எதிர்பார்ப்பும் vs யோகமும்

லக்னம், ராசி ,திசா புத்தி ,கோட்சாரம், போதுபலன்கள் vs நடைமுறை பலன்களும்.

3,115

உச்சிஷ்ட மகா கணபதி துணை

 

லக்னம் vs  ராசி

  • பொதுபலன்
  • திசாபுத்தி
  • கோட்சாரம்.

 

1 லக்னம் vs  ராசி

 

லக்னம்:

லக்னம்:

1 ஆம் பாவ சிறப்பு ஜாதகர் மட்றும் ஜாதகர் எதையும் அனுபவிக்கும் யோகம். மேஷம் முதல் மீனம் வரை 12 லச்னங்களுக்கும் இந்த காரகதுவங்கள் ஒன்றே.

 

ராசி:

லச்னதுக்க்கு 1 ஆம் பாவ சிறப்பு ஜாதகர் மட்றும் அனுபவிக்கும் யோகம் என்பது போல் ஏதாவது மேஷம் முதல் மீனம் வரை 12 லக்க்னங்களுச்கும் பொதுவாக ஒரே விதியை உரைக்க முடியுமா?

 

லக்னம் அனுபவித்தல் vs  ராசி எதிர்பார்தல்

 

எதையும் அனுபவிக்கும் யோகம் எதிர்பார்ப்புக்கு மட்டும் வேண்டுமா?

அல்லது

எதையும் அனுபவிக்கும் யோகம் வேண்டுமா?

 

எதையும் அனுபவிக்கும் யோகம் ஜாதகருக்கே அதாவது லக்னதுக்கே வேண்டும். லக்ன பாவ கொடுபினைஹே முதன்மை. லக்னம் வலு இழந்து எது இருந்தாலும் அனுபவிக்கும் யோகம் குறைவே.

 

ராசியை முதன்மையாக வைத்து பலன் கூறுதல் ஜோதிட மடத்தனம். அதுவும் ஜோதிடத்தின் அடிப்படை விஷயமான 12 பாவகாரகதுவங்களையும் அறியாத மடத்தனம். இன்னும் ஒரு படி மேல் சென்று சிம்பிள் ஆக கூறினால் 12 பாவகாரகதுவன்களை முழுமையாக அறிய வேண்டாம் 12 பாவங்களையும் தன் ஆளுமையில் வைத்து இயங்கும் தலைமை செயலகம் லக்ன பாவமான 1 ஆம் பாவ காரகதுவங்களை அறியாத மடத்தனம் முட்டாள்தனம்.

 

குறிப்பு:

ராசியை வைத்து பலன் கூறும்வரை ஜோதிடம் என்ற அறிவியல் உண்மை வெளிப்படாது. சரியான ஜாதக பலனும் கணிப்பும் கிட்டாது.

 

2 பொதுபலன் + கோட்சார பலன்

 

பொதுபலன்:

சாதாரணமாக வாயில் வருவது இருதார அமைப்பு. ஓர் உதாரனம் ஆண் ஜாதகத்தில் மிதுனத்தில் சுக்ரன் இர்ருந்தால் இருதார அமைப்பு என்று, இது 4 ஆம் அல்லது  5 ஆம் கட்ட பலன். வெறும் உருகாயை மட்டுமே வைத்து பசியாற முடியாது உருகாய் டேஸ்ட்க்கு மட்டுமே தொட்டுக்கொள்ள பயன்படும் அதுபோலவே பொதுபலன்களும். தவிர்தாலும் பெரிய பாதிப்பில்லை. தவிர்க்கலாம் காரணம் காலபுஷ தத்துவ விளக்கம் இதுவல்ல. ( ஜோதிட வகுப்பில் திரு கேபி திலக் பாஸ்கர் ஐயாவின் “ காலச்சக்கரம்” புத்தகம் குறிப்பிட்ட நேரத்தில் பரிந்துரைக்கப்படும்)

 

விளக்கம்:

சுக்ரன் மிதுனம் புதன் வீடு புதன் இரட்டை குணம் காதல், மிதுனம் காலபுருஷ தத்துவதிர்ச்கு 3 காமம் விரயம் ஸ்தானம் அங்கு சுக்ரன் ( தமிழில் குறிப்பிட விரும்பவில்லை ) இர்ருந்தால் போதுமா? 5 ஆம் பாவம் கொடுப்பினை ( பாலின ஆர்மோன்கள் ) ஆராய வேண்டாமா? 1 ஆம் பாவம் லக்னம் எதையும் அனுபவிக்கும் யோகம், 3 ஆம் பாவம் ( லச்னதுச்கு 3 ஆம் பாவம் விரயம் காமஷ்தானம் )  7 ( களத்திர பாவம் )  11 ( எதிர்பாலர் வகையில் சந்தோசம் ) பாவங்களை ஆராய வேண்டாமா? ஆராய்தல் அவசியம். ஒரு குறிப்பிட்ட இருதார அமைப்பிற்கு கேள்விக்கு. மேலும் இங்கு களத்திரதோஷம் புனர்புதோசம் கலதிரகாரகர்கள் ஆணுக்கு சுக்கிரன் பெண்ணுக்கு செவ்வாய் மேலும் இருபாலருக்கும் 7 ஆம் பாவாதிபதி கேது சேர்கை மற்றும் சனி குரு பார்வை சேர்கை என எங்கோ உள்ளது.

 

12  பாவங்களின் கொட்டுப்பினை என பெரியோர்கள் வகுத்தனர். குறிப்பிட்ட பாவங்களில் ஓன்று வலுகுன்றினாலும் மேலும் குறிப்பிட்ட பாவங்களின் அதிபதிகள் தாம் இருக்கும் பாவத்திலிருந்து 5 9 / 2 7 இல் கேது ( விரக்தி ) சனி ( தவறான அபிப்ராயம் ) சூரியன் ( கௌரவம் ) குரு ( பெரியமனிதன் கௌரவம் ) போன்ற கிரகங்ககள் சேர்கை பெற்றால், உருகாய் தொட்டுக்கும் அளவு கூட இந்த பொதுபலன் பயன்படாது.

 

3 திசாபுத்தி கோட்சாரம் பலன்கள்:

 

கோட்சாரம் பெயர்ச்சி கேள்விகள்:

ராகு கேது பெயர்ச்சி, சனி மற்றும் குரு பெயர்ச்சி. இந்த ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி எப்படி? குரு பெயர்ச்சி எப்படி? சனி பெயர்ச்சி எப்படி?

 

கோட்சார பெயர்ச்சி பதில்கள்:

இந்த ராசிக்கு இப்படி, அந்த ராசிக்கு அப்படி என்று பதில்கள்….. உதாரணம் சனிபெயர்ச்சி: ரிஷிபம் அஷ்டமசனி, மற்றும் விருசிகம் தனுஷு மகரம் 7.5 சனி, மிதுனம் கண்டகசனி, கன்னி அர்த்தாஷ்டமசனி  நடப்பு ஓகே உலகில் உள்ள குறிப்பிட்ட அணைத்து ராசி அன்பர்களுக்கும் ஒரே பலனா நடக்கும் அடுத்த 2.5 வருடத்துக்கும்? என்ன மடத்தனம் முட்டாள்தனம்….நடைமுறை பலனே வேறு இதுவே உண்மை சத்தியம்

 

சந்திரன் திசா புத்தி:

மாற்றம் மட்டுமே மாற்றம் இல்லாதது. சந்திரன் நிலை இல்லாதவன். தான் நிற்கும் நட்சத்ரங்களின் பலனை தருவான். இங்குதான் மாற்றம் ஒரே ராசியை இருக்கலாம் ஆனால் திசா புத்தி சாரம் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு நடந்து கொண்டிருக்கும். லக்னம் போல திசா புத்தியே முதன்மையானது. ராசி மற்றும் கோட்சாரம் உருகாய் போன்றது தேவையன்றால் தொடுக்கலாம் அல்லது தவிர்க்கலாம்.

 

திசாபுத்தி மற்றும் கோட்சாரம்:

திசாபுத்தி பலன் 80%  கோட்சார பலன் 20%. அதுவும் திசா புத்தி பலன் பராசாரர் ஜோதிடத்திற்கு சொந்தமானது கோட்சார பலன் நாடி ஜோதிடத்திற்கு சொந்தமானது. பராசாரயில் சந்திரனை மட்டும் வைத்து சொல்லப்படும் கோட்சாரம் சுத்தமான டம்மி பலன்களே நடைமுறையில் நடக்கும்.

 

ராசி கோட்சாரம் மற்றும் போதுபலங்கள் போன்றவற்றை முதன்மையாக வைத்து பலன் கூறும் வரை ஜோதிடம் என்னும் அறிவியல் உண்மை புலப்படாது.

 

குறிப்பு:

ஜோதிட வகுப்பில் இவையல்லாம் உருகாய் அளவே பயன்படுதப்படும் மற்றும் பயனாளிகள் இவைகளுக்கு முக்கியத்துவம் தருதல் தேவையற்ற ஒன்று என்பதற்காக பதிவு வெளியடப்பட்டது….நன்றி

 

உண்மை இருப்பின் ஷேர் செய்யவும் ஜோதிட வகுப்பு ஆரம்பிபதற்குள் பல நபர்கள் இணையலாம் .

அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்.

 

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன் சி,காளிதாஸ்…

 

 

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More