யாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்?
பொதுவாக ஜோதிடம் என்று வந்து விட்டாலே புதனைத்தான் எடுத்து கொள்ள வேண்டும்.
புகழ்பெற்ற ஜோதிடர்கள் அனைவருக்குமே புதன் வலுவாக இருக்கும். புதன் ஆட்சி, உச்சம் அல்லது மீனத்தில் நீசபங்க ராஜயோகமாக அமைந்து இருக்கும்.
புதன் மீனத்தில் சுக்கிரனோடு இணைந்திருக்கும்.அந்த புதன் சந்திர கேந்திரத்தில் அமைந்திருக்கும். அந்த புதனுக்கு வீடு கொடுத்தவரும் உச்சம் ஆட்சி பெற்று சந்திர கேந்திரத்தில் அமைந்திருப்பார். அந்த புதன் தன்னுடைய ரேவதி நட்சத்திரத்தில் அமையப்பெற்றிருக்கும். இதுதான் முழுமையான “நீச பங்க ராஜயோகம்” ஆகும்.
புகழ்பெற்ற ஜோதிடர்களுக்கு புதன் சந்திர கேந்திரத்திலோ அல்லது லக்ன கேந்திரங்களிலோ அமையப்பெற்றிருக்கும்.. புதனின் லக்ன, ராசிகளில் பிறந்திருப்பவர்கள் மிகுந்த கணிப்பு திறமைக்கு சொந்தக்காரர்கள்.
புதனை மட்டுமே நமது முன்னோர்கள் ஜோதிட அறிவுக்கு காரக கிரகமாக சொல்லி சென்றுள்ளார்கள். குரு வேத சாஸ்திர அறிவுக்கு காரகன். கேது வேதாந்த ஞானத்திற்கு காரகன்.
பத்தாம் அதிபதி வாக்கு ஸ்தானத்தோடு தொடர்பு கொண்டாலோ, வாக்காதிபதி பத்தாம் இடத்தோடு தொடர்பு கொண்டாலோ அல்லது இரண்டாமாதிபதி ,பத்தாம் அதிபதி சேர்க்கை பெற்றாலோ, தங்களுக்குள் பரிவர்த்தனை செய்து கொண்டாலோ வாக்கால் பிழைக்க கூடிய தொழில் அமையும்.
பத்தாம் அதிபதி(தொழில் )+மூன்றாம் அதிபதி(புகழ்)+ஜோதிடத்திற்கு காரகனான புதன் இணைவு, மூவரும் ஒரே வீட்டில் இருக்கும் போது உலகளவில் புகழ் பெரும் ஜோதிடராகலாம.
சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன், குரு இருந்து, ஆட்சி உச்சம் பெற்று அந்த புதனுக்கு பதினொன்றில் சுக்கிரன் இருக்க மிகச்சிறந்த ஜோதிடர்.
ராகு 5,11 ல் இருந்து குருவால் பார்க்கப்படுவது.
குரு, சுக்கிரன் உச்சம் பெற்று இரண்டாம் வீட்டோடு தொடர்பு கொள்வது..
சந்திரனுக்கு பன்னிரண்டாம் பாவத்தில் ராகு தேவி அமரப்பெற்று, அவர் சுபத்தன்மை பெறுவது லக்ன, ராசிக்கு பத்தாம் அதிபதி அம்சத்தில் புதன் அல்லது குரு வீட்டில் இருப்பது. புதன், சந்திரன் சமசப்தம பார்வை. புதனும், செவ்வாயும் சேர்க்கை பெறுவது பரிவர்த்தனை செய்து கொள்வது, சாரப்பரிவர்த்தனை செய்து கொள்வது ஆராய்ச்சி மனப்பான்மையை தரும்.
சந்திர கேந்திரத்தில் மட்டும் அல்ல. லக்ன கேந்திரத்திலும் புதன் இருக்கலாம்.
“ஆன கேந்திரத்தில் புந்தியிருக்க
இரண்டாம் வீட்டாதி தானுமே உச்சமாக
தகும் புகர் உபயமேவ,ஊனமில்லா மூன்றில் நல்லோருற
வெள்ளி உச்சமாக
மாநிலத்தில் உதித்த காளை
ஜோதிடம் வலுத்த வல்லோன்.”
ஒன்று, நான்கு, ஏழு,பத்தில்
புதனிருக்க, இரண்டாம் வீட்டாதி உச்சம் பெற,
மூன்றில் ஆன்றோராகிய சுபக்கிரகங்கள் இருக்க
சுக்கிரன் உச்சமாக பிறந்தவன் ஜோதிடம் வலுத்து சொல்வான்.
ஜோதிடம் சொல்வதில் வல்லவனாயிருப்பான்.”
(ஜாதக அலங்காரம்)
சனிக்கும் ராகுவுக்கும் கூட ஜோதிடத்திற்கு தொடர்பு உண்டு ..எப்படி?
ராகு வான்காந்த வெளியையும், சனி காலத்தையும் காட்டுகிறது. வானிலேயே மூன்று காலங்களும் ஒளிந்து இருக்கின்றது.. அதனை வெளிப்படுத்தும் சக்தி வேண்டுமாயின் ராகு+சனி சேர்க்கை, அல்லது காலசர்ப்ப தோசம் ஆகியன ஒரு ஜாதகத்தில் அமைய வேண்டும். என்னிடம் பொருத்தம் பார்ப்பதற்காக சில சையன்டிஸ்ட் ஜாதகங்கள் வந்த போது அதில் ராகு+சனி சேர்க்கையும், கால சர்ப்ப தோசத்தையும் கண்டு அசந்து போனேன்.
விஞ்ஞானிகளும்,ஜோதிடர்களும் ஆராய்ச்சி தானே செய்து கொண்டு இருக்கின்றார்கள்.!!! நிறைய முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் இந்த சேர்க்கை,காலசர்ப்ப தோசம் உள்ளது.
மேற்குறிப்பிட்ட விதிகளுல் பெரும்பாலான விதிகள் உங்களுக்கு ஒத்து போச்சுனா நீங்களும் ஜோதிடர்தான். நீங்களும் ஜோதிடத்தின் மூலம் பேரையும் புகழையும் அடைய முடியும்.
Comments are closed.