How to worship shivling சிவலிங்க வழிபாடு :

அகவழிபாடு புறவழிபாடு ஆகிய இரண்டு வழிபாட்டு முறைகளுக்கும் பஞ்சாட்சர மந்திரம் உதவுகிறது .
“நமச்சிவாய ” என்பது பஞ்சாட்சர மந்திரம் வலது நாசித் துவாரத்தை சிவன் என்றும் இடது நாசித்துவாரத்தை சக்தி என்றும் யோக சாஸ்திரம் கூறுகிறது …..
புலன்களுக்குப் புலப்படாத பரம் பொருளை நாம் குருவின் மூலமாகவும் ,மூர்த்திகள் மூலமாகவும் மனத்தில் நிச்சயித்துக் கொண்ட பல வடிவங்கள் மூலமாகவும் தியானம் செய்து வழிபடுகிறோம் . நாம் ஆலயங்களிலுள்ள மூர்த்திகள் லிங்கங்கள் எல்லாம் பக்தியினாலும் மந்திர சக்தியினாலும் பரம் பொருளின் வடிவமாகக் காட்சி அளிக்கின்றன உருவமாகவும் அருவருவமாகவும் அருவமாகவும் படிப்படியே தியானம் செய்த பிறகு “சிவோகம் ” (நானே சிவம் )என்ற பேத மற்ற ஞானம் நமக்கு ஏற்படுகிறது…
பஞ்சாட்சரத்தில் “நம” என்பதைச் சீராக உள்ளிழுத்து “ஒம்” என்று சிறிது நேரம் நிறுத்தி, “சிவ” என்று சொல்லி வெளியிடும்போது “ய”என்ற அட்சரம் மந்திரத்தின் உயிராக அமைந்து இந்த சுவாசத்தைப் பூர்த்தி செய்கிறது பஞ்சாட்சர ஜெபம்…
சிவலிங்க ஸ்வரூபங்கள் சிவ-சக்தி ஐக்கியம் ரூபமாக விளங்குவதால் ஆனந்தமயமானவரும், மங்களத்தை அளிப்பவருமான சிவனைத் துதிப் பவர்களுக்கு சக்தியும் எளிதில் கிடைக்கிறது. சிவன் பஞ்சபூதத் தத்துவங்களைத் தன்னுள் அடக்கி இருக்கிறான் .ப்ருதவி,அப்பு,தெயு,வாயு, ஆகயம் ஆகியவை பஞ்சபூதங்கள் .
பஞ்சபூதத்தலங்கள்;
அப்பு-திருவானைக்கா.
தேயு-திருவண்ணாமலை.
வாயு-காளஹஸ்தி.
ப்ருத்வி-காஞ்சிபுரம்.
ஆகசம்-சிதம்பரம்.
இத்திருத்தலங்களில் இருக்கும் லிங்க மூர்த்திகளை தரிசித்து இயற்கையையே இறைவனாகப் பக்தர்கள் காண்கிறார்கள் ருத்ரனை வழிபடப் பயன்படும் மந்திரம் ஸ்ரீ ருத்ரம் இதைச் ஜெபித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்
You must be logged in to post a comment.