யார் தன்னுடைய பெயரில் சொந்த வீடு வாகனம் வாங்க கூடாது ?

எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என்பது போல் ஒவ்வொருவரும் தன் உழைப்பை, சேமிப்பை கொண்டு தன் வாழ்நாள் முடிவதற்குள் சொந்தமாக ஒரு வீட்டை கட்டி விட வேண்டும் என நினைக்கின்றனர்.

சிலர் வாடகை வீட்டிலேயே வாழ்ந்து மடிகின்றனர் .

சிலர் வீடு, வாசல் வாங்கி இருந்தாலும் அவற்றை அனுபவிப்பதில்லை. அவற்றில் அவர்கள் வாழ முடிவதும் இல்லை .

சிலர் வீடு, வாசல் வாங்கினாலும் வாங்கிய நாளில் இருந்து ஏதாவது ஒரு பிரச்சனை, பக்கத்து வீட்டாருடன் வரப்பு பிரச்சனை என வாழ்நாள் முழுவதும் கோட்டிற்கும், கேஸிற்க்கும் அலைந்து பணத்தை விரயம் ஆக்குவார்கள்.

பணம் இருந்தாலும் சிலருக்கு சிலர் சொந்த வீடு அவர் பேரில் வாங்குவது கூடாது .

பொதுவாக 4ஆம் வீடு ஒருவரின் வீடு, மனை, வாசல், வாகனம் ஆகியவற்றை குறிக்கும் இடம் .

இந்த நான்காம் அதிபதியும், பூமிகாரகனான செவ்வாயும் 6ல் மறைந்தால் அவர்கள் பெயரில் சொந்த வீடு, வண்டி, வாகனம் வாங்க கூடாது.

4ம் அதிபதி நீசமாகி இருந்து வேறு அமைப்பின் படி அவர்கள் வீடு வாங்கியிருந்தாலும் அது நிலைக்காது.

அதுபோல் 4ம் அதிபதியும், செவ்வாயும் கெட்டு, நாலாம் அதிபதி ஆறில் நீசமானால் சம்பந்தப்பட்ட தசாபுத்தியிலோ, ஏழரைச் சனியிலேயோ கோச்சாரபலன் குறைந்தால், கோட்டுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் அலைவதே வேலையாக இருக்கும். கடைசியில் தீர்ப்பும் எதிர்மறையாகவே இருக்கும்.

அதுபோல் நாலாம் அதிபதியும் சுக்கிரனும் கெட்டு இருந்தால் அவர்கள் பெயரில் நிச்சயமாக வண்டி வாகனங்கள் வாங்கவே கூடாது. மீறி வாங்கினால் அடிக்கடி விபத்து அல்லது செலவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

விபத்து ஏற்படுமா என்று மற்ற கிரக நிலைகளை வைத்து தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் கண்டிப்பாக பழுதாவது என விரைய செலவுகள் வண்டியில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்

என்ன செய்வது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்குமா?

Blog at WordPress.com.

%d