ராகு, கேதுவின் சுப, அசுப படிநிலைகளை ஜாதகத்தில் எப்படி அறிவது?
ஒவ்வொரு கிரகமும் ,நாம் முந்தைய பிறவியில் செய்துள்ள, கர்மபலனுக்கு ஏற்ப, சுப அல்லது அசுப பலனை, தன்னுடைய தசா புத்திகளில் கொடுத்துச் செல்லும்.
ஒரு ஜாதகத்தில், ராகு மிக சுப அமைப்புகளில் இருக்கும் பொழுது, கற்பனை செய்ய முடியாத அளவிற்கு, மிக நல்ல பலன்களை வாரி அதன் திசையில் வழங்கும்.
கேது, ராகு அளவிற்கு பொருள் வளத்தையும், ஏகபோகத்தையும் கொடுக்காவிட்டாலும் ,ஆன்மீக நிலையில் உயர் நிலையை அடைய உதவும். தான் யார் எங்கிருந்து வந்தோம் .எங்கு செல்ல போகிறோம் என்ற பிரபஞ்ச உண்மையை,
மிக சுப தொடர்பை பெற்ற கேது திசை கொடுக்கும் .
ராகுதசை நல்ல அமைப்பில் இருந்து, திசை நடத்த ஆரம்பித்தால், செவ்வாய் திசையின் இறுதிப் பகுதியிலேயே அதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டு விடும். ராகுதசை ஆரம்பித்தவுடன் நல்ல பலன்களை வாரி வழங்கும் .
அதே நிலைதான் கெடுதலான அமைப்பிற்கும்.
கேது கொஞ்சம் மந்தமாக ,கேது புத்தி ஆரம்பித்தவுடன் அதனுடைய செயல்பாடுகள் நடைபெறத் துவங்கும்.
மற்ற திசையை விட, கேது திசை நடக்கிறது என்பதை உங்களால் அனுபவ பூர்வமாக ,முழுமையாக உணர முடியும்.
ராகு நல்ல பலன்களை கொடுக்க வேண்டும் என்றால், ராகு நின்ற வீட்டதிபதி கெடக்கூடாது. ராகு 3, 6 ,10 11ல் இருந்து திசை நடத்தலாம்.
ராகு குருவின் பார்வையில் இருக்க வேண்டும் .
பங்கப் படாத அமைப்பிலுள்ள சுபருடன் சேர்ந்திருக்கலாம்.
ராகு நின்ற நட்சத்திர சாராதிபதியின் ,அதிபதி கிரகமும் ஜாதகத்தில் வலுத்திருக்க வேண்டும்.
ராகு சிம்ம வீட்டில் அமர்ந்து திசை நடத்தக்கூடாது. சுப அமைப்புகளைப் பெற்றாலும் பலன் பாதியாக குறைந்துவிடும்.
ஜாதகத்தில் ராகு, அசுப நிலையில் இருந்தால் ,ராகு திசையில், சுய புத்தியில் சில மாறுபாடான , கீழ்கண்ட பலன்களை அனுபவிப்பதன் மூலம், ராகு திசை சாதகமாக இல்லை என்பதை உணரலாம்.
ராகு திசை சுய புத்தியில் யாரிடமாவது பெரிய அளவில் ,ஏமாற நேர்ந்தால், ராகு சாதகமாக இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.
ராகு திசை சுய புத்தியயில் விஷக்கடிகளுக்கு ஆட்பட்டாலும், உணவில் ஒவ்வாமை ஏற்பட்டு
(food poison) மருத்துவமனையில் சேரும் அளவிற்கு பிரச்சனை உண்டானால், ராகு தசை மாறுபாடான செயல்களை செய்ய போகின்றது என்று அர்த்தம்.
நேற்றுவரை நார்மலாக இருந்த மனிதன், திடீரென குடி மற்றும் போதை வஸ்துகளுக்கு அடிமையானால் ,ராகுதசை எதிர்மறையான பலன்களையே செய்யும்.
ராகு நின்ற வீட்டதிபதி ஜாதகத்தில் நீச அமைப்பிலிருந்து, செவ்வாய் சனியின் பார்வையில் ராகு இருந்தால் ,ராகு திசை மிக மாறுபாடான பலன்களைச் செய்யும்.
கேது சுய ஜாதகத்தில் சுப அமைப்பில் இருக்கும் போது ஏற்கனவே சொன்னதுபோல், பொருள் வரவை குறைவாகக் கொடுத்தாலும், ஞானத்தை அதிகமாகக் கொடுக்கும். குருவின் வீடுகளில் கேது இருப்பது மிகச் சிறந்த அமைப்பு.
குரு பார்வையில் கேது இருந்து ,கேது நின்ற வீட்டதிபதி கெடாமல் இருக்கும் பட்சத்தில் ,கேது தசையில் ஓரளவு பொருள் வரவு ஆன்மீக எண்ணம் மற்றும் கோவில் குளங்களுக்கு சென்று வரக்கூடிய அமைப்பைக் கொடுக்கும்.
கேது சிம்ம வீட்டிலிருந்து, சனி செவ்வாயின் பார்வையைப் பெறுமானால், கேது திசை மிக விரக்தியை கொடுக்கும்.
பணவரவும் பல்லிலிக்கும். பணவரவு குறைந்தால் தானாக பைத்தியம் பிடித்து விடும்.
கேது சுப நிலையில் இருக்கும் பொழுது ஆன்மீக நிலையை அள்ளிக் கொடுக்கும் .அதே நேரத்தில் கேது அசுப அமைப்பில் இருக்கும் பொழுது ,நாத்திக எண்ணங்கள் மேலோங்கும்.
என்னடா வாழ்க்கை இது என்று எண்ணத்தோன்றும்.
ராகுவோ, கேதுவோ மாறுபாடான பலன்களை கொடுத்தாலும் ,எந்த நிலையிலும் இறைவனை சரணடைவதே, இந்த தசைகளுக்கு சரியான பரிகாரம் ஆகும்.
ஓம் நமசிவாய