ரிஷப ராசி குண நலமும், வாழ்வின் தன்மையும்.

3,293

“சேய்சனி புதன் பொன் நட்பு
சீரிய புகரோன் ஆட்சி தூய்மைசேர் மதியே உச்சம்
துயர் தரும் பாம்பு நீசம் காய்கதிர் பகையே யாகும் கண்டனர் இடபம் தன்னில் ஆய்தரு பொருள்க ளெல்லாம்
அறிந்தினி துரைக்க லாமே!”
-சாதக அலங்காரம்

ரிஷபம் ராசியில்

நட்பு-செவ்வாய் ,சனி ,புதன் குரு.

ஆட்சி -சுக்கிரன்
உச்சம் -சந்திரன்
நீசம் -ராகு கேது
பகை -சூரியன்

ரிஷப ராசி ஆனது நிலம் ராசி, ஸ்திர ராசி மற்றும் பெண்தன்மையான ராசி ஆகும் .

ரிஷப ராசி அன்பர்கள் உண்மையைப் பேசுபவர்கள்.
கொஞ்சமாக உண்பவன். குண்டு உடம்புகாரன். பிறருக்கு கீழே வேலை செய்பவன். புளிப்புச்சுவை ஆசையுள்ளவன். கணித சாஸ்திரத்தில் வல்லுநர். உயர்ந்த ஆடை, ஆபரணங்களை அணிந்து இருப்பான்.

மிருதுவான காது மடல்களை உடையவன் புத்திசாலி, சிறுபிள்ளையைப்போல விளையாட்டுத் தனமாக நடந்து கொள்வான்.

பேராசையுடன் பிறர் உடைமைகளை அபகரிப்பவன். இருமல் முதலிய கபம் சார்ந்த நோய்களை உடையவன். தன் பிள்ளைகளின் மழலைச் சொற்களை கேட்பதில் மாறாத ஆசையுள்ளவன் .

ஐந்தாம் வயதில் அக்கினி பயத்திற்கு ஆட்படுவான். பதினாறாம் அகவையில் கழுத்து வியாதியால் கஷ்டப்படுவார். பத்தொன்பதாம் பிராயத்தில் இருமலால் இன்னலுக்கு உள்ளாவான். இருபதாம் வயதிலும், இருபத்தெழாம் வயதிலும் காய்ச்சல் வரும் இலக்னத்தை சுபக்கிரகங்கள் பார்வையிட்டால் எழுபத்து ஏழு வயது வரை ஆயுள் உண்டு .

இவை அனைத்தும் பொதுப்பலன்கள் லக்னாதிபதி தன்மை சுபகிரக பார்வை, இவற்றைப் பொறுத்து ராசியின் பலன் மாறுபடும்.

ரிஷப ராசி ஸ்திர ராசி என்பதால் ஒன்பதாம் அதிபதி பாதகாதிபதி ஆகும். அவ்வாறு பார்க்கையில் சனி பகவானாவார் ஒன்பது மற்றும் பத்தாம் இடத்திற்கு உடையவராக வந்து அதே நேரத்தில் சனிபகவான் இலக்கன யோகராக இருந்தாலும், பாதகாதிபதி என்ற வகையில் அதன் தசாபுத்திகளில் ஒரு சில பாதகங்களையும் தர வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசியை பொறுத்தவரை சனி தசை யோக தசை ஆகும். எனவே சனி பகவான் ஆனவர் பாதகாதிபதியை விட பாதக ஸ்தானத்தில் உள்ள கிரகம் அதிகமான இன்னல்களை தரும் என்ற வகையில் பாதக ஸ்தானமான 9 ஆம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பதை விட பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பது அதன் தசாபுத்திகளில் அதிக யோகங்களை தர வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசிக்கு அடுத்த லக்கன யோகராக புதன் திசை விளங்குவதால் பாவிகளோடு தொடர்பு பெறாத புதன் பகவான் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று நிற்கும் பொழுது அதன் திசை புத்திகளில் யோக பலன்களைத் தர வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசிக்கு சுக்கிரன் பகவான் ருண,ரோக பிணி பீடைகள் தரக்கூடிய ஆறுக்குடையவன் என்றபோதிலும் அவை இலக்கினாதிபதி என்ற வகையில் அதன் தசா புத்திகளின் யோக பலனை தர வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசிக்கு சுக்கிரன் ராசியாதிபதியாக இருப்பதால் அசுர குருவான சுக்கிராச்சாரியார் தேவகுருவான பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான் பகை கிரகமாக வருவதால் குரு திசை காலங்கள் மிகுந்த இன்னல்களை சாதகருக்கு தந்துவிடுகிறது. இது போன்ற தருணங்களில் வியாழன்தோறும் குருபகவானை வழிபட குரு பகவான் தரக்கூடிய இன்னல்களிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளலாம் .

ரிஷப ராசிக்கு 2, 5-க்குடைய புதன் கன்னியில் உச்சம் பெற்று லாபஸ்தானமான பதினோராம் இடத்தில் இருந்து ஆட்சி பெற்ற குருவால் பார்க்கப்பட்ட அமைப்பு பெற்றவர்கள் கல்வி கேள்விகளில், வித்தைகளில் புலமை பெற்றவராக, நிரம்பக் படித்தவராக மற்றும் தனயோகம் உடையவராக காணப்படுவார். தனாதிபதியான புதன் பகவானை, தனகாரகன் குருவால் பார்க்கப்படும்போது எந்நாளும் காசு பணத்திற்கு குறைவில்லாது வாழ்வார்.

ரிஷப லக்னத்திற்கு 12-க்குடைய செவ்வாய் விரய ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்தில் ஆட்சி பெற்ற அமையப் பெற்றவர்கள் கடல் கடந்து வெளிநாடு செல்லும் யோகம் பெற்றவராக திகழ்வார்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More