Forum

Please or Register to create posts and topics.

சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கும்ப ராசி 2020

2020-ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான ஸ்ரீசார்வரி வருஷம், மார்கழி மாதம் 11ம் நாள், ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறுகிறார்.

இக்காலகட்டங்களில் கும்பராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

கும்ப ராசிக்கு சனிபகவான் தற்போது
11ம் இடத்தில் இருந்து 12ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
12ம் இடத்தில் தன் சொந்த வீட்டில் ,ஆட்சி ஆகும் சனி , அங்கு உத்திராடம் ,திருவோணம் ,அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.

அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -2ஆம் இடத்தையும் ,7-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 9ம்இடத்தையும் பார்ப்பார்.

கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் விரைய சனி ஆரம்பிக்கிறது என்று பீதியடைய வேண்டாம்.

சில வழி முறைகளை கையாண்டால் ஏழரைச் சனியை எளிதாக எதிர்கொள்ளலாம்.

ஏழரை சனியில் தற்போது விரய சனி ஆரம்பிக்கிறது என்பதால் விரயங்களை கொடுக்கும் .அதை சுப விரயமாக மாற்றிக்கொள்வது நல்லது.

கையில் இருக்கும் பணம், காசுகளை தொழில்துறையில் முதலீடு செய்யாமல் அதை சுப முதலீடுகளாக மாற்றிக்கொள்வது நல்லது.

கையிலிருக்கும் பணத்தை காலி மனையாக வாங்கிப் போடலாம். ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் நிரந்தர வைப்புத் தொகையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை வெளியே எடுக்க முடியாதபடி பாதுகாப்பாக சேமித்து வைக்கலாம்.

வீட்டில் இருக்கும் நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது.

கையில் இருக்கும் பணத்தினை புதிய தொழில் துறையிலோ, அல்லது லாபம் வரும் துறையிலோ இப்பொழுது முதலீடு செய்வது கூடாது.

Death investment எனப்படும் காலி மனையில் அல்லது fixed deposit ல் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது.

சிலருக்கு இடமாற்றம் ,தொழில் மாற்றம் ஏற்படும் என்பதால் விரைத்துக்கொண்டு புதிய தொழில் தொடங்க வேண்டாம்.

செய்யும் தொழிலை தாராளமாக செய்யலாம். ஆனால் முதலீடுகளை அளவோடு செய்து கொள்வது நல்லது. புதிய கிளைகள் தொடங்குவது கண்டிப்பாக கூடாது.

கொடுக்கல்-வாங்கலில் அளவுடன் கொடுத்து வாங்கிக் கொள்வது நல்லது.

சிலருக்கு நெருங்கிய உறவில் அதிருப்தியோ அல்லது பிரிவோ ஏற்படலாம்.

மாணவர்கள் கவனமுடன் படிக்கும் காலம் இது.

விரும்பத்தகாத விருப்பங்கள் வந்து சேரும் காலம் என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்து சரியான தசாபுக்திகள் நடந்தால் காதல் கனியும் .அதனால் சில பிரச்சினைகளும் உண்டாகும்.

சிலருக்கு கருத்து வேறுபாடுகள் குடும்பத்திற்குள் ஏற்படும்.

உடல்நிலையில் அக்கறையாக இருப்பது நல்லது.

எக்காரணத்தைக் கொண்டும் யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். பணம் நிறைய வச்சிருக்கீங்க என்றால் தாராளமாக ஜாமீன் போடுங்க.

விரயச்சனி ,விரயத்தை கொடுக்க, வீட்டு வாசலில், வீல் சேரில் விசிறியை வீசி கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

ஜாமீன் போட்டால், ஜமீன் ,ஜாமீன் வாங்க கூடிய நிலைமை ஏற்பட்டுவிடும். கவனம்.

குடும்ப உறவுகள் பற்றியும் ,நண்பர்கள் பற்றியும், உண்மையான உறவுகளை காட்டிக்கொடுக்கும் காலம் இது.

வண்டி வாகனங்களில் இரவு நேர பயணத்தையும் ,வேகமாக செல்வதையும் தவிர்க்கவும்.

சிறு குழந்தைகள் உடல் நலனில் எச்சரிக்கை தேவை.

மது, மாது ,சூது இவற்றில் கவனமுடனிருப்பது நல்லது. இல்லாவிட்டால் இவற்றால் அவமானப்பட கூடிய நிலை ஏற்படும்.

Share market ,shakeஐ கொடுக்கும் என்பதால் அதிலிருந்து சோக்காக விலகி விடுவதான் நல்லது.

உங்கள் சுய ஜாதகத்தில் தசாபுக்திகள் சரியில்லை என்றால் சிலருக்கு பொருளாதார நெருக்கடி , கோர்ட் கேஸ் என்று அலைய நேரிடும்.

யார் மீதும் பெரிய அளவில் நம்பிக்கை வைக்க வேண்டாம்.

இறைவனை மட்டும் சரணாகதி ஆக பிடித்துக்கொள்ளுங்கள்.

விரையம் என்ற தமிழ் சொல்லுக்கு தமிழில் பல அர்த்தங்கள் உண்டு.

காசு போனாலும் விரையம்தான்,காதல் என்ற பெயரில் கன்னியின் கற்பு போனாலும் விரையம்தான்.

கடன் கொடுத்துவிட்டு, வாங்கியவன் கம்பி நீட்டி விட்டாலும் விரையம் தான்.

ஏழரைச் சனியில் விரயச் சனியில் மிக அவசியத் தேவை இருந்தால் அன்றி கடன் வாங்கவே வேண்டாம் .

கடன் வாங்கி கடனை அடைக்கவும் வேண்டாம்.கடன்கள் பெருகும் காலகட்டமிது.

பணத்தின் அருமையை உணர வைக்கும் காலம் எது.

உற்றார் ,உறவினர்கள் உதவுவார்களா அல்லது ஊருக்கு மட்டும் தான் உபதேசமா என்று உணரவைக்கும் காலம் இது.

வந்துட்டான்யா வந்துட்டான் என்று வம்புக்கு சென்று Wanted ஆக மாட்டாமல் இருந்தாலே ,வழக்கு இருக்காது. வாழ்க்கையும் வழுக்கி விடாது.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்:::

உங்கள் குலதெய்வத்தை மாதமொருமுறை வழிபட்டு வரவும் .வீட்டில் தினசரி வழிபாடுகளை எப்பொழுதும் போல் மேற்கொள்வது நல்லது.

பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.அனுமன் வழிபாடு ஆனந்தத்தை தரும்.

சனிக்கிழமை காலை சனி ஹோரையில் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.

விநாயகனை வேண்டாமல் வெளியே செல்ல வேண்டாம்.

ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யவும்.

ஓம் நமசிவாய

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More