கல்வி
======

ஒருவருக்கு கீழ்க்கண்டவற்றிக்கு ஆதரமாக இருப்பது கல்வியே ஆகும்

• அறிவு வளர்ச்சிக்கு
• நல்ல குணநலன்கள்
• சமூகத்தில் மதிப்பு
• உத்தியோகம் / தொழில் / நல்ல ஜீவனம்

தற்பொழுதுள்ள சூழ்நிலையில் கல்வி தான் ஒருவருக்கு திருப்புமுனையாக அமையும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது.

எனவே இதற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களுடைய குழந்தைகளை முன்னணியில் உள்ள கல்வி நிறுவனத்தில் பல லட்சம் செலவழித்து படிக்க வைக்கின்றனர். ஆனால் இதெல்லாம் எதற்கு தன் குழந்தைகளை DOCTOR,ENGGINEER,PROFESSIONAL மற்றும் இதர துறைகளில் படித்தவுடன் CAMPUS INTERVIEW ல் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான்.

ஆனால் இதெல்லாம் நடக்கிறதா?

• பலருக்கு எண்ணிய கல்வி கிடைப்பதில்லை
• பலருக்கு தோல்வி ஏற்படுகிறது
• பலருக்கு படிப்பில் தடை ஏற்படுகிறது
• பலருக்கு மேற்படிப்பு அமைவதில்லை
• பலருக்கு உடனே வேலை வாய்ப்புகள் அமைகிறது
• பலருக்கு படிப்புக்கும் சம்பந்தமில்லாத வேலை வாய்ப்பு / தொழில்

அதேபோல் தற்போது பலதுறைகளில் வேலைவாய்ப்புகள் உண்டு அதற்கு தகுத்த கல்வியை எடுத்து படித்தால் தான் கிடைக்கும் நிலைமையும் உண்டு எனவே அத்துறை சார்ந்த படிப்புகள் ஜாதகருக்கு சரிவருமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது அவசியம்

இதற்கு காரணம் பல உண்டு அவற்றில் ஒன்று ஜாதகத்தை ஆராயாமல் ஜாதகரின் திறமைகளை அறியாமல் செய்யப்படும் முடிவும் ஒன்று ஆகும்.
எனவே PRE KG சேர்க்கும் முதலே குழந்தைகளின் ஜாதகத்தினை ஆராய்ந்து அவர்களின் திறமைகளை அறிந்து அவர்களை ஊக்குவிப்பது, நல்ல நாள் பார்த்து கல்வி நிறுவனத்தில் ஆரம்ப கல்வியில் சேர்க்கும் போது அவர்கள் படிப்பில் சிறந்து விளங்க வாய்ப்புகள் ஏற்படும்..
அதற்கு ஜாதகத்தில் ஆராயவேண்டியவைகள் :

• 2 மிடம் ஜாதகரின் ஆரம்ப கல்வியை குறிக்கிறது

• 4 மிடம் பட்டப்படிப்பையும்

• 8 மிடம் தொழில் நுணுக்கக் கல்வியையும்

• 9 மிடம் உயர் கல்வி – PG COURSE

• 12 மிடம் ஆராய்ச்சி கல்வி

• 5 மிடம் திறமை,புத்திசாலித்தனம், ஞாபக சக்தி ஆகியவை குறிக்கும்

• மேலும் கல்வி காரகன் புதனின் நிலை, மனோ காரகன் சந்திரனையும், மூளை காரகன் குருவையும் ஆராய்ந்து பலன் உரைக்க வேண்டும்

• புதன் நீசமாக கூடாது. அந்த நீசா புதனை பாவ கிரகத்தின் பார்வை இருக்க கூடாது. 2ல் நீசக்கிரகம் இருக்ககூடாது

• புதன் நீசமானாலும் சில கிரக அமைப்பினால் கல்வியை ஏற்படுத்தி கொடுத்து விடும் உதாரணம் : மீனத்தில் புதன் நீசமடைந்து அங்கு குரு பகவான் ஆட்சி பெறும் போது நீசபங்கம் ஆகி புதன் பலம் பெற்று கல்வியை அளித்து விடுவார்.

• புதன் 2 மிடத்தில் இருப்பது கல்வியை ஏற்படுத்தி கொடுத்து விடும் என்பது விதி. புதனுடன் சூரியன் அல்லது குரு சேர்ந்து இருந்தால் நல்ல கல்வியை ஏற்படுத்தி விடும். ஆனால் தீய கிரகங்கள் தொடர்பு கல்வியை கெடுத்து விடும் அல்லது தடங்கல்களை ஏற்படுத்திவிடும்.

• எந்த லக்கனமாக இருந்தாலும் புதன் கன்னியில் இருந்தால் கல்வியில் உயர்வு உண்டு ஆனால் பாவக சக்கரத்தில் மாறாமல் இருந்து பரலின் எண்ணிக்கை 24 க்கு குறையாமல் இருந்து பாவ கிரகத்தின் தொடர்ப்பு இல்லாமல் இருக்கவேண்டும்

• பாவகர்த்தாரி தோஷத்தில் புதன் இருக்ககூடாது

• காரகன் பலமாக இருந்தாலும் காரகத்தின் வீடுகள் கெட்டுவிடக்கூடாது.

• இன்னும் பல காரணிகள்

எனவே இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பெற்றோர்கள் தனது குழந்தைகளின் (ஜாதகரின்) கல்வி நிலையை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் கல்வி நல்ல சிறப்பையும் அதற்கு உண்டான உத்தியோகம் / தொழிலை ஏற்படுத்தி கொடுத்து வாழ்க்கை சுமை இல்லாமல் சுமூகமாக, சிறக்க வழிவகை செய்யும்.

எனவே அருகில் இருக்கும் ஜோதிடரை அல்லது என்னை சந்தித்து பயன் பெறுங்கள்

நன்றி

என்றும் அன்புடன்
வாழ்க வளமுடன் நலமுடன்

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனத்தம் ஜோதிடலயம்
97901 26877

8778797194

Blog at WordPress.com.

%d bloggers like this: