கொரோனாவிற்கு தீர்ப்பெழுதும் காலம் எப்போது?

2,114

வரும் 30. 3 .2020 அதிகாலை 3.56 முதல் குரு அதிசாரமாக மகர ராசியில் அமர்கிறார்.

மருத்துவ கிரகமான செவ்வாய் பத்தில் திக் பலத்துடன் உச்சம் பெறுகிறார்.

சனி, செவ்வாய் கூடினாலும், சனி கால புருஷனுக்கு ,பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சூரியனின் சாரம் பெற்றுள்ளார்.

சூரியன் சனி நட்சத்திர பரிவர்த்தனை.

அதாவது சனி குரு செவ்வாய் மூன்றும் சூரியனின் உத்திராடம் 2ம் நட்சத்திர பாதத்தில்.

கால புருஷனுக்கு தர்மகர்மாதிபதி ஆன ஒன்பதாமிடக்குரிய குருவும், பத்தாமிடத்திற்குரிய சனியும் மகரத்தில் அமர்கின்றனர். மருத்துவ கிரகமான செவ்வாயும் இணைகிறார்.

காலபுருஷ லக்னத்திற்கு முதல் லக்னாதிபதியும், மறைவிடத்தை குறிக்கக்கூடிய எட்டாம் அதிபதியும் ஆகிய செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறும் காலத்தில் ,அனைத்து மருத்துவ கிரகங்களும் சூரியனின் சாரம் பெறுவதால் ஏப்ரல்1ம் தேதிக்கு மேல் நிச்சயமாக கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படும்.

இந்த நிமிடம் வரை அதிகாரபூர்வமாக கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

அசித்ரோமைசின்+ஹைட்ராக்ஸி குளோரோக்குவின்
(Azithromycin+Hydroxychloroquine)

மருந்துகளின் செயல்பாடு கொரோனாவை கட்டுப்படுத்தும் என்று அதிகாரப் பூர்வமாகவும் ,அறிவியல் பூர்வமாகவும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

பரிசோதனை முயற்சியில் மட்டும்தான் உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கண்ட மருந்துகளை பரிந்துரை செய்து இருந்தாலும் ,நேற்று ஒரே நாளில் 654 பேர் அமெரிக்காவில் மரணம்.

இதிலிருந்து கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதுவரை நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவ கிரகங்கள் (செவ்வாய், சூரியன் ,குரு,கேது.கேது குருவின் வீட்டில் )

மருத்துவ கிரகங்கள் அனைத்தும் சூரியனின் சாரத்தில் இருப்பதால்,தலைமையை குறிக்கும், உலகத்தில் கட்டப்பஞ்சாயத்து நாயகன் என அழைக்கப்படும் அமெரிக்காவே கொரோனாவிற்கு மருந்தும் கண்டுபிடிக்கும்.

அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம் .கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். கொரோனாவை விரட்டுவோம்.

ஓம் நமசிவாய

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More