையில் சுக்கிரன் மாரகாதிபதி ஆகவும் செயல்படுகிறார்.
மேஷ ராசிக்கு யோகராக லக்னாதிபதியான செவ்வாய், ஐந்தாம் அதிபதி சூரியன் மற்றும் ஒன்பதாம் அதிபதியான குரு பகவான் ஆகியோர் லக்கன யோகராக செயல்படுகிறார்.
எனவே மேஷ ராசிக்கு குரு, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய மூவரும் பாவருடன் கலப்பின்றி உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து இருப்பின் அதன் திசை, புத்தி காலங்களில் ஜாதகருக்கு யோக பலன்களை தருகிறது.
மேஷ ராசிக்கு மறைவிட ஸ்தானமான மூன்று மற்றும் ஆறுக்குடைய புதன் திசை வரும்பொழுது கடன் தொல்லைகளாலும், அல்லது நோய் தொல்லைகளாளும் அல்லது எதிரிகளாலும் தொல்லைகள் உண்டாகி அதிக கடன்களை தனது திசை காலத்தில் சாதகருக்கு தந்து கஷ்டப்படுத்தி பார்க்கும்.
மேஷ ராசியில் பொருத்தமட்டில் புதன் பலம் இழந்து நிற்பது நல்லது. இவ்வாறு பலமிழந்து இருப்பின் அதன் தசை புத்தி காலங்களில் இன்னல்களை அதிகம் தராது. அதேநேரத்தில் புதனுக்குரிய காரக பலன்கள் பாதிக்கப்படும்.
மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் அஷ்டமாதிபதி ஆக இருந்தாலும் அவையே லக்கனாதிபதியாகவும் இருப்பதால் தனது தசா காலங்களில் அதிக கஷ்ட நிலையைத் தராது.
மேஷ ராசிக்கு சனி பகவான் ஜீவன மற்றும் லாபாதிபதியாக இருப்பினும் 11-க்குடைய பாதகாதிபதி என்ற வகையில் அது பதினொன்றாம் இடத்தில் அமராமல் பத்தாம் இடத்தில் அமர்ந்து ஆட்சி பெறுவது சிறப்பான யோக பலன்களை தரும்.
மேஷ ராசிக்கு திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் குரு ஆட்சி பெற்று ராசியையும், ராசிக்கு ஐந்தாம் இடமான திரிகோண ஸ்தானத்தில் உள்ள சூரியனை பார்க்கின்ற அமைப்பை பெற்றவர்கள் யோகமான அமைப்பைப் பெற்றவர்கள் ஆவார்.